Monthly Archive: December 2018

விஷ்ணுபுரம் அமைப்பின் கருத்தியல் என்ன?

    விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்   அன்புள்ள ஜெயமோகன்,   விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்துவிட்டு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் மீண்டு வந்தேன். அற்புதமான நிகழ்வு. மகத்தான நிகழ்வு. அத்தனை நண்பர்களும் இலக்கியம் மீதும், இலட்சியவாதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். சென்ற இடமெல்லாம் இலக்கியமே பேசப்பட்டது. ஆசிரியர்களின் பெயர்களும் நூல்களின் பெயர்களும் காதில்விழுந்துகொண்டே இருந்தன.   ஆனால் நான் திரும்பிவந்து பேசியபோது என் இடதுசாரி நண்பர்கள் பலர் நீங்கள் ஒரு வலதுசாரிக்குழு என்று சொன்னார்கள். ஐடியாலஜி இல்லாமல் ஒரு தரப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116632/

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-14

  விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம் அன்பின் ஜெ..   விஷ்ணுபுர விழா நன்றியுரைகளையே ஒரு தனிப்புத்தகமாகப் போடலாம். அவை ஒரு இயக்க வரலாற்றின் ஆவணங்களாக பிற்காலத்தில் அமையும்.   இம்முறை, அது, பிரதமன் சிறுகதையை நினைவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116651/

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-13

  விஷ்ணுபுரம் விருதுவிழா:தேவிபாரதி உரை விஷ்ணுபுரம் விழா: அனிதா அக்னிஹோத்ரி உரை விஷ்ணுபுரம் விழா: மதுபால் உரை விஷ்ணுபுரம் விருது விழா : சுனீல் கிருஷ்ணன் உரை விஷ்ணுபுரம் விருதுவிழா:ராஜ் கௌதமன் உரை விஷ்ணுபுரம் விழா உரை – ஜெயமோகன் விஷ்ணுபுரம் விழா ஸ்டாலின் ராஜாங்கம் அன்புள்ள ஜெ.     தங்களை பலமுறை மேடையில், சக வாசகர்கள் சூழ நின்று பேசிக் கொண்டிருக்க மௌனமாக நின்று கேட்டுவிட்டு அப்படியே கமுக்கமாக திரும்பிவிடுவேன். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். விஷ்ணுபுரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116596/

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-12

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   வணக்கம்.   என்றும் நினைவில் இருக்கும் இரு நாட்களாக எனக்கே எனக்கானதாக ஒரு புதிய அனுபவமாக இருந்தது – நான் படித்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களை நேரில் காணும் ஏற்பட்ட ஒரு மெல்லிய தயக்கம் கலந்த மகிழ்ச்சி சொல்லில் விவரிக்க முடியாதது – தேவதேவன் அத்தனை அமளியில் வாசித்து கொண்டிருந்தார் . சற்று தயங்கியபடி உங்களிடம் பேசத் தொடங்கிய போது நீங்கள் அடையாளம் கண்டு கொண்டது மகிழ்ச்சியை அளித்தது.   சரவணகார்த்திகேயன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116594/

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி -கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்குச் சாகித்ய அக்காதமி விருது எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி -கடிதங்கள்   அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.   நலத்தையே விழைகிறேன்.   திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு சாகித்ய அகாடமி  விருது கிடைத்தமை பற்றி உங்களுடைய பதிவு மன நிறைவையும் மகிழ்ச்சியும் அளித்தது. எஸ்.ரா. அவர்களை நெகிழ்ச்சியோடு அல்லாமல் வேறு எவ்வகையிலும் எண்ண இயலாது. ஏனென்றால் அவர் எழுத்தின் தாக்கம் அவ்வாறு.     விகடனின் வாயிலாகவே அவர் எழுத்து எனக்கு அறிமுகம். அதில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116319/

