Daily Archive: November 26, 2018

அஞ்சலி: ஐராவதம் மகாதேவன்

  தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று மறைந்தார்.   ஐராவதம் மகாதேவன் இந்திய ஆட்சிப்பணியில் இருந்தவர். தன் ஆர்வத்தால் தமிழ் மொழி ஆய்விலும் கல்வெட்டு ஆய்விலும் ஈடுபடுத்திக்கொண்டு அத்துறையின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவராக ஆனார். அவரை இத்துறைக்கு ஆற்றுப்படுத்தியவர் வரலாற்றாய்வாளரான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி. இந்த தலைமுறையின் முதன்மையான தொல்வரலாற்றியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள்தான் எனலாம்   சுருக்கமாக அவருடைய பங்களிப்பு என இவ்வாறு தொகுத்துக்கொள்ளலாம். நெடுங்காலம் தமிழகவரலாற்றின் துலங்காப் பகுதியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115581

தமிழர்களின் வரலாறு இருண்டகாலமா?

அன்புள்ள ஜெ,   திருச்சி st. Joseph கல்லூரியில் வரும் 07-dec-2018 அன்று நடைபெற உள்ள ” தமிழ் இலக்கிய பதிவுகளில் பெண் வன் கொடுமைகள்” என்ற கருத்தரங்கம் பற்றி உங்கள் கருத்தென்ன?   விவாத தலைப்புகள் பற்றி தனியாக இணைத்துள்ளேன்.   இதை தமிழ்நாடு bjp யின் H.ராஜா எதிர்க்கிறார். இதனை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்கிறார்.   இது இந்து மதத்தின் மீதான தாக்குதலா?   இதை ஒரு கிறிஸ்தவ நிறுவன தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115500

வாக்கும் தாரையும்

  சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு… சினிமா பற்றி நீங்கள் கேட்டவை கீழ்மையின் சொற்கள்   ஜெ,   வசவையே ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து எல்லாவிதமான விழுமியங்களையும் அடித்து நொறுக்கினால் என்ன நிகழும் என்பதை தமிழகம் கண்டது. அதுவே இப்போது அமெரிக்காவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருமை நிலைக்கு சென்றுவிட்டது. இந்த நிலையை தடுப்பதற்கு ஏற்படுத்தி வைக்கப்பட்ட அனைத்து அரண்களும்(checks and balances) அதீத ஜனநாயகத்தையே ஆயுதமாக்கி(primary elections) தாக்கும் லும்பன்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் வாய்மூடி கிடக்கின்றன அல்லது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115379

ஆனந்தியின் அப்பா- கடிதங்கள்

ஆனந்தியின் அப்பா சிறுகதை   ஹலோ சார், “ஆனந்தியின் அப்பா” இரண்டாம் முறை படித்துவிட்டு எழுதுகிறேன். அப்படி ஒரு சினிமாவை edit செய்ய கதைசொல்லியைத் தூண்டியது எது என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன். அதுபோலவே alzimer இல்லாவிட்டால் ஆனந்தி தன்னுடைய அப்பாவை இந்த அளவுக்கு விரும்பியிருப்பாரா என்றும். ஆனால் ஒன்று, வாசகர்களை அரூபமாகக் கொண்டுபோய் பாத்திரங்களுக்கு நடுவே இறக்கி விட்டு விடுகிறீர்கள். நாங்களும் கதாபாத்திரங்களையும் ஆசிரியனையும் வெகு அருகே தரிசிக்க முடிகிறது. கதைசொல்லிக்கும் மகேஷுக்கும் நடக்கும் உரையாடல் கதையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115451

ரயிலில் கடிதங்கள்-7

ரயிலில்… [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ரயிலில் சிறுகதை வாசித்தேன். அதோடு அதைப்பற்றி வந்துகொண்டிருந்த கடிதங்களையும் வாசித்தேன். ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை அனுபவம். என் வாழ்க்கையனுபவமும் அதேதான்   என் விஷயத்தில் இது உள்ளூர் அரசியல்வாதி. எங்கள் சொந்த நிலம் எட்டு ஏக்கர்/ இன்றைக்கு எட்டுகோடி பெறுமானம் இருக்கும். அதை ஒருவர் ஒருநாள் வந்து வேலிபோட்டு குடியேறி உரிமைகொண்டாடினார். உள்ளூர் அரசியல்வாதியின் ஆள். போலீஸில் போனால் போலி டாகுமெண்ட் ரசீது பட்டா எல்லாம் கொண்டுவந்து காட்டினான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115206

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-78

சுபாகு பாண்டவப் படையின் எல்லையை அடைந்து முதற்காவலரணின் முன் நின்றான். காவலர்தலைவன் வந்து அவனுடைய கணையாழியை வெறுமனே நோக்கிவிட்டு செல்லும்படி தலைவணங்கினான். அவனுக்கு தன் வருகை முன்னரே தெரிந்திருக்கிறது என சுபாகு உணர்ந்தான். படைகளின் நடுவே சென்றபோது தன் மேல் மொய்த்த விழிகளிலிருந்து அங்கிருந்த அனைவருக்குமே தன் வருகை தெரிந்துள்ளது என்று தெளிந்தான். அவர்கள் அவனை வெறுப்புடன் நோக்குவது போலிருந்தது. பின்னர் அது வெறுப்பல்ல, ஒவ்வாமையும் அல்ல, வெறும் வெறிப்பே என தோன்றியது. தங்களை மீறியவற்றின் முன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115433