Daily Archive: November 7, 2018

ஒரு தத்தளிப்பு, கடிதங்களும் பதிலும்

எப்போதுமே வந்துகொண்டிருக்கும் கடிதங்களில் இரண்டு. சிக்கலான உளநிலையினூடாக ஓடும் இந்தச் சொற்களில் உண்மையான சமகாலப்பிரச்சினை ஒன்று உள்ளது என நினைக்கிறேன். இதை குறைத்துச் சொல்லவோ, எளிமைப்படுத்தவோ நான் விரும்பவில்லை. ஆனால் எப்போதுமே வெளியேறும் வழி ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறேன். நிபுணராக அல்ல, நானும் இந்த உளநிலைகளினூடாகச் சென்றவன் என்ற வகையில்   ஜெ     ஜெயமோகன் சார்,     நான் உங்கள் அறம் புத்தகத்தில் முதல் Chapter ஆகிய அறம் பகுதியை வாசித்து முடித்திருக்கிறேன். உங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114700

தமிழகப்பொருளியல்- கடிதங்கள்

குஜராத் – தமிழ்நாடு – வளர்ச்சியும் முன்னேற்றமும் – ஓர் ஒப்பீடு. கலையரசனின் கட்டுரை- பாலா அன்புள்ள ஜெ   கலையரசனின் கட்டுரையை சமீபகாலமாக தேசிய ஊடங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் திராவிட இயக்க ஆதரவு கட்டுரைச் சமையல்களில் ஒன்றாகவே சொல்லமுடியும். புள்ளிவிவரங்களைக் கொண்டு வெவ்வேறுவகையாகச் சமைக்கப்படும் இத்தகைய கட்டுரைகளுக்கு வெவ்வேறு அரசியல் விவாதங்களுக்கு மட்டுமே பயன். மற்றபடி எவ்வகையிலும் உண்மைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. திரு பாலா அவர்கள் ஒரு திராவிட ஆதரவாளர், அல்லது சப்பைக்கட்டாளர் என்ற வகையில் அவருடைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114739

தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் இந்தியத் தத்துவ இயல்

  அன்புள்ள ஐயா சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில், உரையாடலின்போது “அத்வைத வேதாந்தத்தை உலகஅளவில் எடுத்துச் சொல்ல தகுந்த அறிஞர்கள் இல்லை” என்று சொன்னீர்கள். “நீங்கள் அப்பணியைச் செய்யலாமா?” என்றதற்கு“நான் அடிப்படையில் இலக்கியவாதி” என்றீர்கள். இருப்பினும் தங்கள் தளம் மதம்-ஆன்மிகம்- இறையியலுக்கு நல்லஅறிவுவளங்களைக் கொண்டுள்ளது.   ‘philosophy’ க்கு இணையான தமிழ்ச்சொல் தத்துவம் என்றே கூகுள் சொல்கிறது. தத்வமஸி என்னும் உபநிடத மகாவாக்கியத்தை இந்த அறிவுத்துறைக்கே பெயராக வைக்கும் அளவிற்கு இந்திய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114730

புத்துயிர்ப்பு -தினேஷ் ராஜேஸ்வரி

இலக்கிய உலகில் எல்கேஜி யில் அடி எடுத்து வைத்திருக்கும் எனக்கு உங்களது எழுத்தும் வலைத்தளமும் கொடுத்தது அதிகம். இதில் எழுதிக் கொண்டு இருக்கிறேன். பேஸ்புக் இப்போது பிடிக்கவில்லை. அன்புடன் தினேஷ். புத்தியிர்ப்பு வலைத்தளம் அன்புள்ள தினேஹ் கட்டுரைகளில் இசை பற்றியதும் மலையாள சினிமாவிற்கும் இலக்கியத்திற்குமான தொடர்பு குறித்த நூலின் மதிப்புரையும் நன்று பொதுவாக முகநூலில் எழுதுவதற்கும் வலைத்தளத்தில் எழுதுவதற்கும் வேறுபாடுண்டு. வலைத்தளம் ஒரு இதழ். எப்போதுமிருக்கும் பக்கம். அந்த உணர்வுடன் எழுதுங்கள் நன்றி ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/114919

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-59

தேரிலேறிக்கொண்டதும் சஞ்சயன் விழித்துக்கொண்டான். “போர்முனைக்கு செல்லட்டும்! தேரை அர்ஜுனர் முன் நிறுத்துக!” என்றான். தேரோட்டி திரும்பி நோக்கியபின் புரவிகளை அதட்டினான். திருதராஷ்டிரர் “மூடா, நீ என்னருகே இருக்கிறாய்!” என்றார். “ஆம், நான் இங்கிருக்கிறேன்!” என்று அவன் சொன்னான். “ஆனால் நான் போர்க்களத்தை பார்த்துக்கொண்டிருக்கிறேன். அங்கே போர் இன்னும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது!” திருதராஷ்டிரர் “அந்திமுரசு ஒலித்துவிட்டது. நாம் திரும்பிக்கொண்டிருக்கிறோம்” என்றார். “இல்லை, அங்கே போர் நிகழ்கிறது… நான் இதோ பார்க்கிறேன்!” என்றான் சஞ்சயன். “தேவர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். ஒளிரும் வைரமுடி அணிந்தவர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114639