Daily Archive: November 15, 2018

இலக்கியத்தின் வாசல்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   கடிதத்துக்கு நன்றி    உண்மையில் நான் உடையாமல் இருந்திருந்தால் ஒரு லும்பனாகி இருந்திருப்பேன். தொடர்ந்து தங்களின் எழுத்து என்னை இந்த மிகப்பெரும் பிரபஞ்சத்தில்  கனமின்றி உணரவைத்தது. இது என்  வாழ்வில் எனக்கு நிகழ்ந்த சிறப்பான தருணம்.     இப்பொழுதும் என்னுடன் பணி புரியும் நண்பர்கள் என்னை low self esteem உடையவனாக நினைக்கிறார்கள். அதை என் குறையாகவும் கூறி அதை நான் சரி செய்ய எத்தனிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114996/

கட்டண உரை -கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் சார்,     கட்டண உரை குறித்து கிருஷ்ணன் அவர்களின் கடிதத்தை படித்தவுடன் மனம் பெரும் அதிர்சியை சந்தித்தது.ஏனென்றால் உங்களுக்கு விலை,சம்பளம் என்பது எல்லாம் எப்படி என்று என் மனம் ஏற்றுகொள்ளவே இல்லை. பணத்திற்காக கூறவில்லை. இன்று எனது அற்ப ஞானம்,கொஞ்சம் இருக்கும் நுண்ணுணர்வு, தன்னறத்திக்காய் முட்டி மோத அத நேரம் எனது வலுவை இழந்து விடாமல் சமநிலையோடு யோசிக்கும் செயல்படும் தன்மை எல்லாம் நீங்கள் கொடுத்தது.     இன்றைய ஆசிரியனைபோல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115138/

நம்பிக்கையும் எழுத்தும்-கடிதம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,   வணக்கம் . நான் மணிமாறன். மதுரை புத்தகக் கண்காட்சியில் சந்தித்தோம். தங்களுக்கு நினைவு இருக்கும் என்று நம்புகிறேன். தற்பொழுது ஹைதராபாத்தில், உயிரியல் ஆராய்ச்சி செய்யும் ஒரு கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்   மதுரை புத்தகக் கண்காட்சியில் தங்களை சந்தித்த தருணம், என் வாழ்நாளில் அரிதாக நிகழ்ந்த மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று. உங்களை பார்த்தபின்பு , என்னை உங்களுக்கு தெரியும் என்ற எண்ணமே எனக்கு பரவசத்தை தருகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114856/

இந்த வசையாளர்கள்-கடிதங்கள்

  ஜெ   இந்நாட்களில் படித்தேன்   சமீபத்தில் உங்கள்மேல் வந்த காழ்ப்புகளையும் வசைகளையும் பார்த்துக்கொண்டிருந்தேன். முதலில் உங்களைக் கதைத்திருடர் என்றார்கள். அதன்பின் படம் படுதோல்வி என்றுசொல்லி, அதற்கு நீங்களே காரணம் என்றார்கள். அதன்பின் அது பிளாக்பஸ்டர் எனத் தெரிந்ததும் படத்திலுள்ள கருத்துக்களுக்கு நீங்களே காரணம் என வசைபாடுகிறார்கள். எந்தக்கூச்சமும் கிடையாது.அப்பட்டமான பொறாமையை மறைக்கவேண்டும் என்றுகூட தோன்றவில்லை.   சில வாரங்களுக்குமுன்னர் இங்கே மிடூ குற்றச்சாட்டுகள் வந்தன. தமிழின் அடையாளம் என்று சொல்லப்படுபவர் மீதே கடுமையான குற்றச்சாட்டுகள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115117/

ரயிலில் கடிதங்கள் -2

ரயிலில்… [சிறுகதை]   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்கள் பக்கத்தை தொடர்ந்து வாசித்து வருபவன் நான். இது என் முதல் கடிதம்.   இந்தக் கதை ஒரு கண்ணாடி போல என் முன்னே நிற்கிறது. சாமிநாதன் உருவில் நான் நிற்கிறேன். அவரின் இளம் வயது பிம்பமாக. உண்மையாகவே எனக்கு எதிரில் முத்துசாமி. இந்தப் பெயரும் அப்படியே பொருந்தியிருக்கிறது.   என் அப்பா என் சகோதரியின் திருமணத்திற்காக கொஞ்சம் பணம் வாங்கியிருந்தார். அதற்கு மாறாக எங்கள் 13 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115102/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-67

களத்தில் பீமசேனர் வெறிகொண்டு போரிட்டுக்கொண்டிருந்தார். கௌரவர்கள் அன்றேனும் அவரை வீழ்த்திவிட வேண்டுமென்று முடிவு கொண்டவர்கள்போல் பெரும் சீற்றத்துடன் போர்புரிந்தனர். தேரில் அம்புகளைத் தொடுத்தபடி விரைந்து சென்று, அவ்விரைவழியாமலேயே கழையூன்றி எழுந்து சென்று தேர்களை கதையால் அறைந்து சிதறடித்து, புரவிகளை வீழ்த்தி, நிலத்தமைந்து கதை சுழற்றி தனிப்போரில் சுழன்றறைந்து துள்ளி மீண்டும் தேருக்கு மீண்டு பீமசேனர் போரிட்டார். அவர் மீளுமிடத்திற்கு விசோகன் முன்னரே தேருடன் சென்று நின்றிருந்தான். தேரும் பீமசேனரும் இரு வண்டுகள் வானில் சுழன்று விளையாடுவதுபோல களத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114885/