Daily Archive: November 25, 2018

ராஜ்கௌதமனின் ‘ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்’- சுரேஷ் பிரதீப்

      ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் என்ற இச்சிறுநூல் சங்கப்பாடல்களை வைத்து மேற்கொள்ளப்பட்ட இரு ஆய்வுக்கட்டுரைகளை கொண்டுள்ளது. இவ்விரு கட்டுரைகளுக்கும் அடிப்படையாக அமையும் கருதுகோள் ஒன்றே. சங்கப்பாடல்கள்  அரசவைகளில் பாடி நடிக்கப்பட்டவை என்பது பரவலாக ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. நவீன இலக்கியத்தைப் போல “வாசகன்” என்ற பாத்திரத்தை நோக்கி சங்க இலக்கியம் பேசவில்லை. அது மன்னர்களது அவைகளில் மீண்டும் மீண்டும் பாடப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115264

நிழல்யுத்தம் -கடிதங்கள்

  நிழல் யுத்தம்-அனிதா அக்னிஹோத்ரி அன்புள்ள ஜெ.   வணக்கம். முதலில் இந்த கதையை எங்களுக்காக வெளியிட்டதற்கு நன்றி.   மூலக் கதையின் உயிரை அப்படியே உணர வைத்த சா ராம்குமார் அவர்களுக்கு வணக்கங்கள் பல.   மொழி மாற்றம் அசாதாரணமான விழயம். உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. ராம்குமார் மிகவும் அருமையாக மொழியாக்கம் செய்து அனிதாவின் எண்ணங்களை எங்களுக்குள் ஊட்டிவிட்டார். இம்மாதிரியான எழுத்தாளர்கள் அதிகம் தேவை.   உங்களின் எழுத்துகளும் இப்படியே உயிருடன் மற்ற மொழியினரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115448

காந்தி- பழியும் ஊழும்

அன்புள்ள ஜெ   சமீபத்தில் கோட்ஸேயை ஆதரித்தும் காந்தியை அவர் கொன்றது நியாயம்தான் என்றும் எழுதப்பட்ட பல கட்டுரைகளை வாசித்தேன். இந்தியாவில் கோட்ஸேக்கு நினைவிடம் ஏற்படுத்தவேண்டும், அரசு அமைப்புக்களுக்கு அவருடைய பெயரைப் போடவேண்டும் என்றும் வாதிட்டனர். அவர்களுக்கு ஏராளமானா ஆதரவு இருந்தது.   நான் அவற்றைப் படித்துக்கொண்டிருந்தேன். நான் பிராமணன். ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆகவே முதலில் எனக்கு அந்த வன்முறை ஒவ்வாமையை உருவாக்கியது. ஆனால் தொடர்ந்து வாசிக்க வாசிக்க என் மனம் மாறத்தொடங்கியது. நான் கொஞ்சம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115369

பிரதமன் – கடிதங்கள்-2

பிரதமன் சிறுகதை அன்புள்ள ஜெ,   பிரதமன் கதையின் அனாயாசமான கட்டமைப்பைப் பற்றித்தான் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். மாஸ்டர் என்பவர் எந்தச் சிரமமும் இல்லாமல் மிகச்சிக்கலான அமைப்புக்களை உருவாக்குபவர். எந்தச் சிக்கலும் மேலே தெரியாமல் மிக இயல்பான கலையை உருவாக்குபவர். தி.ஜாவின் பல சிறுகதைகளில் அந்த இயல்பான வீச்சைக் காணமுடியும். செக்காவ் முதல் கார்வர் வரை பலரை உதாரணமாகச் சொல்லமுடியும்   இந்தக்கதையில் அந்த சின்னப்பையன் ஒரு பெண்ணைப் பார்க்கும் இடம் வருகிறது. அது இல்லாவிட்டால் கதையில் என்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115283

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-77

நாள்நிறைவை அறிவிக்கும் முரசுகள் முழங்கிக்கொண்டிருக்க சுபாகு கௌரவப் படைகளின் நடுவிலூடாகச் சென்றான். கௌரவப் படைவீரர்கள் தொடர்ந்து பலநாட்களாக உளச்சோர்வுடன்தான் அந்தியில் பாடிவீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்கள். அன்று அச்சோர்வு மேலும் பலமடங்காக இருக்கும் என அவன் நினைத்திருந்தான். முதலில் பொதுவான நோக்குக்கு அப்படி தோன்றவும் செய்தது. ஆனால் உண்மையில் அவ்வாறல்ல என்று பின்னர் தெரியலாயிற்று. வீரர்கள் ஊக்கமும் மகிழ்வும் கொண்டிருக்கவில்லை. ஆனால் எதிலிருந்தோ போராடி விடுபட்டவர்கள்போல களைப்பும் தளர்வும் கலந்த ஆறுதலை உடலசைவுகளில் வெளிப்படுத்தினார்கள். அது தன் எண்ணம் மட்டும்தானா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115414