Daily Archive: November 22, 2018

ஆனந்தியின் அப்பா[சிறுகதை]

 [ 1 ] திரைப்படத்தை படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு என்று நினைத்துத்தான் வந்தேன். என்னை வரவேற்ற வேலைக்காரர்  “சின்னவர் உங்கள பாக்கணும்னு சொன்னார்” என்றபோது “சின்னவர்னா?” என்றேன். “ஆனந்தி அம்மாவோட மகன்… அமெரிக்காவிலே டாக்டரா இருக்கார்” என்றர். படத்தயாரிப்புக்காக இல்லை போலும் என்ற ஐயத்தை அடைந்தேன். வேறெதற்காக என்று ஊகிக்கமுடியவில்லை   வரவேற்பறையில் ஸ்ரீராம் நடித்த படங்களில் இருந்து எடுக்கப்பட்ட நிலைப்படங்கள் பெரிதாக சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. அனைத்துமே கருப்புவெள்ளை படங்கள். வண்ணப்படங்களைக்கூட கருப்புவெள்ளையாக ஆக்கியிருந்தனர், காட்சி ஒருமைக்காக.ஸ்ரீராம்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113682

விஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி

  அனிதா அக்னிஹோத்ரி -இந்து பேட்டி     ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது   விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் நவீன வங்கமொழி இலக்கியத்தில் விமர்சகர்களால் கவனிக்கப்படும் படைப்பாளிகளில் ஒருவரான அனிதா அக்னிஹோத்ரி வங்காளத்தைச் சேர்ந்தவர். இளம் வயதிலேயே குழந்தைகளுக்கான இதழான சந்தேஷ்-ல் எழுதத் தொடங்கினார். கல்கத்தா பிரசிடென்ஸி கல்லூரியில் பொருளியல்  கற்றார்.    University of East Anglia.வில் முதுகலைப் பட்டம்பெற்றார். இந்திய ஆட்சிப்பணியில் இருக்கிறார்   அவருடைய ஆக்கங்களில் ஆங்கிலத்தில் வெளியானவை   Forest Interludes – translated by …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115285

ரயிலில் கடிதங்கள் 5

ரயிலில்… [சிறுகதை]     அன்புள்ள  ஜெ ,     ரயிலில் கதையை நேற்று தான் படித்தேன்.  ஓர் நிகழ்வை இரு வேறு நபர்கள் தங்களின் நியாயங்களையும் தங்களின் அறங்களையும் மாறி மாறி  விளக்குகிறார்கள் .  இதில்  சாமிநாதன்  தன் நிலையை விளக்கும் போது அவனிடம் இயல்பாகவும் , முத்துசாமி தன் தரப்பை சொல்லும் போது அவனிடமும் மனம் மாறி மாறி ஊசல் ஆடுகிறது. இதில் யார் பக்கம் நியாயம் இருக்கும் என்று உறுதியாக  கூற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115198

டார்த்தீனியம் – பதட்டமும் விடுபடலும்

ஜெயமோகன் குறுநாவல்கள் வாங்க     அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   காடு நாவல் வாசித்திவிட்டு கடிதம் எழுதிருந்தேன், உங்கள் தளத்தில் வெளியிட்டுருந்தீர்கள், நன்றி. தொடர்ந்து “தெய்வங்கள், பேய்கள், தேவர்கள்” மற்றும் “பேய் கதைகளும் தேவதை கதைகளும்” படித்தேன். மனிதர்களின் குற்ற உணர்ச்சியில், தாழ்வுணர்ச்சியில்…. உருவாகி பெருகி கிடக்கும் யட்சிகள் மனதை ஆக்கிரமித்தன. பல எட்சிகள் மனதில் பின்னி பிணைந்து கிடக்கின்றன. இப்போது உங்கள் குறுநாவல்கள் படித்து கொண்டிருக்கிறேன்.     என்னை மிகவும் பதட்டமடைய செய்தது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115037

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-74

போர்முரசு ஒலிக்கத்தொடங்கியதுமே சுருதகீர்த்தி அந்நாள்வரை அத்தருணத்தில் ஒருபோதும் உணர்ந்திராத ஒரு தயக்கத்தை தன் உள்ளத்திலும் உடலிலும் உணர்ந்தான். தேரை பின்நகர்த்தி படைகளுக்குள் புதைந்துவிட வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. ஆனால் அவ்வெண்ணத்தை உடலுக்குக் கொண்டுசென்று அசைவுகளாகவோ சொல்லாகவோ மாற்ற முடியாமையினால் உறைந்ததுபோல் அவன் நின்றான். அவன் ஆணைக்கு காத்திராமலேயே தேர்ப்பாகன் தேரை முன்னணிக்கு கொண்டுசென்றான். எதிர்க்காற்றின் தண்மை அத்தனை உளச்சோர்விலும் வருடி ஆற்றும் வல்லமைகொண்டிருந்ததை எண்ணி வியந்தான். வெம்மைகொண்ட எண்ணங்களின்மீதே அது தொடுவதுபோலிருந்தது. எதிரில் கௌரவப் படையிலிருந்து எழுந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115360