Daily Archive: November 24, 2018

ராஜ் கௌதமன் ‘கண்மூடிவழக்கம் எலாம் மண்மூடிப்போக’- கடலூர் சீனு

மாற்றி வையகம் புதுமையுறச்செய்து ,மனிதர்கள்தம்மை அமரர்கள் ஆக்கவே …   சி.சுப்பிரமணிய பாரதி.     மேற்கண்ட வரிகளை எழுதிய இந்த பாரதி ,வேறொரு இடத்தில்  எல்லோரும் அமரநிலை எய்தும் நன்னெறியை இந்தியா உலகினுக்கு அளிக்கும் என்று எழுதுகிறார் . உலகப்பண்பாடு எனும் கருதுகோள் முகிழ்ந்துவரும் சூழலில் ,உலக்குக்கு இந்தியா அளிக்கும் கொடை இதுவாக இருக்கும் என்பது பாரதியின் கனவு . அதாவது அவரது முன்னோடி சிதம்பரம் ராமலிங்கம்பிள்ளை எனும் வடலூர் வள்ளலார் கண்ட கனவின் நீட்சி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115385

கல்லூரியில்…

ஜெமோ,   சமீபத்தில் இளையராஜா அவர்கள் ஒரு கல்லூரியில் நிகழ்த்திய கலந்துரையாடல் உங்களின் படைப்பாற்றலை ஞாபகப்படுத்தியது . அதிலும் குறிப்பாக “இசை படைக்கப்படும்வரை என் அறிதலில் அது இல்லை” என்ற வார்த்தைகள்.   சமீபகாலமாக நீங்கள் கல்லூரிகளுக்குச் செல்வதை தவிர்த்துவிடுவதாக கூறியிருந்தீர்கள்.  இளையராஜா மற்றும் உங்களைப்போன்ற படைப்பூக்கமிக்க ஆசிரியர்கள் குறைந்தபட்சம் வருடத்திற்கு ஒருமுறையாவது கல்லூரிகளுக்குச் செல்வது அவர்களில் சிலரையாவது படைப்பூக்கத்துடன் வைத்திருக்குமென்றே தோன்றுகிறது.   https://muthusitharal.com/2018/09/05/படைப்பும்-கல்வியும்/ அன்புடன் முத்து   அன்புள்ள முத்து   கல்லூரிக்குச் சென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114863

ரயிலில், கடிதங்கள் -6

ரயிலில்… [சிறுகதை] அன்புள்ள ஜெ   ரயிலில் கதையில் ஒரே ஒரு நுட்மபான விஷயத்தைக் கவனித்தேன். என் சொந்தக்கற்பனையாகவும் இருக்கலாம். பெண்ணும் நிலமும் சொத்துதான். நிலத்தை கைப்பற்ற பெண்ணை பிடுங்கிக்கொண்டு போகிறான் தூத்துக்குடிக்காரன். நிலத்தைவிட பெண் மதிப்பு மிக்கது என்பதனால் முத்துசாமி பதறுகிறார். பெண் அழிந்துவிடுகிறள். நிலமும் போய்விடுகிறது. ஆனால் மீண்டும் பெண்ணைக் கட்டிக்கொடுக்க சமானமாக நிலத்தைத்தான் கொடுக்கிறார்   எஸ். சத்யா   அன்புள்ள ஜெ   நேரடியான கதை. ஆனால் உள்ளே காகிதச்சுருள் போல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115220

ஐரோப்பா,திராவிட இயக்கம் -கடிதங்கள்

ஐரோப்பா-7, கலைத்தடுக்கப்பட்ட வரலாறு அன்புடன் திரு . ஜெயமோகன் அவர்களுக்கு   ஐரோப்பா – கலைத்தடுக்கப்பட்ட வரலாறு படித்தேன்.  வரலாற்றின் பல்வேறு ஆளுமைகளையும்  இணைந்த குறிப்புகளையும் செறிந்து வழங்கிய ஒரு பதிவு.   நானும் அந்த சதுக்கத்தில் காலாற நடந்து சிலைகளைப் பார்த்து பின் ஓரிடத்தில் உட்கார்ந்த மறுகணம் நிகழுலகுக்கு வந்துவிட்டேன்.   சிறுசிறு மிகச் சுவாரஸ்யமான தகவல்கள்.  ராய் பூலான் தேவியுடன் தங்கியிருந்தது, உப்புவேலியைப் பற்றிய அவரது ஆய்வு, அவரது வீட்டில் சுவற்றிலிருந்த ராமர் படம், பிரிட்டிஷ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114894

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76

சுபாகு புரவியில் ஏறி முட்டித் ததும்பிக்கொண்டிருந்த படைகளினூடாக விரைந்து துரியோதனனின் படைப்பகுதியை அடைந்தான். அவன் புரவியிலிருந்து இறங்கியதுமே அவனை நோக்கி வந்த துச்சலன் “மூத்தவர் பிதாமகர் வீழ்ந்த இடத்திற்கு சென்றுள்ளார்” என்றான். அவன் திரும்பி நோக்க “வடக்கு எல்லையில்… படைகளின் விளிம்பில்” என்றான் துச்சலன். அவனுக்கு முன்னால் கௌரவப் படைகளை பாண்டவர்களின் படைகள் கடல்பாறையை அலைகள் என வந்து அறைந்துகொண்டிருந்தன. “வெறிகொண்டு தாக்குகிறார்கள். பீமசேனர் உக்ராயுதனையும் துர்விகாகனையும் பாசியையும் கொன்றுவிட்டார். நம் மைந்தர்கள் கீர்த்திமானும் கீர்த்திமுகனும் நீரஜனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115397