Daily Archive: November 19, 2018

பாண்டிச்சேரி வெண்முரசு விவாதக்கூட்டம்-நவம்பர்

  அன்புள்ள நண்பர்களே , வணக்கம் ,   நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் தொடர்ச்சி 21 வது கூடுகையாக “நவம்பர் மாதம்”. 22 -11-2018 வியாழக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது   அதில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் , ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாகஅன்புடன் அழைக்கிறோம் .   கூடுகையின் பேசுபகுதி வெண்முரசு நூல் வரிசை 2 மழைப்பாடலின் நிறைவுப் பகுதி 18 “மழைவேதம்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115266

சினிமா பற்றி நீங்கள் கேட்டவை

  சென்ற இருபது நாட்களாக இணையத்தில் எழுந்த என்மீதான வெறுப்பின் கசப்பின் அலையைப்பற்றி நண்பர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது வெற்றிக்கு எதிரான கசப்பு. என் வெற்றி என் புனைவுகளில் உள்ளது என்பதே என் எண்ணம். ஆனால் இவர்களின் உள்ளத்தில் இவர்கள் மதிக்கும் வெற்றி என்பது சினிமாவில் கிடைக்கும் உலகியல்வெற்றி மட்டுமே. அது இவர்களை பொறாமையால்  கொந்தளிக்கச் செய்கிறது. இலக்கியவெற்றியை மதிப்பிடுமளவுக்கு இவர்களுக்கு அறிவோ நுண்ணுணர்வோ இல்லை.   சர்க்கார் வெளிவருவதற்கு முன் அதன் கதை திருட்டு,அதற்கு வசனம் எழுதிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115079

கட்டண உரை -கடிதங்கள்

வணக்கம் திரு. ஜெ.   நேற்று நெல்லையில் தங்களது “நமது இன்றைய சிந்தனை முறை உருவாகி வந்தது எவ்வாறு?” உரையை கேட்ட வாசகர்களுள் நானும் ஒருவன். மிகவும் அழகான, ஆழமான உரை. ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள்ளவும், தெரிந்த சிலவற்றை தொகுத்துக் கொள்ளவும் உதவியது.   செவ்வியலும்-நாட்டார் கூறுகளும் கொள்ளும் முரணியக்கத்தின் பெரிய சித்திரம் அறிமுகம் கிடைத்தது. மைய தரிசனம் முதல் வழிபாடுகளை/ ஆசாரங்களை நிர்வகிக்கும் அமைப்புகள் வரை ஐந்து தளங்களிலான மத கட்டுமானம், இனி எந்தவொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115222

ரயிலில் -கடிதங்கள்-4

ரயிலில்… [சிறுகதை]   அன்புள்ள ஜெ,   முத்துசாமி குடும்பத்திற்கு முதல் அறமீறலின் போது இரண்டு வாய்ப்புகள் இருந்தன. பிரச்சினையின் துவக்கத்திலிருந்தே இரண்டு வாய்ப்புகள் இருந்தன. அறமீறலை எந்தவொரு மனமும் அறிந்தே இருக்கும். அவர் மனைவியின் எச்சரிக்கை, முத்துசாமியின் மனசாட்சியே ஆகும். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் சரியான முடிவெடுக்கும் கடைசி வாய்ப்பும் இருந்தது. தெரிந்தே தவறிய அறத்தின் விளைவுகளை எல்லாம் அனுபவித்த பின், பெண்ணின் திருமண விஷயத்தில் முடிவெடுக்கும் போது முத்துசாமிக்கு ஒரே வாய்ப்பு தான் இருந்தது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115191

வெள்ளையானையும் உலோகமும்

இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சங்க்களை இருவகையாக பிரிக்ககலாம் .ஒன்று இயற்கையாக ஏற்பட்ட பஞ்சம் மற்றொன்று செயற்கையாக  ஏற்படுத்தப்பட்ட பஞ்சம்.முதலாவதைவிட இரண்டாவது பஞ்சம் கொடியது மக்கள் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருந்தபோது  டண் கணக்கில் உணவு தாணியங்க்கள்  ரயில்களிலும் கப்பல்களிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது.பஞ்ச காலத்தில் உணவில்லாமல் நொடித்து இறந்து போனவர்கள் நிறையபேர் என்றால் பஞ்ச காலங்க்களில் கொள்ளை லாபம் கொய்து  பணக்காரர்கள் ஆனவர்கள் பலர்.     எந்த ஒரு சமூக நிகழ்வாயிருந்தாலும் முதலில் பாதிக்கப்படுபவர்கள் எளியமக்கள் தான் பஞ்சத்திலும் அதுவே தான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114952

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-71

துண்டிகன் காவலனின் புலம்பல்களை கேட்காதவன்போல மருத்துவநிலைக்குள் புரவியில் மென்னடையில் சென்றான். வலியலறல்களும் துயிலின் முனகல்களும் நெளிவுகளும் அசைவுகளுமாக அந்த இடம் பரவியிருந்தது. அவற்றுக்கு இடையிலிருந்த இடைவெளி மேலும் இருண்டு செறிந்திருந்தது. அது இறப்பு என அச்சமூட்டியது. அந்த அலறல்களும் முனகல்களும் அசைவுகளும் உயிருக்குரியவை என இனியவையாக தோன்றின. அலறி நெளிந்துகொண்டிருந்த இருவருக்கு நடுவே இருந்த இருண்ட இடைவெளியை அவன் விழி சென்று தொட்டபோது உடல் குளிரில் என நடுங்கியது. நோக்கை திருப்பிக்கொண்டு உடலை இறுக்கி, கைகளை சுருட்டிப்பற்றியபடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115181