Monthly Archive: December 2018

நிலவொளியில் – அனிதா அக்னிஹோத்ரி

அனிதா அக்னிஹோத்ரி   விஷ்ணுபுரம் விருதுவிழாவின் சிறப்பு விருந்தினரான வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி எழுதிய சிறுகதை.   தமிழில் – சிறில் அலெக்ஸ்   ஆக, உனக்கு தூக்கம் வரல? அதனால என்ன? இராத்திரி ஒண்ணேகால் மணிதானே ஆகுது! கூடவே.. இந்த நகரத்துல இரவுண்ணு ஒண்ணு கிடையாது. இது மும்பை. எல்லா நேரமுமே பகல்தான் இங்க – விகிதம்தான் வேற‌ வேற.   சத்தம் அதிகம். ஓ. ஆனா கல்கத்தாவுல கடகடன்னு ஓடுற டிராம், ஹார்ன் அடிக்கிற பஸ், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115772

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-2

   ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1 2. மாற்றுப்பார்வையின் பின்னணி   ஓசைஒழுங்குள்ள சொற்றொடர்களால் ஆன கோஷங்களுக்கு பொதுச்சமூகத்தில் வலுவான செல்வாக்கை உருவாக்கும் ஆற்றல் எப்போதும் உண்டு. அதிலும் தமிழகம்போல பரப்பரசியலே அனைத்துக் கருத்தியல்களையும் முடிவுசெய்யும் சூழலில் வெடிப்புறச் சொல்லப்படும் கோஷங்கள் காலப்போக்கில் மையக்கருத்துக்களாக மறுப்பில்லாதபடி நிலைநின்றுவிடுகின்றன. அதிலொன்று ‘சாதியில்லா சங்ககாலத்தில் இருந்து இன்று சாதிச்சங்க காலத்தை நோக்கி வந்துள்ளோம்’ என்பது. இன்று இது பொதுவான நம்பிக்கை. சங்ககாலத்தில் சாதியடுக்குமுறை இருக்கவில்லை, அது பின்னாளில் வந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115638

விஷ்ணுபுரம் விழா விருந்தினர் -7, கலைச்செல்வி

  இன்று எழுதவரும் பெண்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்பது பெண்ணின் எழுத்துமுறையும் களங்களும் முன்னரே வகுக்கப்பட்டுள்ளன என்பதுதான். எப்படி மரபான குடும்பச்சூழலில் பெண்ணின் இடமும் புழங்குமுறையும் அறுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளனவோ அப்படி.   இன்று ஒரு பெண்ணெழுத்தாளர் வேறுவழியில்லாமல் இரண்டு முகங்களையெ சூடிக்கொள்ள வேண்டியிருக்கிறது. குடும்பச்சூழலை எழுதுபவர். அல்லது பெண்ணியர். முன்னவர் பழைமைவாதி, பின்னவர் புரட்சிக்காரர் அல்லது கலகக்காரர்.   முன்னவருக்கு பின்னவர் நேர் எதிரி என்பதனால் உண்மையில் முன்னவரே பின்னவரை வரையறைசெய்கிறார். பெண்ணியம் என்றால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115880

ராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-1

    1. நான்காவது கோணம்   இந்திய வரலாறு என்று நாம் சொல்வது சென்ற இருநூறு ஆண்டுகளாக எழுதி உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்கு முன்பாக இங்கு இருந்தது புராண வரலாற்று எழுத்துமுறைதான்.  ‘விழுமியங்களை ஒட்டி புனைந்து உருவாக்கப்படும் வரலாற்றுக்கதைகளின் தொகுப்பு’ என்று புராணத்தை சொல்லலாம். நம்பிக்கைகளும் தொன்மங்களும் ஆழ்படிமங்களும் வரலாற்று நிகழ்வுகளுடன் கலந்து அதை உருவாக்குகின்றன .நெடுங்காலம் நாம் புராண வரலாற்றையே நம்முடையதென்று கொண்டிருந்தோம். காலவரையறை,கருத்து வரையறை ,சூழல் வரையறை ஆகிய மூன்றும் புராண வரலாற்றெழுத்தில்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115585

அண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்

விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால் விஷ்ணுபுரம் விருதுவிழா 2018 ல் சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ளும் மதுபால் எழுதிய மலையாளக் கதை தமிழாக்கம்  அழகியமணவாளன்   எங்கெல்லாம் மனதில் நன்மையுள்ளதோ அங்கே குணத்தில் அழகு உள்ளது எப்போது குணத்தில் அழகுள்ளதோ அப்போது வீடுகளில் இசைவு உள்ளது எப்போது வீடுகளில் இசைவுள்ளதோ அப்போது நாட்டில் ஒழுங்குள்ளது எப்போது நாட்டில் ஒழுங்குள்ளதோ அப்போது உலகில் அமைதி உஉள்ளது   நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்கள் என்றால் உயிர்ப்புடன் உள்ளவையெல்லாம் உங்களை பின்தொடரும்,இருட்டில் இருக்கிறீர்களென்றால் உங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116050

