Monthly Archive: November 2018

ராஜ் கௌதமனை அறிய…

    ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   இனிய ஜெயம்   மார்க்சிய உரையாடல்களில் இரண்டு வகைமைகளை காண்கிறேன் .ஒன்று கோசாம்பி போன்றோர் முன்வைக்கும் செவ்வியல் மார்க்சியம் .மற்றொன்று ரொமிலா தாப்பர் போன்றோர் முன்னெடுக்கும் [இங்கு இருப்பவை அனைத்துமே முரண்கள் ,முரண்களன்றி வேறில்லை எனும் நோக்கு ] உடைப்புவாத மார்க்சியம் . தமிழில் பெரும்பாலும் காணக் கிடைப்பது இரண்டாம் வகை கம்பு சுற்றல்களே .   இந்த இரண்டாம் நிலை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115573

தமிழர்களின் வரலாறு இருண்டதா -கடிதங்கள்

தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?   திரு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம் .தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா? கட்டுரையை படித்தேன் .உங்களின் எதிர்வினை அருமை . உங்கள் கட்டுரையை படித்தபோது தான் மாற்று மதத்தினர் இதுவரை மேற்கொண்ட ஹிந்து மத கலாச்சாரங்கள் குறித்த திரிபு வாதங்களை ஐயமின்றி புரிந்து கொள்ள முடிந்தது .மேலும் தற்போதைய பத்திரிக்கை  செய்திகளின் படி அந்த உலகளாவிய கருத்தரங்கம்  தள்ளிவைக்கப்பட்டதாக St.Joseph’s  college trichy முதல்வர் ஆரோக்கியசாமி தெரிவித்திருக்கிறார் .அதற்க்கு அவர் மத்திய அமைச்சர் ராஜா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115601

பிரதமன் -கடிதங்கள்-3

  பிரதமன்[சிறுகதை] அன்பின் ஜெ,   வணக்கம்.எப்படி இருக்கிறீர்கள்? கடிதம் எழுதி நீண்ட நாட்களாகின்றன.ஆனால் எல்லாவற்றையும் வாசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.     பிரதமன்’ சிறுகதை   பற்றி:     ஆசானின் மனக்கணக்குகளே இதன் மையம் என்றெண்ணுகிறேன். அவர் மனதுக்குள் எப்பொழுதும் கணக்கு ஓடிக் கொண்டே இருக்கு. அவர் மனதுக்கு மட்டுமே அது தெரியும் .அவர் வாழ்வது தனி உலகு அவருக்கு வாயும் இல்லை காதும் இல்லை .அவர் மனதின் கணக்குகள் மட்டும் உண்மை .இச்சிறுகதையில் சமையலையும்,உணவுகளையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115313

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-80

துண்டிகன் விழித்துக்கொண்டபோது தன் ஊரில், கோதுமை வயல்களின் நடுவே கட்டப்பட்டிருந்த காவல்மாடத்தின் வைக்கோல் படுக்கையில் படுத்திருந்தான். முற்றத்தொடங்கியிருந்த கோதுமை மணிகளின் மணமும் சிலுசிலுவென்ற ஒலியும் காற்றில் கலந்து வந்தன. கூகையின் ஓசையும் மிக அப்பால் காட்டுக்குள் காற்று கடந்துசெல்லும் இரைச்சலும் கேட்டன. அவன் எழமுயன்றபோதுதான் தன்னிலை உணர்ந்தான். மருத்துவநிலையில் தரையிலிட்ட ஈச்சைப்பாயின்மேல் அவன் படுத்திருந்தான். அவன் கால்கள் இரண்டிலும் எடைமிக்க மரவுரிக் கட்டுகள் இருந்தன. வலதுதோளிலும் மரவுரிக்கட்டு மெழுகிட்டு இறுக்கப்பட்டிருந்தது. கழுத்து மரச்சிம்புகள் வைத்து கட்டப்பட்டு உரல்போலிருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115480

ஊடுருவல்கள்,சூறையாடல்கள்

அவ்வப்போது சந்தித்துப் பேசும் மார்க்ஸியவாதியான மலையாள நண்பர் சென்டினில் பழங்குடிகளைச் சந்திக்கச் சென்ற அமெரிக்க திருட்டு மதமாற்றக்க்குழு உறுப்பினரான ஆலன் சௌ [Allen Chau] வை  ‘தீரன்’ என்றார். நண்பர் ஆழமான கிறித்தவ நம்பிக்கை கொண்டவரும்கூட. அவர் பார்வையில் கிறிஸ்தவம் கம்யூனிசத்தின் மேம்பட்ட வடிவம்.   ஆலன் சௌ இந்திய அரசின் சட்டங்களை மீறியவர், ஆகவே குற்றவாளி என்று நான் சொன்னேன். மேலும் உலகமெங்கும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் வழியாக மாபெரும் மானுடப்பேரழிவை உருவாக்கிய ஒரு அமைப்பின் பிரதிநிதி, அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115487

லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்

  ஒரே தொகுப்பாக மணிவண்ணனின் இத்தனை கவிதைகளைப் பார்க்கிறேன். பெரும்பாலான கவிதைகளில் ததும்பாத நெகிழ்ச்சியும் இயல்பான மொழியும் அமைந்துள்ளன   இருவகை கவிதைகள்.   உணர்வெழுச்சியில்லாமல் பெய்யுமா மழை ? ஹோவென இரைந்து விழுவது ஒரு தளம் பின்னர் சொட்டுச் சொட்டாக வெதும்புதல் மற்றொரு தளம் உணர் நரம்புகளின் அனைத்து பாதையையும் நனைக்கும் தூறல் அத்தனையும் வசப்படா சொற்கள் சிறைக்குள்ளிருந்து மழை பார்ப்பது போலிருக்கிறது எனது உடலுக்குள் நானிப்போது வசிப்பது இத்தனை சொற்களில் எத்தனை சினையுறும் ? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115040

வெறுப்பின் வலை -கடிதங்கள்

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு… சினிமா பற்றி நீங்கள் கேட்டவை கீழ்மையின் சொற்கள்   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வெறுப்பும் சமுக ஊடகங்களும் நமது வக்கிரம் பற்றிய சூர்யாவின் கட்டுரையில் அவரின் ஆதங்கம் புரிகிறது. அவர் வாய் திறக்காத ஓன்று என்னவென்றால் இதற்க்கு மூலமாய் இருப்பது,இருந்தது பிரபலங்கள், பிரபல அரசியல் கட்சிகள், அனைத்து மத தீவிரவாத கும்பல்கள், ஜாதி வெறி பிடித்த கும்பல்கள் சங்கங்கள்,வியாபார கார்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் ஐ.டி செல்கள்தான். தன்னை தனது கொள்கையை புகழ் பாடவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115383

ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்

  ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   ஜெ அவர்களுக்கு   வணக்கம்.   விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பைத் தொடர்ந்துதான் விருதாளர் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்வதும் அவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குவதும் வழக்கம்.  அவ்வகையில் இம்முறை ராஜ் கௌதமன் எனும் பெயரே ஒரு நவநாகரீகயுவனுக்குரிய வசீகரத்துடன் இருந்தது.  அவரது பால்ய மற்றும் மத்தியக்கால சுயசரிதை நாவல்கள் கிடைக்க சாத்தியப்படுவதற்கு முன்பாக அதன் தொடர்ச்சியாக வந்திருந்த மூன்றாம் பாகம் கைவசப்பட்டது.  ராஜ் கௌதமன் பிள்ளைப்பருவத்திலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115590

ஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2

ஆனந்தியின் அப்பா கதை அன்புள்ள ஜெயமோகன் சார்,   “ஆனந்தியின் அப்பா” சிறுகதை முதலில் படிக்கும்போது புரியவில்லை.ஒரு நான் லீனியர் காதல் திரைக்கதையை வாசித்தது போல் இருந்தது. பிறகு திரும்ப படித்தபோது அனைத்தும் உள்ளிருந்து ஒரு நீரூற்றுபோல் கிளம்பியது. அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த ஒரு காதல் கதை என தாராளமாக் சொல்லலாம். அப்பாவை மகள்போல் நேசிப்பது வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன். மகளை கொஞ்சும்போது மகள் போலவே வயதான ஒருத்தி வேண்டும் என்றுதான் அனைத்து ஆண்மகன்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115454

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79

யுதிஷ்டிரர் நின்று பீஷ்மரின் படுகளத்தை நோக்கி “அது ஓர் விண்ணூர்திபோல் உள்ளது. அவரை அழைத்துச்செல்ல வந்தது” என்றார். சுபாகு “ஆம்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” என்றார். பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். “எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரர் அவனை வெறுமனே நோக்கிவிட்டு முன்னால் நடந்தார். அவர்கள் பீஷ்மரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115443

Older posts «

» Newer posts