Daily Archive: November 20, 2018

வடகேரளம்- ஒரு நண்பர்கூடல்

  காஞ்ஞாங்காடு முற்போக்கு கலையிலக்கிய சங்கம் [புரோகமன கலாசாகித்ய சங்கம்] சார்பில் நிகழ்த்தப்பட்ட கலாச்சார மாநாடு ஒன்றை தொடங்கிவைத்து உரையாற்ற முடியுமா என அழைத்திருந்தார்கள். அவ்வளவு தொலைவுக்குச் செல்லும் கூட்டங்களை நான் பொதுவாக ஏற்பதில்லை. மூன்றுநாட்கள் என் கணக்கில் செலவாகிவிடும். ஆனால் வடக்கு மலபாருக்குச் செல்வதென்பது இனிய அனுபவங்களில் ஒன்று. மேலும் அழைத்தவன் என் நண்பன் வி.பி.பாலசந்திரன்.   நானும் பாலசந்திரனும் 1984 முதல் 1988 வரை காசர்கோடு தொலைபேசி நிலையத்தில் வேலைபார்த்தோம். அன்று நாங்கள் எம்.ஏ.மோகனன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115246

உணவும் உடலும்

    மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு… தங்களின் தளத்தில் வெளியிடப்படும் உணவு தொடர்பான விவாதங்களை தொடர்ந்து கவனித்துவருகின்றேன். எனவே சமீபத்தில் காண நேர்ந்த உனவு குறித்தான ஒரு காணொளியை இங்கு பகிர்ந்துகொள்ள எண்ணுகின்றேன்.   ரான் சேகல் என்பவர் TEDx Rubbianல் “What’s the best diet for humans” என்ற தலைப்பில் உணவு குறித்தான தன்ஆய்வுகள் குறித்து பேசியது. இணைப்பு இங்கே:   ரான் உணவின் தன்மையை ரத்ததின் குளுகோஸ் அளவுகளை கவனிப்பதன் மூலம் தீர்மானிக்கலாம்என்கிறார். அதிகமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114959

பிரதமன் -கடிதங்கள்

பிரதமன்[சிறுகதை] அன்புள்ள ஜெ   பிரதமன் வாசிதேன். சரளமான ஒழுக்குள்ள கதை. நுட்பமான செய்திகள் வழியாக அங்கே போய் அந்த ஆக்குபுரைக்குள் வாழ்ந்ததுபோன்ற அனுபவத்தை அளிக்கிறது. அந்த ஓட்டம்தான் பெரும்பாலான சிறுகதையாசிரியர்கள் தவறவிடுவதாக இருக்கிறது. அதற்கு நுணுக்கமான எவ்வளவு கவனிப்புகள் தேவையாகின்றன என ஆச்சரியமாக இருக்கிறது. தேங்காயை நடுநரம்பில் தட்டியால் சரியாக உடையும் என்பது ஒரு செய்தி என்றால் நெய்யை மிகமென்மையாக வழித்தெடுப்பதைப்பற்றிய வர்ணனை ஓர் அனுபவம். அதுதான் இலக்கியத்திற்கான அடிப்படை.   கதையின் ஆன்மிகமான மையத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115279

உள்ளத்துடன் உரையாடுதல்

  இன்று எனது நண்பன் இராணுவத்தில் இருந்து வந்திருந்தான். மாலையில் வெளியே கிளம்பி சிக்கன் ரைஸ் சாப்பிடுவது வழமை. அவனுடன் இன்னொரு நண்பனும் வந்திருந்தான். நாங்கள் மூவரும் சாப்பிட ஓட்டலில் உட்கார்ந்து கொண்டு இருந்தோம். அப்போது மூன்றாவது நண்பனின் தம்பியும் சாப்பிட வந்தான். வேலை செய்து விட்டு அலுத்து வந்திருந்தான். “வாடா இங்க!” என்று அழைத்தேன். சிரிப்புடன் வந்தமர்ந்தான். நால்வரும் சாப்பிட்டோம். நால்வருக்கும் சேர்த்து இராணுவ நண்பனே பணம் தந்தான். பிறகு மூன்றாவது நண்பனின் தம்பி செருப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114714

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-72

துண்டிகன் பீஷ்மரின் பாடிவீட்டை அடைந்தபோது அதன் நுழைவாயிலில் அமர்ந்திருந்த காவலன் தன் நீள்வேலை ஊன்றி, அதை பற்றி, அந்தக் கைகளின் மேல் முகத்தை வைத்து துயின்றுகொண்டிருந்தான். துண்டிகன் “காவலரே!” என்று அழைத்தான். அக்குரல் அவனை சென்றடையவில்லை. “காவலரே! காவலரே!” என்று அழைத்தபின் மெல்ல அவனை தொட்டான். திடுக்கிட்டு எழுந்து வேலை தூக்கியபின் “யார்? எங்கே?” என்றான் காவலன். “காவலரே, நான் தேர்வலனாகிய துண்டிகன். அரசரின் ஆணைப்படி பீஷ்ம பிதாமகரை பார்க்கும்பொருட்டு வந்தவன்” என்றான் துண்டிகன். “ஆம்! பிதாமகர்!” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115187