Daily Archive: November 12, 2018

அஞ்சலி வே பாபு

  கண்டராதித்தனுக்கு விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது அளித்த விழாவின்போதுதான் இறுதியாக வே.பாபுவை பார்த்தேன்.  அவரும் வே.நி.சூர்யாவும் கண்டராதித்தனின் புதிய கவிதைநூல்களுடன் வந்திருந்தார்கள். தக்கை பாபு என அழைக்கப்பட்ட வே பாபு கவிதைகளை தக்கை என்னும் பதிப்பகம் வழியாக வெளியிட்டிருக்கிறார். கவிதைக்கான ஒருங்குகூடல்களை ஏற்பாடு செய்திருக்கிறார். சேலத்தைச் சேர்ந்தவர் தங்கள் வாழ்க்கையின் அந்தரங்கமான ஒரு பகுதியை கவிதைக்காக ஒதுக்கிக் கொண்டவர்கள், வாழ்க்கையின் பலவகை அல்லல்களுக்கு நடுவே அதை ஒரு ஒரு தனியான பயணமாகக் கொண்டுசென்றவர்கள் எப்போதும் தமிழில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115085

நெல்லை உரை, கிருஷ்ணாபுரம் ஆழ்வார் திருநகரி பயணம்

  நெல்லையில் கட்டண உரையை அமைக்கவேண்டும் என்பது நண்பர் சக்தி கிருஷ்ணனின் எண்ணம். பலஆளுமைகளின் தொகுப்பான சக்தி நெல்லையில் ஒரு நகைக்கடையை நடத்துகிறார். திருச்சியில் வழக்கறிஞராகவும் இருக்கிறார். நெல்லைக்கும் திருச்சிக்கும் நடுவே காரில் ஓடிக்கொண்டே இருப்பவர் நெல்லையில் சக்தி கலைக்களம் என்ற பேரில் கலை இலக்கியச் செயல்பாட்டுக்கான அமைப்பு ஒன்றையும் நடத்திவருகிறார். அவருடன் அகில இந்திய வானொலியில் பணியாற்றும் ஜான் பிரதாப்பும் இணைந்துகொண்டார். ஜான் பிரதாப்புடன் நாங்கள் மேற்குத்தொடர்ச்சிமலையில் பயணம் செய்திருக்கிறோம்.அவர்கள்தான் இந்த நிகழ்ச்சியை நெல்லையில் ஒருங்கிணைத்தவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115056

காம அம்பும், கரிய நிழலும்

அனல்காற்று வாங்க   அன்பு ஜெயமோகன், அனல்காற்று நாவலைச் சென்ற வாரத்தில்தான் படிக்கும் வாய்ப்பு அமைந்தது. பாலுமகேந்திராவுக்காக எழுதிய கதை என்று சொல்லி இருந்தீர்கள். அக்கதையை அவர் எப்படி படமாக்கி இருப்பாரோ எனும் உங்கள் எதிர்பார்ப்பு நீர்த்துப்போனதில் எனக்கும் வருத்தம்தான். எனினும், பாலுமகேந்திராவின் வீடு, சந்தியா ராகம் போன்ற சில படங்களைக் கவனத்தில் கொண்டு சொல்கிறேன். அனல் காற்றின் சூட்டுக்குப் பங்கம் வராத  வகையில் அவர் அதைத் திரைச்சித்திரமாக்கி இருப்பார் என்றே நிச்சயிக்கிறேன். ஈரோடு வெண்முரசு சந்திப்பில் பாலுமகேந்திரா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114853

செவ்வல்லி- கடிதங்கள்

செவ்வல்லியின் நாள்   ஜெ   பாண்டி போகும் வழியில் சிறு குளங்களில் கண்டவை மீண்டும் எழுந்து வந்தன குமரிக்கு இயற்கையின் ஒரு தனி தீண்டல் உண்டு போல. கேரளத்தின் நீட்சி என்பதால், அந்த மழை காலங்கள் ஒரு வரம். அம்மழை  தரும் பசுமையின் தாண்டவம் அந்த வரத்தின் தொடர்ச்சி. மலையும், தொடர் மழையும், கடலும், ஆறும், அருவியும் என இயற்கை அள்ளி கிடக்கும்  நிலம் + உங்களின் சொல் அகராதி மிக பெரிது. அதனினும் பெரிது கணம் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114991

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-64

காரூஷநாட்டு அரசர் க்ஷேமதூர்த்தி போர்க்களத்தில் தன் படைகளை குவிப்பதில் முழுவிசையுடன் ஈடுபட்டிருந்தார். “காரூஷர் குவிக! காரூஷர் கொடிக்கீழ் அமைக!” என்று அவருடைய ஆணையை முழவுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. காரூஷர்களின் தேள்முத்திரை பொறிக்கப்பட்ட கொடி அசைந்துகொண்டிருந்தது. காரூஷநாட்டு வீரர்கள் கவசங்கள் வெயிலில் ஒளிவிட ஒருவரோடொருவர் முட்டித்ததும்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்து மாளவப் படை முன்னெழ உந்தியது. படைமுகப்பில் கூர்ஜரர்கள் அபிமன்யூவின் அம்புபட்டு விழுந்துகொண்டிருந்தார்கள். “நிரைகொள்க! அணிகலையாதமைக!” என அவர் ஆணையிட்டார். அவருக்கு எதிரே சாத்யகி வில்லுடன் நின்று போரிட அவனுக்குத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114696