Daily Archive: November 17, 2018

திராவிட இயக்கம், ஈவேரா

வணக்கம் ஜெ,   ஜெ.பி.பி.மோரே (J.B.P.More) என்ற ஆய்வாளர் எழுதிய ”திராவிட நீதிக்கட்சியின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்” நூலை சமீபத்தில் வாசித்தேன். தமிழகத்தில் ஆரிய-திராவிட இனவாதக் கருத்து, பிராமண எதிர்ப்பு போன்றவைகளை பேசியுள்ள அவர், ‘மொழி’ அடிப்படையில் விவரித்திருக்கிறார். அதில் திராவிட இனவாதக் கருத்தும், பிராமண எதிர்ப்பும் தமிழர்கள் மத்தியில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்தன என்கிறார். தென்னிந்திய மொழிகள் பேசும் அனைவரும் திராவிடர் என்றபோதிலும் தமிழரல்லாதவர்கள் மத்தியில் இக்கருத்துகள் செல்வாக்கு பெறவில்லை. 1917 -களிலேயே தெலுங்கு மொழி விழிப்புணர்ச்சி, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114956

ரயிலில்- கடிதங்கள் 3

ரயிலில்… [சிறுகதை]   அன்புள்ள ஜெ   ரயிலில் மிக யதார்த்தமான ஒரு கதை. ஆனால் அதை ஒரு ரயில்பெட்டிக்குள் அருகருகே அமர்ந்திருக்கும் பரம்பரை எதிரிகளின் உரையாடலாக அமைத்தபோது நாடகீயமான ஒருதன்மை வந்தது. கிளாஸிக்கலான பல சிறுகதைகள் இந்த அமைப்பில் நினைவுக்கு வருகின்றன. தாமஸ் மன், லூகி பிராண்டெல்லா போன்றவர்களின் கட்டமைப்பு இது   அந்தக்கதையின் ஒரு அம்சம் மட்டும் எனக்கு மேலும் முக்கியமானதாகப் பட்டது. நிலத்துக்கான இந்தப்போரில் பெண்களுக்கு எந்தக்குரலுமே கிடையாது. முத்துசாமியின் அம்மா, மனைவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115143

இலக்கியவேல் மாத இதழ் – உஷாதீபன்

  அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ.    வணக்கம்.     நலமாயிருக்கிறீர்களா?   நாடோடி மன்னன் படத்தை 3 மணி நேரத்துக்கு மேல் பொறுமையாக எப்படி உட்கார்ந்து ரசித்தேன் என்று எழுதியிருந்த கட்டுரையை மிகவும் ரசித்தேன்.  எம்.ஜி.ஆரின் அழகும், அந்தச் சிரிப்பும் கொள்ளை போகும். அவரின் இயல்பே அ லட்டிக் கொள்ளாத நடிப்புதான். நடிப்பு மாதிரியே தெரியாத நடிப்பு அது. அதைத்தான் அவர் கடைசிவரை செய்து கொண்டிருந்தார். அது தமி்ழ் மக்களிடம் எடுபட்டது. கலர்ப்படங்களி்ல் அவர் பண்ணிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114916

வே. பாபு -கடிதம்

அஞ்சலி வே பாபு அன்பு ஜெயமோகன்,     அண்ணன் வே.பாபு அவர்களின் மறைவு குறித்த தகவலை உங்கள் தளத்தின் வழி தெரிந்து கொண்ட கணம்.. எனக்கு அதிர்ச்சியைத் தரவில்லை; பெருவியப்பையே தந்தது. சற்றும் யோசிக்கவில்லை. அவர் எண்ணுக்கு நடுக்கத்தோடு அழைத்தேன். அவர் உறவினர்களில் ஒருவர் பேசினார். “உடம்பெல்லாம் சரியில்லாம இல்லீங்க.. படுக்கப்போகும்போது நல்லாத்தான் இருந்தார்” என்பதாகத்தான் அவர் பதில் இருந்தது. ”இன்னிக்கு சாயந்திரம் 3 மணிக்கு உடலை அடக்கம் செய்யறதா இருக்கோம்!” என்றும் அந்த உறவினர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115109

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-69

சிகண்டியின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதை ஷத்ரதேவன் பார்த்தான். அது குளிரினாலா என்ற ஐயம் அவனுக்கு ஏற்பட்டது. சிதைகளின் நெருப்பிலிருந்து விலகி வரும்தோறும் தெற்கிலிருந்து வீசிய மழையீரம் கலந்த காற்று ஆடைகளை பறக்கவைத்து குளிரை அள்ளிப் பொழிந்தது. சிகண்டியின் உடல் மிக மெலிந்தது. அடுக்கி வைக்கப்பட்ட சுள்ளிகள்போல விலாஎலும்பும், புறாக்கூண்டுபோல உந்தி எழுந்த நெஞ்சும், ஒட்டி மடிந்த வயிறும், கைப்பிடிக்குள் அடங்குவது போன்ற இடையும் கொண்டது. ஆகவே நீண்ட கைகளை வீசி அவர் நடப்பது வெட்டுக்கிளி தாவிச் செல்வதுபோல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114977