Daily Archive: November 14, 2018

நேர்கோடற்ற எழுத்து தமிழில்..

  வணக்கம் திரு ஜெயமோகன்   முன்பொரு கடிதத்தில்(இலக்கியமும் மொழியும்) ஆங்கில நடையை என்னால் ரசிக்க முடியவில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள். அதற்கு காரணமாக ஆங்கிலம் செவியில் விழும் சூழலில் நான் இல்லை எனவும் கூறியிருந்தீர்கள். நான் படிக்கும் புத்தகங்களும் பார்க்கும் படங்களும் பெரும்பாலும் பிரிட்டிஷ் படைப்பாளர்களது தான். ஆனால் அதுமட்டும் அல்ல நான் ஆங்கில இலக்கியத்தை நோக்கி செல்ல காரணம். நான் லீனியர் நரேட்டிவ்(nonlinear narrative) ஆங்கில புத்தகங்களில் என்னை பெரிதும் கவர்ந்த ஒன்று. போர்ட் மடோஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114896/

அமிஷ் நாவல்கள் -கடிதங்கள்

அமிஷ் நாவல்கள்   அன்புள்ள ஜெ   சமீபத்தில் இதே நாவலை நண்பன் ஒருவன்  கண்டிப்பாக எல்லாரும் படிக்கவேண்டிய நூல் என்றான்.. அவனிடம் “இது வெறும் கால் சென்டர் மொழியில் எழுதப்பட்ட்து.. இதை  விட 100 மடங்கு செறிவுடன் தமிழிலேயே எழுதப்பட்டு வரும் வெண்முரசு நாவல் படித்தாயா” என்று கேட்டேன்.. “கால் சென்டர்” மொழியில் என் எழுத கூடாது.. கடினமான மொழியில் தான் இலக்கியம் படைக்க வேண்டுமா”  என்பது அவன் வாதம்..   அவனிடம் இப்படி கேட்டேன்.. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114865/

இந்தத் தொலைக்காட்சிப் பேச்சாளர்கள்… கடிதம்

இந்நாட்களில்… நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம் அன்புள்ள ஜெ   இந்நாட்களில் வாசித்தேன்   சமீபத்தைய சர்ச்சைகளில் உங்களைப் பற்றி இணையத்தில் பேசிய பலருக்கு நீங்கள் யார், என்ன எழுதியிருக்கிறீர்கள் என்றே தெரியவில்லை என்பதை கவனித்தேன். பெரும்பாலானவர்கள் திமுகவினர். இணையத்திலேயே இருக்கிறார்கள், ஒரு கூகிள் செய்தால் வந்து சேர்ந்துவிடலாம். ஆனால் அவர்களுக்கு அந்த வம்புப்பேச்சின் வழியாக உருவாகி வந்த கருத்துக்களையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். கீழே போய் பலர் இணைப்புகளை அளித்தார்கள். அந்த இணைப்புக்களைக்கூட அவர்கள் சொடுக்கிப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115100/

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-66

அஸ்தினபுரியிலிருந்து நாற்பத்திரண்டு காதம் அப்பால், மைய வணிகப்பாதையில் அமைந்திருந்த முசலசத்ரம் என்னும் சிற்றூரில் தொன்மையான குதிரைச்சூதர் குலமான சுகித குடியில் சதமருக்கும் சாந்தைக்கும் மகனாக விசோகன் பிறந்தான். அவனது குடியில் அனைவருமே கரிய சிற்றுடல் கொண்டவர்கள். நெடுங்காலம் புரவிகளுடன் வாழ்ந்து புரவியின் உடல்மொழியையும் உளநிலையையும் அடைந்தவர்கள். தங்களை அவர்கள் புரவிகளென்றே உள்ளாழத்தில் நம்பியிருந்தனர். தொலைநாட்டுப் பயணத்தில்கூட அறியாத புரவிகள் அவர்களை புரவியின் வேறு வகையினர் என்பதுபோல் அடையாளம் கண்டுகொண்டு குறுஞ்சொல் எடுத்து அழைத்து உரையாடத் தொடங்குவதுண்டு. புரவி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114878/