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7

குருக்ஷேத்ரத்திற்குத் தென்கிழக்கே அமைந்திருந்த சிறிய எல்லைக்காவல் கோட்டையாகிய சிபிரம் அங்கநாட்டுப் படைகளின் தலைமையிடமாக மாறியிருந்தது. மண்குழைத்து கட்டப்பட்ட உயரமற்ற கோட்டையைச் சூழ்ந்திருந்த குறுங்காட்டில் படைகள் பாடிவீடுகளை அமைத்து பதினேழு நாட்களாக தங்கியிருந்தன. அவ்விரவில் படையினர் எவருமே துயில்கொண்டிருக்கவில்லை. பீஷ்ம பிதாமகர் களம்பட்ட செய்தி முந்தைய நாள் உச்சிப்பொழுதிலேயே அவர்களை வந்தடைந்துவிட்டிருந்தது. அஸ்தினபுரியின் அரசரிடமிருந்து போருக்கான அழைப்பு வரக்கூடுமென்று படையெங்கும் பேச்சு பரவியது. படைவீரர்கள் சிறு குழுக்களாக அமர்ந்து உளஎழுச்சியுடன் அதையே பேசிக்கொண்டிருந்தார்கள். பதினேழு நாட்களாக ஒவ்வொரு நாளுமென …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116592/

வினவும் கலை

  விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் இனிய ஜெயம்   பொதுவாக விழாக்களில் நான் கேள்வி எழுப்பும் முறைமை சார்ந்து ,பாராட்டுக்களும் கண்டனங்களும் சரி விகிதத்தில்  எப்போதும் என்னை வந்து சேரும் .இம்முறையும் அவ்வாறே .   எனது கேள்விகளில் அதை முன்வைக்கும் முறையில் எழும் அடிப்படை சிக்கல்  .அந்த கேள்வி பிறருக்காகவோ ,சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களை ‘குஷிப்படுத்த ‘ வோ எழுப்படும் கேள்விஅல்ல என்பதில் இருந்தே துவங்குகிறது . புனைவின் வழி எழும் எனது கேள்வி எதுவோ, அது எழுந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116573/

விஷ்ணுபுரம்விழா கடிதங்கள்-11

    விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் அன்புள்ள ஜெ   விஷ்ணுபுரம் விருதுவிழா முடித்து வீட்டுக்கு வந்தபின்னர் நினைத்துக்கொண்டே இருந்தேன். இந்தவகையான பெரிய விழாக்களில் நான் முன்பு கலந்துகொண்டதில்லை. தமிழில் இவ்வகையான பெரிய இலக்கியவிழாக்கள் இல்லை என நினைக்கிறேன். இப்படிப்பட்ட இலக்கியவிழாக்களை நம்மவர் சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. சின்ன விழாக்களில் கூடி அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதுபோல நினைத்துக்கொள்கிறார்கள். இந்த மாதிரி விழாக்களில் நிகழ்வதை அவர்களால் ஊகிக்கமுடியவில்லை. வந்தபின் ஆச்சரியப்படுகிறார்கள்.   வெளியே சிலர் இந்த விழாவிலுள்ள ஒழுங்கு ஒரு எதிர்மறை அம்சமாக சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116566/

விஷ்ணுபுரம் விழா:கடிதங்கள் 10

  அன்பின் திரு ஜெயமோகன் .   மிகவும் சிறப்பான விழா . பங்குகொள்ள அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றி .. அனைவரும் பங்குகொள்ளும் படைப்பாளிகளை வாசித்துவிட்டு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது . எனது உரையாடல் பகுதி தாண்டியும் அடுத்த நாள் கிளம்பும் வரை நிறைய பேர் நேரில் சந்தித்து எனது படைப்புகளை குறித்து உரையாடல் நிகழ்த்தியது மனதிற்கு உற்காசமாகவும் , மகிழ்ச்சியாகவும் இருந்தது . அடுத்த ஆண்டும் நிச்சயம் கலந்துக்கொள்வேன் .   நன்றி நரன்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116526/

‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-6

இந்தப் போர்க்களம் இப்போது துயிலால் முற்றிலும் நிரம்பியிருக்கிறது. ஓய்ந்த உடல்களின் மீது மூதாதையரின் நெடுமூச்சுபோல புழுதி மணமும் தழை மணமும் கலந்து வீசிச் செல்கிறது. பந்தங்களின் சுடர்களுடனும் கூடாரங்களின் கூரைப்பரப்புகளுடனும், கொடிகளுடனும் அது விளையாடிச் செல்கிறது. இங்கே என்னைச் சூழ்ந்து களத்தின் ஒலிகள் நிறைந்திருக்கின்றன. இக்களம் ஒருபோதும் ஒலியிலாமல் ஆவதில்லை. போர் நிகழ்கையில் இது கோல் விழும் முரசுபோல் ஒலி கொப்பளிக்கிறது. போரிலாதபோது காற்று புகுந்து கார்வையென்றாகும் முரசின் உட்புறம் போலுள்ளது. மூச்சொலிகள், பந்தங்களின் சுடர்கள் படபடக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116313/

Older posts «