Daily Archive: November 21, 2018

ராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் – சுரேஷ் பிரதீப்

.ராஜ் கௌதமன் ராஜ்கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள்   ராமச்சந்திர குஹா தனது “இந்தியா காந்திக்குப் பிறகு” என்ற புகழ்பெற்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் சமகால வரலாற்றெழுத்து சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குவதற்கு என்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார். அப்பகுதியில் வரலாற்றெழுத்து சமகாலத்தை நோக்கி முன்னேறும் போது சிக்கல்கள் நிறைந்ததாக கருத்து முரண்களை ஏற்படுத்துவதாக இருப்பதை சுட்டியிருப்பார். ஆனால் காலம் பின்னுக்குச் செல்லச் செல்ல வரலாற்றெழுத்து அவ்வளவு முரண்களை கிளர்த்துவதில்லை. ஏனெனில் முற்கால வரலாற்றினை நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115159

சமூகவலைச்சூழலெனும் மலினப்பெருக்கு…

  வெறுப்பு… சமூக ஊடகத்திடமிருந்து வெளிப்படுகிறதா, நம்முடைய மன வக்கிரத்திலிருந்து வெளிப்படுகிறதா?   முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் வெளிப்படும் வெறுப்பு பற்றிய  ஆழமான  கட்டுரை.. இக்கட்டுரையை ஒட்டி எனக்குப்படுவன.   இத்தகைய நடுநிலையான, உண்மையான அக்கறைகொண்ட ஒரு கட்டுரையை எழுதும் அறிவுஜீவி என எவரும் இங்கு இல்லாத நிலையே கவலைக்குரியது. சூரியா சொல்வதுபோல அத்தனைபேரும் முகநூலின் வெறுப்பலைகளுக்குள் தாங்களும் சிக்கிக் கிடக்கிறார்கள். அல்லது அதை அஞ்சி அகன்று வாழ்கிறார்கள். எத்தனைநேரடியான உண்மை, இதைச் சொல்லுமளவுக்குக்கூட இங்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115329

தேங்காய் எண்ணை -கனவு- கடிதம்

தேங்காயெண்ணையும் வெள்ளையரும்   மதிப்புகுரிய ஜயமோகன் அவர்களுக்கு,   எனது தேங்காய் எண்ணை சம்பந்தப்பட்ட கடிதத்திற்கு விளக்கமளித்ததற்கு மிக்க நன்றி.   எனக்கேற்பட்ட அனுபவம் ஒரு விசித்திரக் கனவுதான்.கேரளாவில் ஒருசெக்கெண்ணைச்சாலையில் நான் நிற்கிறேன். ஒரு சிறு பையன் -, அவனது நிறம் வெள்ளை சேர்ந்த பழுப்பு,தலைமயிர் மஞ்சள்- ஆக, அவன் கேரளாவைச்சேர்ந்த கலப்பினன் என எனது மனம்அப்போது கூறியது.அவன் எனக்குமுன் செக்கெண்ணைக் குடுவை ஒன்றை நீட்டுகிறான்.எனது நாசி வழியே அந்த புதிய எண்ணை மணம் செல்கிறது….   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115314

நட்பு- கடிதங்கள்

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல்   அன்புள்ள ஜெ,   உங்கள் முப்பதாண்டுக்கால நண்பர்களின் படங்களைப் பார்த்ததும் ஒரு பெரிய நிறைவு ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்குமேல் நீடித்த நட்பு என எனக்கு ஏதுமில்லை. அவற்றை நட்பு என்றுகூடச் சொல்லமுடியாது. அருகே வசிப்பதனால், அல்லது ஆபீஸில் அடிக்கடிச் சந்திப்பதனால் உருவாகும் நட்பு. கண்முன்னால் இருந்து அகன்றதுமே அதுவும் இல்லாமலாகிவிடுகிறது.   நான் அறிந்தவரை பெரும்பாலானவர்களுக்கு இதுதான் நிலைமை. அவர்கள் நட்பு என்று சொல்வது இப்போது இருக்கும் கூட்டம்தான். சேர்ந்துகுடிக்கவோ அரட்டை அடிக்கவோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115298

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-73

சுருதகீர்த்தி பிரதிவிந்தியனின் பாடிவீட்டை அடைந்தபோது அங்கு சதானீகனும் சுதசோமனும் இருந்தனர். கவச உடையணிந்திருந்த அவன் புரவியிலிருந்து இறங்கி ஏவலனிடம் கடிவாளத்தை அளித்துவிட்டு சிறிய பெட்டி மேல் அமர்ந்து ஏவலன் கவசங்கள் அணிவிக்க முழங்கையை கால்மடித்த முட்டுகளில் ஊன்றி நிலம் நோக்கி அமர்ந்திருந்த பிரதிவிந்தியனை அணுகி “வணங்குகிறேன், மூத்தவரே” என்றபின் அப்பால் கைகட்டி நின்றிருந்த சுதசோமனை நோக்கி “சுருதசேனன் வரவில்லையா?” என்றான். “இல்லை” என்று சுதசோமன் தலையசைத்தான். சுருதகீர்த்தி திரும்பிப்பார்க்க அப்பால் நின்ற ஏவலன் வந்து மென்மரத்தாலான பெட்டியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115224