Daily Archive: November 10, 2018

ரயிலில்… [சிறுகதை]

  ரயில் ஐந்து நிமிடம் நிற்கும் அந்த ஸ்டேஷனில் ஒரு பெட்டியில் பதினைந்து பேருக்குமேல் ஏறி பார்த்ததே இல்லை. ஒழுங்காக நிதானமாக ஏறினால் அத்தனை பேரும் அவரவர் இருக்கைக்கு சென்று சேர்ந்தபிறகும் இரண்டு மூன்று நிமிடம் மிச்சமிருக்கும். ஆனால் அத்தனை பேரும் பெட்டிகளும் மூட்டைகளும் வைத்திருப்பார்கள். சிலர் கைக்குழந்தைகள் இடுக்கியிருப்பார்கள் சின்னப்பிள்ளைகள் கிறீச்சிட்டு துள்ளிக்கொண்டிருக்கும். உள்ளிருந்து தேவையில்லாமல் இறங்குபவர்கள் ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள்.ஆனால் எல்லாவற்றையும் விட ஏறுபவர்களின் பதற்றமும், ஒவ்வொருவரும் முதலில் ஏறிவிடுவதற்காக முண்டியடிப்பதும் இரண்டு வாசல்களிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113369

செவ்வல்லி -கடிதங்கள்

  செவ்வல்லியின் நாள் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, செவ்வல்லிகளுடன் இன்று தீபாவளி. புகைப்படத்தில் ஒவ்வொரு அல்லியும் ஒரு தீப விளக்காகசுடர்விட்டு எரிகிறது. மலையின் மேல் வெள்ளிச்சரங்கள். சேற்றுப்பூக்கள் சங்கு சக்கரமாய்துள்ளுகிறது. கொக்கு பூத்த வயலில், நூறு  கொக்குகள் தரையிலிருந்து விண்ணுக்கு பறந்தால் , புஸ்வானம்தானே. பல பாட்டாசுகளை கொளுத்தி போட்டு விட்டீர்கள். ”Haiku Happening” என்பார்கள். நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு சொல்லும் ஒருபிரபஞ்சத்தை திறக்கிறது. வானவில் சூடிய நத்தைகள், ஒவ்வொரு மணியும் ஒரு துளி வானம்,வயல் நீரில் இறங்கிய வானம், ஒருவர் வானத்தை கலக்கி பரப்ப, ஒரு பெண்மணி வானத்தில்நாற்று நட, மழைத்திரை விலகி மலையின் தரிசனம். பூவரச இலை மென்மையான கைக்குழந்தை . சேம்பு இலை குட்டி யானையின் செவி. சிறியதிலிருந்து பெரியதுக்கு ஒரு விஸ்வரூப பாய்ச்சல்.எருமையின் மீது பெய்யும் மழை அதன் விளைவாக கண்களில் குளுமை – அற்புதம். ஜூலைமழையில் சொன்னீர்கள் ”அகத்தில் இருப்பதை விட புறத்தில் காண்பதை எழுதுதல் கடினமோஎன்று”. நவம்பர் மழையில் விளையாடி விட்டீர்கள். பாஷோ தனது குடிலிலிருந்து கிளம்பி வடக்கு நோக்கி  பல நூறு மைல்கள் நடந்து அடைந்ததரிசனங்களை (The Narrow Road to the Deep North), உங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்துஇரண்டு மணி நேரத்தில் எங்களுக்கு  காண்பித்து விட்டீர்கள். மிக்க நன்றி. தீபாவளி நல்வாழ்த்துக்கள். அன்புடன், ராஜா.   வணக்கம் ஜெ,   நலமா?   செவ்வல்லியின் நாள் காலையிலேயே மிகுந்த உற்சாகத்தை அளித்தது. இந்தத் தீபாவளையை அமர்க்களமாகத் தொடங்கிவிட்டது போன்ற மொழி நடை . வரிக்கு வரியா உவமைகளைக் கொட்டுவீர்கள்? விட்டால் ஒவ்வொரு துளிக்கும் ஓர் உவமை என  விரிந்துலங்கும் போல. இந்த எழுத்தைப் படித்துவிட்டு மழையில் நனைந்தால் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114934

பிணர் ஒரு கடிதம்

  பிணறாயி   அன்புள்ள ஜெ, இந்த இணையதளம் நிறைய வழக்குப் பெயர்களை தாவரவியல் பெயர்களுடன் சேர்த்து தருகிறது. புளிப்புச் சுவையுள்ள பழம் தரும் இரண்டு மரங்களை பிணர் என்கிற வார்த்தை கொண்டு குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது போல,ஆனால் Sterculia urens குறிப்பிடப்பட்டிருப்பது வேறு பெயர்களால். இது பிற்கால மலையாளத்தில் பயன்பாடு மாறியதால் இருக்குமா? தமிழில் சரிபார்க்காது மலையாளச் சொற்களுக்கு சரியான பொருளை அடைய முடியுமா? ஏனெனில் அப்படியான முயற்சிகள் பொதுவெளியில் இங்கு எவருக்கும் தெரியவில்லை.   உண்மையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114698

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-62

சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் கூர்ஜர மன்னர் சக்ரதனுஸ் பிருஹத்பலனை அணுகி மெல்லிய குரலில் “நாம் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றார். பிருஹத்பலன் “நாம் கோழைகள். நம்முள் ஒற்றுமையில்லை. அந்த நெறியிழந்த அந்தணனும் திருட்டுஷத்ரியனாகிய அவன் மைந்தனும் எங்களை தாக்கினால் பிற ஷத்ரியர்கள் வெறுமனே நோக்கியிருப்பீர்கள். உங்களுக்கு எங்கள் மண்ணை பங்கிட்டு அளிப்பதாக அவர்கள் சொன்னார்களென்றால் உடனிருந்து எங்களை கொல்லவும் செய்வீர்கள்” என்றான். “உங்கள் அச்சத்துக்கும் மடமைக்கும் பரிசு இறப்புதான்… உங்கள் குலங்கள் இந்தப் பாழ்நிலத்தில் முற்றழியும். அது ஒன்றே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114689