Daily Archive: November 5, 2018

இந்நாட்களில்…

  இரண்டு நாட்களுக்கு முன் அஜிதன் கூப்பிட்டிருந்தான். “என்னப்பா பண்றே?” என்றான். “வெண்முரசு” என்றேன். “இண்டநெட் பக்கம் போயிராதே. மொட்டை வசை, அவதூறு, கிண்டல். நேரிலே சிக்கினா விஷம் வச்சே கொன்னிருவாங்க. அவ்ளவு வெறுப்பு” என்றான். “ஓ” என்றேன். “எதுக்கு இவ்ளவு வெறுக்கிறாங்க?” என்றான். “இது ஒரு சின்ன வட்டம்தான். பெரும்பாலும் சின்ன எழுத்தாளர்கள். சினிமா சான்ஸ்தேடுறவங்க. அவங்களுக்கு இது ஒரு பத்துநாள் கொண்டாட்டம்” என்றேன்.   “என்ன சார் இது, மொத்த தமிழ் சினிமாவும் நீங்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114667

தேவதச்சனுக்கு வாழ்த்துக்கள்!

  தேவதச்சனுக்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் கவிக்கோ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9 அன்று வேலூரில் நடக்கும் விழாவில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது. கவிக்கோ விருது பெறும் கவிஞர் தேவதச்சனுக்கு  என்னுடைய, விஷ்ணுபுரம் நண்பர்களுடைய  மனமார்ந்த வாழ்த்துக்கள்.   கவிஞன் பிறரில் மேன்மையானவன் தொடர்ந்து தன்னை மாறுதலுக்கு உட்படுத்திக் கொண்டிருக்கும் கவிஞனே பிறரில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்கிறான்.மேம்பட்டவனாகிறான்.தன்னுடைய மனதளமாகவே கவிதை அமைய பெற்ற கவிஞனுக்கு மட்டுமே இந்த பண்பு சாத்தியம்.பெரும்பாலும் எங்கு தொடங்குகிறார்களோ ,அங்கேயே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114839

ஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்

வரலாற்றின் பரிணாமவிதிகள் அன்பு ஜெமோ,     நலந்தானே ?   ஒரு பெரிய நிறுவனத்தின் தொழில்நுட்ப  மாநாட்டிற்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் ஒரு எழுத்தாளரை அழைப்பது வழக்கம். இந்த வருடம் புவியியல், வரலாற்று ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் ஜாரெட் டைமண்ட் அவர்களை அழைத்திருந்தார்கள். அவருடைய புகழ்பெற்ற புத்தகமான ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ படித்திருக்கிறேன். அதைப்பற்றி உங்கள் தளத்தில் சில கட்டுரைகளையும்.   அவர் அரங்குக்குள் வரும்போது ஜுராசிக் பார்க் திரைப்படத்தின் இசையை ஒலிக்கவிட்டார்கள்! அவர் அணிந்திருந்த டையில் டயனோசார்கள் படம், வண்ணங்கள் மாறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114725

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57

சஞ்யசனின் கைகள் ஆடிக்குமிழிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் பிரித்தும் காட்சிகளை மாற்றிக்கொண்டே இருந்தன. அவன் கண்விழிகள் அசைந்த விரைவிலேயே அவை நிகழ்ந்தன. அவன் உள்ளத்தின் விசையை கண்களும் அடைந்திருந்தன. எனவே எண்ணியதை அவன் நோக்கினான். எண்ணிய இடத்தில் இருந்தான். ஏதோ ஒரு தருணத்தில் அவன் தன் எண்ணத்துக்கேற்றவற்றை கண்டான். தன் அகப்போக்குக்கு இயைய அப்போரை தொடுத்துக்கொண்டான். இறுதியில் அவன் அறிந்த அப்போரை அவனே அங்கே அமைத்துக்கொண்டிருந்தான். “ஆம் அரசே, நான் இப்போது சொல்லிக்கொண்டிருப்பது அக்காட்சிவெளியில் நான் அமைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114565