Daily Archive: November 27, 2018

ஊடுருவல்கள்,சூறையாடல்கள்

அவ்வப்போது சந்தித்துப் பேசும் மார்க்ஸியவாதியான மலையாள நண்பர் சென்டினில் பழங்குடிகளைச் சந்திக்கச் சென்ற அமெரிக்க திருட்டு மதமாற்றக்க்குழு உறுப்பினரான ஆலன் சௌ [Allen Chau] வை  ‘தீரன்’ என்றார். நண்பர் ஆழமான கிறித்தவ நம்பிக்கை கொண்டவரும்கூட. அவர் பார்வையில் கிறிஸ்தவம் கம்யூனிசத்தின் மேம்பட்ட வடிவம்.   ஆலன் சௌ இந்திய அரசின் சட்டங்களை மீறியவர், ஆகவே குற்றவாளி என்று நான் சொன்னேன். மேலும் உலகமெங்கும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் வழியாக மாபெரும் மானுடப்பேரழிவை உருவாக்கிய ஒரு அமைப்பின் பிரதிநிதி, அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115487/

லக்ஷ்மி மணிவண்ணனின் கவிதைகள்

  ஒரே தொகுப்பாக மணிவண்ணனின் இத்தனை கவிதைகளைப் பார்க்கிறேன். பெரும்பாலான கவிதைகளில் ததும்பாத நெகிழ்ச்சியும் இயல்பான மொழியும் அமைந்துள்ளன   இருவகை கவிதைகள்.   உணர்வெழுச்சியில்லாமல் பெய்யுமா மழை ? ஹோவென இரைந்து விழுவது ஒரு தளம் பின்னர் சொட்டுச் சொட்டாக வெதும்புதல் மற்றொரு தளம் உணர் நரம்புகளின் அனைத்து பாதையையும் நனைக்கும் தூறல் அத்தனையும் வசப்படா சொற்கள் சிறைக்குள்ளிருந்து மழை பார்ப்பது போலிருக்கிறது எனது உடலுக்குள் நானிப்போது வசிப்பது இத்தனை சொற்களில் எத்தனை சினையுறும் ? …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115040/

வெறுப்பின் வலை -கடிதங்கள்

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு… சினிமா பற்றி நீங்கள் கேட்டவை கீழ்மையின் சொற்கள்   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வெறுப்பும் சமுக ஊடகங்களும் நமது வக்கிரம் பற்றிய சூர்யாவின் கட்டுரையில் அவரின் ஆதங்கம் புரிகிறது. அவர் வாய் திறக்காத ஓன்று என்னவென்றால் இதற்க்கு மூலமாய் இருப்பது,இருந்தது பிரபலங்கள், பிரபல அரசியல் கட்சிகள், அனைத்து மத தீவிரவாத கும்பல்கள், ஜாதி வெறி பிடித்த கும்பல்கள் சங்கங்கள்,வியாபார கார்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் ஐ.டி செல்கள்தான். தன்னை தனது கொள்கையை புகழ் பாடவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115383/

ராஜ் கௌதமன் ‘லண்டனில் சிலுவைராஜ்’ -மணிமாறன்

  ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   ஜெ அவர்களுக்கு   வணக்கம்.   விஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பைத் தொடர்ந்துதான் விருதாளர் பற்றி ஓரளவாவது அறிந்து கொள்வதும் அவரது படைப்புகளை வாசிக்கத் தொடங்குவதும் வழக்கம்.  அவ்வகையில் இம்முறை ராஜ் கௌதமன் எனும் பெயரே ஒரு நவநாகரீகயுவனுக்குரிய வசீகரத்துடன் இருந்தது.  அவரது பால்ய மற்றும் மத்தியக்கால சுயசரிதை நாவல்கள் கிடைக்க சாத்தியப்படுவதற்கு முன்பாக அதன் தொடர்ச்சியாக வந்திருந்த மூன்றாம் பாகம் கைவசப்பட்டது.  ராஜ் கௌதமன் பிள்ளைப்பருவத்திலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115590/

ஆனந்தியின் அப்பா -கடிதங்கள் 2

ஆனந்தியின் அப்பா கதை அன்புள்ள ஜெயமோகன் சார்,   “ஆனந்தியின் அப்பா” சிறுகதை முதலில் படிக்கும்போது புரியவில்லை.ஒரு நான் லீனியர் காதல் திரைக்கதையை வாசித்தது போல் இருந்தது. பிறகு திரும்ப படித்தபோது அனைத்தும் உள்ளிருந்து ஒரு நீரூற்றுபோல் கிளம்பியது. அப்பாவுக்கும் மகளுக்கும் நடந்த ஒரு காதல் கதை என தாராளமாக் சொல்லலாம். அப்பாவை மகள்போல் நேசிப்பது வேறு யாரும் இல்லை என நினைக்கிறேன். மகளை கொஞ்சும்போது மகள் போலவே வயதான ஒருத்தி வேண்டும் என்றுதான் அனைத்து ஆண்மகன்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115454/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79

யுதிஷ்டிரர் நின்று பீஷ்மரின் படுகளத்தை நோக்கி “அது ஓர் விண்ணூர்திபோல் உள்ளது. அவரை அழைத்துச்செல்ல வந்தது” என்றார். சுபாகு “ஆம்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” என்றார். பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா!” என்றார் யுதிஷ்டிரர். “எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரர் அவனை வெறுமனே நோக்கிவிட்டு முன்னால் நடந்தார். அவர்கள் பீஷ்மரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115443/