புயல் -கடிதங்கள்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,   வணக்கம், நான் உங்கள் வாசகன், பட்டுகோட்டை பகுதியயை  சேர்ந்தவன் ,   பேரழவில் சிக்கி  வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும்  எளிய  விவசாய  மக்கள்  படும் துயர்  உங்களுக்கு  தெரிந்துருக்கும் .  டெல்ட்டா  மக்களின் துயர் இன்னும்  தமிழக மக்களை முழுமையாக சென்றடையவில்லை என்பது என்  கருத்து .   உங்கள் தளத்தில் இதை பற்றி  எழுத  வேண்டும் என்பதே  என் வேண்டுகோள் . இது அவர்களுக்கு கிடைக்கும் உதவியை அதிகரிக்க செய்யலாம் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115473

விஷ்ணுபுரம் விருந்தினர் -6, சுனீல் கிருஷ்ணன்

2017 ஆம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார்  விருதை வென்றதன் வழியாக பரவலாக அறியப்பட்டவர் சுனீல் கிருஷ்ணன். அவருடைய அம்புப்படுக்கை என்னும் சிறுகதைத் தொகுதி இன்று பரவலாக வாசிக்கப்படுகிறது. பதாகை இணைய இதழின் ஆசிரியர்குழுவில் இருக்கிறார். இளம் படைப்பா ளிகளைப்பற்றி அவர் எழுதிய கட்டுரைகளும் அவர்களின் நேர்காணல்களும் அடங்கிய தொகுதி வெளிவரவிருக்கிறது   பலவகையிலும் சுனீல் கிருஷ்ணன் அவருடைய சமகாலப் படைப்பாளிகளிலிருந்து முற்றிலும் விலகி நிற்கிறார். இத்தகைய முழுமையான தனித்தன்மைகளே படைப்பாளிகளை உருவாக்குகின்றன. இத்தகைய தனித்தன்மைகள் முதல் எதிர்மறையாகவே பார்க்கப்படும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115877

‘குகை’ -சிறுகதை -4

11

[ 7 ] அந்தக்குகையில் அவ்வப்போது நான் வெள்ளையர்களைப்பார்த்து வந்தேன். பெரும்பாலும் அனைவருமே பழைய பிரிட்டிஷ் கால உடைகளை அணிந்திருந்தார்கள் .அனைவருமே அங்கே நெடுங்காலமாக உலவும் வழக்கம் கொண்டவர்கள் என்பது அங்கே சேற்றில் நடப்பதற்குரிய முழங்கால் வரை வரும் ரப்பர் சப்பாத்துகளை கையுறைகலையும் அணிந்திருந்தமையில் இருந்து தெரிந்தது. பெண்கள் கால்களில் நீண்ட சப்பாத்துகளை அணிந்து வெண்பட்டால் ஆன கையுறைகளை அணிந்திருந்தனர். அவர்கள் இந்த குகைவழிக்குள் இறங்கும் இடங்களில் இவை வைக்கப்பட்டிருக்கலாம்.   பொதுவாக அங்கு நான் பார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115763

விஷ்ணுபுரம் விருந்தினர் -5, சரவணன் சந்திரன்

    முகநூல் உருவானபின்னர் தமிழிலக்கியத்தில் ஒரு புதிய அலை எழுந்தது. அனுபவங்களை குறைந்த சொற்களில், விவரணைகள் இல்லாமல், நேரடியாகச் சொல்லும் நடையும் உள்மடிப்புகளோ குறியீட்டுத்தளமோ ஏதுமில்லாமல் கதையின் மேல்தளம் வழியாகவே தொடர்புறுத்தும் கட்டமைப்பும் கொண்ட படைப்புக்கள் இவை.   முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான சு.வேணுகோபால் முதல் எஸ்.செந்தில்குமார் வரையிலானவர்களின் படைப்புக்களில் இருந்த நுண்ணிய புறவுலகச் செய்திகளின் விரிவு இவர்களிடம் இருக்கவில்லை. அடிப்படை உணர்ச்சிகளை விவரிக்கையில் அந்தத் தகவல்களை குறியீடுகளாக ஆக்கவும் முயலவில்லை. முகநூலில் எழுதும் குறிப்புகளால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115868

வள்ளலார்,ராஜ்கௌதமன் -போகன் சங்கர்

  ஒரு தனிமனிதரின் பாடல்கள் ஏனித்தனை பாரதூரமான விளைவுகளை உருவாக்கின என்பதை குறிப்பிடத்தக்க தலித் வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ராஜ் கவுதமன் தனது நூலான ‘கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக ‘என்ற நூலில் விவரிக்கிறார்.அவர் ஏறக்குறைய வள்ளலாரை சாதி சமயத்துக்கு எதிராக எழுந்த முதல் குரல் என்று வகைப்படுத்துகிறார். ஆகவே இந்த கூச்சல் வெறுமனே ஒரு தனிமனிதரின் ஆன்மீகப் பிரமைகள் குறித்தான  கூக்குரல்கள் அல்ல என்று சொல்கிறார். அது ஒரு நீண்ட ஒரு வரலாற்றுக்கண்ணியை  உடைப்பது  தொடர்பானது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/116058

Older posts «