Daily Archive: November 11, 2018

புனைவுகளுக்கான காப்புரிமை

  அன்புள்ள ஜெ   உங்கள் பதில் உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. கதைக்கருக்களுக்குக் காப்புரிமை இல்லை என்ற செய்தியே எனக்கு இப்போதுதான் தெரியும். இதை இவ்வளவு பேசும் எந்த ஊடகமும் இதுவரை சொல்லவில்லை. இவற்றில் எழுதுபவர்களும் பேசுபவர்களும் பெரும்பாலும் டீக்கடையில் வம்புபேசுபவர்களின் தரத்திலேயே இருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு புனைவுப் படைப்பின் காப்புரிமைக்கான நிபந்தனைகள் என்னென்ன என்று அறியவிரும்புகிறேன், ஏனென்றால் நான் இந்தத்துறையில் வேலைபார்க்கிறேன் – உங்களுக்கும் தெரியும்   அருண்குமார்   அன்புள்ள அருண்குமார்   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114822

டால்ஸ்டாய் நிச்சயம் இரு சுவையானவர்

    இன்றைய ஞாயிற்றுக்கிழமை அதிகாலை எட்டுமணிக்கெல்லாம் படுக்கையை விட்டு என்னை அப்புறப்படுத்தியிருந்தது. இளமஞ்சள் நிறத்தில் மெல்பேர்ன் வானத்தில் கதகதப்பான வெயில் வெளியே சீவித்துக்கொண்டிருந்ததை ஜன்னாலால் பார்த்தபோது சாதுவான பொறாமை துளிர்த்தது. கூடவே அரை அவுன்ஸ் அச்சமும் வந்தது. இன்னும் ஓரிரு மணி நேரத்திலோ இல்லை சில நிமிடங்களிலோகூட இந்த மஞ்சள் கரைந்து மழையாகலாம். இந்த நீல வானம் இருண்டு கறுப்பாகலாம். சீக்கிரம் அருந்திக்கொண்டால்தான் உண்டு என்று உடற்பயிற்சிக்காக கிளம்பி வெளியில் வந்தேன்.   அப்போதுதான், மகரந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114641

தமிழகப் பொருளியல் -கடிதம்

குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு. கலையரசனின் கட்டுரை- பாலா   அன்பின் ஜெ.. பின்னூட்டங்களுக்கு நன்றி. தமிழகப்பொருளியல்- கடிதங்கள் ஜகதீஷ் பகவதி, எம்.ஐ.டியில் டாக்டரேட். உலகமயமாக்கம், சுதந்திரச் சந்தைக் கோட்பாடுகளில் உலகில் மிகவும் போற்றப்படும் பொருளியல் அறிஞர். அவர் மனைவி பத்மா தேசாயும் ஒரு புகழ்பெற்ற பொருளியல் அறிஞர். இருவரும் இணைந்து, 1970 ஆம் ஆண்டு, இந்தியத் தொழிற்துறைக்கான திட்டமிடல் என்னும் முக்கியமான புத்தகத்தை எழுதினார்கள். அமர்த்தியா சென், கேம்ப்ரிட்ஜில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115029

பாடநூல்கள் -ஒரு கடிதம்

  அன்புள்ள ஜெ,   ஈரோடு வாசிப்பு இயக்கத்தில் நவீன பாடத்திட்டம் குறித்த ஒரு உரையாடல் நிகழ்த்தலாம் என்ற கிருஷ்ணனின் எண்ணத்தின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு பாடத்திட்டத்தின் முக்கியமான துறைகளை பற்றிய  விவாதமும் ஒரு பாடத்தில் தேர்வும் நடத்தலாம் என்று தாவரவியலில் ஒருபாடமும் தேர்ந்தெடுக்கப்பட்டு 13-10-18 அன்று ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.கிருஷ்ணன் தேர்ந்தெடுத்த கேள்விகளுக்கு சிவா,பாபு, வழக்கறிஞர்கள் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பிரகாஷ், இரட்டையர்களான மணவாளன் மற்றும் பாரி ஆகியோருடன் நானும் இணைந்து பதிலளித்தோம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114703

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-63

மாளவ மன்னர் இந்திரசேனர் படைக்கலத்துடன் தேரிலேறிக்கொண்டபோது படைத்தலைவன் சந்திரஹாசன் அருகே வந்து தலைவணங்கினான். அவர் திரும்பிப்பார்க்க “அனைத்தும் ஒருங்கிவிட்டன, அரசே. நமது படைவீரர்கள் இன்று வெல்வோம் என்று உறுதி கொண்டு களம் எழுகிறார்கள்” என்றான். “வெற்றி நம்மை தொடர்க!” என்று முறைமைச்சொல் உரைத்தபின் தேரிலேற படிப்பெட்டியை கொண்டு வைக்கும்படி ஏவலனிடம் கைகாட்டினார். ஏவலன் படியை வைக்கும்போது அவரை மீறி கசப்பு மேலெழுந்தது. திரும்பி சந்திரஹாசனிடம் “எதன் பொருட்டு இந்த முறைமைச்சொல்? நாமிருவரும் சேர்ந்து தெய்வங்களை ஏமாற்றிக்கொள்கிறோமா?” என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114753