Daily Archive: December 1, 2018

சென்னையில் பேசுகிறேன்

  அன்புள்ள நண்பர்களுக்கு   சென்னையில் December 1 அன்று நிகழ்விருக்கும் பரியேறும்பெருமாள் படத்தின் பாராட்டுவிழாக்கூட்டத்தில் பேசவிருக்கிறேன். தமிழின் தலைசிறந்த சினிமாக்களில் ஒன்று பரியேறும்பெருமாள். அதை திரையரங்குகளுக்கு அறிவார்ந்த தளத்திலும் விவாதிக்கவேண்டியிருக்கிறது இடம் டிஸ்கவரி புத்தகநிலையம் கேகே நகர் சென்னை நாள் 1-12-2018 பொழுது காலை 9 மணி நண்பர்களை அன்புடன் அழைக்கிறேன்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/115667

‘தகவல் அறியும் உரிமை அல்லது ஏப்ரல் 7’ – சிறுகதை – அனிதா அக்னிஹோத்ரி

  அனிதா அக்னிஹோத்ரி   விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.   தமிழில் சா ராம்குமார்   அலுவலகத்தை விட்டு வீட்டுக்கு திரும்ப வேண்டிய நேரமாயிற்று என்று தோன்றியவுடன் முதலில் வெளியேறியது தண்ணீர் போத்தலும் உணவு அடுக்கும்தான். திரு. கல்லோலின் மனைவி உலகில் வேறு எங்கு கிடைக்கும் தண்ணீரையும் நம்பவில்லை. போத்தலில் அடைக்கப்பட்ட நீர் கூட ஏதாவது குளத்தில் இருந்து தான் எடுக்கப்படுவதாக நம்பிய அவருக்கு மனிதர்கள் மீதும் நம்பிக்கை இருக்கவில்லை. ஆதலால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115518

ஐராவதம் மகாதேவன் – கடிதம்

அஞ்சலி: ஐராவதம் மகாதேவன் பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர் களுக்கு,   வணக்கம் .   திரு.ஐராவதம் மகாதேவன் அவர்களின் அஞ்சலி கட்டுரை படித்தேன்.தமிழ் மொழி ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக இருந்ததை அறிந்து கொண்டேன். மேலும் நவீன தமிழ் இலக்கியத்தை பொது ஜன பத்திரிகை யில் அறிமுகம் செய்ததைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். ஆனால் இப்பேர்பட்ட அறிஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 40 பேர்தான் என்றும் அதிலும் 30 பேர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115643

சிதைவு -கடிதங்கள்

  சிதைவு -அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெயமோகன் சார்,   வங்காள எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரியின் “சிதைவில்” மொத்த கதையும் ஒரு உச்சகட்ட சம்பவத்தின் மீது நிற்பது போன்று படிக்கும்போது உணர்ந்தேன். ஆனால் அதின் பாத்திரங்களான சிவாஜி அவன் குடும்பத்தினர் சோர்வாக உணர்ந்த போது….அவர்களுக்கு அப்படிதான் இருக்கும், உச்சகட்டங்களை எதிர்பார்த்து எதிர்பார்த்து வந்த விழிப்பும் பயமுமாய் ஒரு வருடம் ஒட்டியபின் வந்த சோர்வு…. அது அப்படித்தானே என்ற எண்ணமும் வந்தது.ஆதலால்தான் ஸ்மிதா கிளம்புகிறாள். கதை முழுதும் உடம்புகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115645

ஒரு முதல்கடிதம்

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். இந்த கடிதத்தை எழுதுவதற்கு இரண்டு நோக்கங்கள். உங்களைபல சந்திப்புகளில் பார்த்திருந்தும் உங்களிடம் என்னை சரியாக அறிமுகம்                              செய்துகொண்டதில்லை பொது சந்திப்புகளில் நான் பேசுவதற்கு தயங்குபவன். என்திரையுலக பயணத்தின் ஆரம்பத்தில் இருக்கிறேன். நான் தயாரித்து-இயக்கிய குறும்படம்”தொப்பி” பற்றியும் உங்களிடம் சொல்ல நினைத்தேன். பன்னிரண்டு வருடங்கள் finance consulting company  ஒன்றில்  வேலை செய்துவிட்டு போன வருடம் வெளியே வந்தேன். கடந்த ஒரு வருடமாக independent filmmaker / travel photographer ஆக ஜீவித்து கொண்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த, என் சிந்தனையில் பெரும் செல்வாக்கை செலுத்திய எழுத்துக்கள், உங்களுடையவை. தமிழ் இலக்கியத்தினுள் நான் முப்பது வயதில் தான் நுழைந்தேன், ஏழாம் உலகம் வழியாக. ஏறத்தாழ அதே சமயத்தில் தான் தமிழில் படிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த ஏழு வருடங்களாக உங்களுடைய தீவிர வாசகனாக இருந்திருக்கிறேன். வெண்முரசை மெதுவாக (சற்று பிந்தியே) வாசித்து வருகிறேன். மாமலரில் இப்பொழுது. புனைவுகளுக்கு அப்பால், உங்களின் அரசியல் நோக்கு,  வரலாறு/மதம்  பற்றிய கட்டுரைகள், மற்றும் பயணக்கட்டுரைகள் என்னை மிகவும் பாதித்திருக்கின்றன. உங்கள் எழுத்துக்கள்  என் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114900

கிருத்திகா- கடிதம்

கிருத்திகா,சுகந்தி சுப்ரமணியம் நினைவஞ்சலி   கிருத்திகா:அஞ்சலி அன்புள்ள ஜெயமாகன் சார்,   இன்று உங்களின் தளத்தில் சில அஞ்சலி குறிப்புகளை படித்தபோது எழுத்தாளர் கிருத்திகாவிற்கான அஞ்சலி குறிப்பை படித்தேன் . எனக்கு மிகவும் பிடித்த பெண்களின் மூன்று பெயர்களான செல்சியா, தேவி, கிருத்திகா எண்ணும் பெயர்களில் ஒரு பெயர் எழுத்தாளர் வரிசையில் உள்ளது என்பதே மிகவும் மனகிளர்ச்சியை அளித்தது. ஆனால் அவரது இயற்பெயர் மதுரம் .இனிப்பு.கிருத்திகா அவர்களின் எந்த நூல்களையும் நான் படித்ததில்லை.அவரின் பெயரையே இப்போதுதான் கேள்விபடுகிறேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115577