Daily Archive: November 13, 2018

தமிழகக் கோபுரக்கலை மரபு

  குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழகத்திற்குரிய தனிப்பெருங்கலை என்று இன்று எஞ்சுவதில் கோபுரங்களே முதன்மையானவை. இந்திய சிற்பக்கலையின் சிறப்புக்கூறுகளில் ஒன்று கோபுரம். வேசரம், நாகரம், திராவிடம் என பிரிக்கப்படும் சிற்பமரபில் தென்னகச்சிற்பக்கலை திராவிடம் எனப்படுகிறது. அந்த மரபைச் சேர்ந்த கோபுரங்கள் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ளன. கேரளக் கட்டிடக்கலை முற்றிலும் மாறான ஒரு தனிப்போக்கு. திராவிடக் கட்டிடக்கலையின் உச்சகட்ட அழகியல் வெளிப்பாடு கோபுரங்களே   கோபுரத்தின் சிறந்த உதாரணங்கள் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் இருந்தாலும்கூட அங்குள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114924

கட்டண உரை பற்றி…

  நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்   ஈரோடு போன்ற நகரங்களில் இலக்கியக் கூட்டங்களுக்கு ஆட்களின் வருகை குறைந்து கொண்டே போகிறது, திருமணம் குடும்ப விழாக்கள் பிறந்தநாள் விழாக்கள் போன்ற பொது விழாக்களுக்கு கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு நபர் தனக்கு வந்த எந்த அழைப்பையும் தவற விட தயாராக இல்லை. சராசரியாக ஒரு குடும்பஸ்தர்  ஒரு ஆண்டில் குறைந்தது 50 விழாக்களில் பங்கு பெற்று  விருந்துண்டு செல்கிறார். எவ்வளவு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115127

ரயிலில்- கடிதங்கள்

  ரயிலில்… [சிறுகதை]   அன்புள்ள ஜெமோ   “ரயிலில் சாமிநாதன் இட்லியை சாப்பிட ஆரம்பித்தார்”   சில மனக் காட்சிகள் வாழ்நாள் முழுதும் கூடவே பயணிக்கின்றன.அவை முதலில் அறிமுகமான போது  விவரிக்க முடியாத தரிசனத்தையும், அன்றாடம் மீட்டு எடுத்து நிகழ் கால சம்பவங்களோடு ஒப்பிடும் போது, மனதில் அவ்வப்போது  அசை போடும்போது பல புதிய விடைகளையும் ஆறுதலையும் அளிக்கின்றன. அக்காட்சிகள் எனக்கு  ஒப்பற்ற வழிகாட்டிகள்.   ஊமைச் செந்நாய் “காறி துப்பி விட்டு உயிர் விடும்” காட்சி அவற்றில்  ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115098

வானவில் -கடிதங்கள்

இழைபிரிக்கப்பட்ட வானவில் அன்புடன் ஆசிரியருக்கு   இழைபிரிக்கப்பட்ட வானவில் வாசித்தபோது மகிழ்வாக உணர்ந்தேன். இரண்டு காரணங்கள். ஒன்று அந்தக் கவிதை எங்கு முடிகிறது என்று நான் எண்ணியிருந்தேனோ அடுத்தவரி இக்கவிதைக்குத் தேவையா என்று எங்கு மனம் சங்கடம் கொண்டதோ அதையே நீங்களும் குறிப்பிட்டிருப்பதால் ஏற்பட்ட மகிழ்ச்சி. மற்றொன்று அவ்வரியின் மானுடம் தழுவிய தன்மை. எனது நகரத்தின்மேல் அந்த வானவில் முறிந்து விழுந்தால் நாங்கள் அனைவரும் எத்தனை வண்ணமுடையவர்களாகிவிடுவோம் இவ்வரிகள் எனக்கு பிரார்த்தனை போல ஒலிக்கின்றன. அனைத்துமே கைவிட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114662

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65

காரூஷநாட்டு க்ஷேமதூர்த்தி திரும்பி தன் படைகளை பார்த்தார். அவர்களால் போரிட இயலவில்லை என்பது தெரிந்தது. எந்தப் படையாலும் அர்ஜுனனை எதிர்கொள்ள முடிந்திருக்கவில்லை. அதைப்போலவே மறுபக்கம் பாண்டவப் படையின் எந்தப் பிரிவாலும் பீஷ்மரை எதிர்கொள்ள முடியவில்லை. அவர்களின் விழிமுன் பேருருக்கொண்டு காட்சியிலிருந்தே அவர்கள் மறைந்துவிட்டதுபோல் தோன்றினார்கள். விண்ணிலிருந்து என அம்புகளைப் பொழிந்து அவர்களை கொன்றார்கள். எளிய மக்கள்! தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றால் ஒவ்வொருநாளும் ஆட்டிவைக்கப்படுபவர்கள். துரத்தி வேட்டையாடப்படுபவர்கள். கொன்று குவிக்கப்படுபவர்கள். பெருமழைகள், புயல்கள், வெயிலனல்கள், காட்டெரிகள், நோய்கள். அவற்றுக்கிணையாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114851