Daily Archive: November 8, 2018

வேலைபூதம்

  ஜெ,     நலமா? நீண்ட நாட்களாயிற்று உங்களுக்கு கடிதம் எழுதி.   சில சந்தேகங்களை உங்களிடம் கேட்கவேண்டும்போல் தோன்றியது.  வாழ்வதற்கு போதுமான அளவுக்கு ஊதியம் கிடைக்கும் மனதுக்கு பிடித்த வேலை, வாழ்க்கையில் நல்ல சம்பாத்தியம் தரும், ஆடம்பரமாக வாழ உதவும் அலுப்பூட்டும் வேலை, இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது உங்கள் பார்வையில் சரியானது?   மனதுக்குப் பிடிக்காத 10 To 6 வேலைக்கு செல்லும் ஒருவன், தினந்தோறும் காலையில் எழுதல், அலுவலகம் செல்தல், திரும்ப வருதல், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114706

ஜெயசூர்யா -மம்மூட்டி- மோகன்லால்

  மலையாள மிமிக்ரி நிகழ்ச்சிகள், நகைச்சுவை துணுக்குநிகழ்ச்சிகளை நான் பெரும்பாலான இரவுகளில் சற்றுநேரம் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் மிகத்தரமான நகைச்சுவை அவற்றிலிருக்கும். கேரள அரசியல், சினிமா, சமூகச்சூழல் கொஞ்சம் தெரிந்தால் வெடித்துச் சிரிக்கலாம். முன்னர் கோட்டயம் நஸீர். இப்போது பிஷாரடி நட்சத்திரங்கள்.   கேரள நடிகர்களில் பலர் மிமிக்ரி கலைஞர்களாக இருந்தவர்கள். ஜெயராம், கலாபவன் மணி, திலீப், ஜயசூர்யா, சுராஜ் வெஞ்ஞாறமூடு போன்றவர்கள் அதில் நட்சத்திரங்களாக இருந்து திரைக்குச் சென்றவர்கள். இப்போதும் அவர்கள் மேடைகளில் மிமிக்ரி நிகழ்ச்சிகளைச் செய்கிறார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115008

தல்ஸ்தோய் பற்றி…

ஜெமோ,                     கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உங்களை நேரில் சந்தித்தது ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. அதிலும் டால்ஸ்டாய் பற்றி நீங்கள் ஆற்றிய உரை (பேருரை)  பேரிலக்கியங்களால் சமூகம் எப்படி முன்நகர்கிறது என்பதை உணர்த்துவதாக இருந்தது.  இவ்வுரை பற்றிய என்னுடைய அவதானிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். https://muthusitharal.com/2018/09/16/டால்ஸ்டாய்-கைவிட்ட-டால்ஸ/ அன்புடன் முத்து

Permanent link to this article: https://www.jeyamohan.in/114713

சட்டநாதன் பற்றி ஜிஃப்ரி ஹஸன்

  எண்பதுகளில் இலங்கைத் தமிழிலக்கியத்தில் சட்டென்று கவனம் பெற்ற இருவர் ரஞ்சகுமார், சட்டநாதன். இருவருமே தீவிரத்துடன் தொடர்ந்து எழுதமுடியவில்லை. இலக்கியவாசிப்பு விவாதத்துக்கான சூழல் அன்றிருக்கவில்லை. தனிவாழ்க்கையிலும் அவர்களுக்கு அலைக்கழிப்புக்கள்   சட்டநாதனின் கதைகள் வண்ணதாசனின் உலகுக்குரிய நுண்ணிய உறவுச்சிக்கல்களைப் பேசுபவை. உணர்வுசார்ந்தவை, ஆனால் மிகை அற்றவை   சட்டநாதனைப்பற்றி ஜிஃப்ரி ஹசன் எழுதிய நல்ல கட்டுரை. பிரான்ஸிலிருந்து வெளிவரும் நடு என்னும் இணைய இதழில் சட்டநாதன் சிறுகதைகள்-கட்டுரை-ஜிஃப்ரி ஹாஸன்   அவரது காலம் தேசிய இனப்பிரச்சினை எழுச்சியடைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114921

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-60

பகுதி ஒன்பது : வானவன் கோசல மன்னன் பிருஹத்பலன் தன் குடிலின் வாயிலில் இடையில் இரு கைகளையும் வைத்து தலைகுனிந்து தனக்குள் ஒற்றைச் சொற்களை முனகியபடி குறுநடையிட்டு சுற்றி வந்தான். அவனது நிலையழிவை நோக்கியபடி அப்பால் தலைக்கவசத்தை ஏந்தியபடி ஏவலன் நின்றிருந்தான். பிருஹத்பலன் நின்று திரும்பிப்பார்த்து “வந்துவிட்டார்களா?” என்றான். “அரசே!” என்று அவன் கேட்டான். “அறிவிலி! அவர்கள் எங்கே?” என்றான். வெற்று விழிகளுடன் ஏவலன் “அரசே!” என்று மீண்டும் சொன்னான். “மூடர்கள்! மூடர்கள்!” என்று தன் தொடையை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114741