Daily Archive: November 4, 2018

கதைக்கரு,கதை,திரைக்கதை-சர்க்கார் ஒரு கடிதம்

சர்க்கார்- ஒரு கடிதம் சர்க்கார், அவதூறுகளின் ஊற்று சர்கார், காழ்ப்புகளும் வம்புகளும்   அன்புள்ள ஜெ.,   சர்கார் விஷயத்தில் பேசப்பட்ட வம்புகள், அவதூறுகள், நக்கல்கள், உங்கள்மீது வேண்டுமென்றே வீசப்பட்ட வசைகள் எதுவும் வியப்பளிக்கவில்லை. இது இப்படித்தான் நடக்கும்.   ஆனால் இவ்விவகாரத்தில் எனக்கு உங்களிடம் கேட்க ஒன்று உள்ளது. பாக்கியராஜ், முருகதாஸ் மற்றும் உங்கள் பேட்டிகளின் படி, இந்தக் கதை திருடப்படவில்லை, ஒரே கதைக்கருவை இருவர் ஒரேபோன்று  எழுதிவிட்டனர்.   பாக்கியராஜ் தரப்பு கூறுவது,  இதேபோல …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114806

நம் அச்சமும் அவர்களின் அச்சமும்

    தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு அன்புள்ள ஜெ, “பேயை அஞ்சுவது ஏன்?” கட்டுரை படித்தேன். பல வருடங்களுக்கு முன், புகழ் பெற்ற திகில் கதை எழுத்தாளரான ஸ்டீபன் கிங்கின் புனைவல்லாத படைப்பான Danse Macabre  என்ற புத்தகத்தை நினைவுக்குக் கொண்டு வந்தது.. அதில் கிங் திகில் கதையமைப்புகளை வகைப்படுத்தி விரித்துரைக்கிறார். அருவருப்பால் வரும் பயம் (gross-out), புலப்படாத, பரிச்சயமில்லதன பற்றிய இயல்பான‌ எச்சரிக்கை உணர்வினால் வரும் அச்சம் (fear of the unknown),  சாவைப் பற்றிய பயம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114613

வீணை தனம்மாள்

  அன்புள்ள ஜெ.,   வீணை தனம்மாளைப் பற்றி கல்கி கூறுகிறார் “சங்கீத உலகில் எவ்வளவோ அபிப்ராய பேதங்கள் இருக்கலாம். சங்கீதப் பண்டிதர்கள் ரசிப்பதை நம் போன்ற பாமரர்கள் ரசிக்கமுடியாது. சிலருக்கு பல்லவி பிடிக்கும். சிலருக்கு ராக ஆலாபனம்தான் பிடிக்கும். வேறு சிலருக்கு துக்கடாக்களிலே ப்ரீதி. ஆனால், ஒரே ஓர் விஷயத்தில் மட்டும் சங்கீத உலகத்தில் கருத்து வேற்றுமை என்பதே கிடையாது. அது என்னவெனில் கர்நாடக இசையின் சிறப்பை பரிபூரணமாகக் காணவேண்டுமெனில் வீணை தனம்மாளிடம்தான் காணலாம் என்பதுதான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114623

எழுத்தாளர் முகங்கள்

விஷ்ணுபுரம் விழா: பங்கேற்பாளர்கள் அன்புள்ள ஜெ.   நலம் தானே. தங்களது இணையக் கட்டுரைகளில் படங்களின் அளவு கட்டுரை அளவிற்கு ஒவ்வாததாக, மிகவும் பெரிதாக இருக்கிறது. There is no symmetry.. எழுத்தாளர்களின் படங்கள் உங்கள் இணையக் கட்டுரைகளில் வருவது நல்ல விஷயம் தான். இது உங்களது இணைய பக்கம் தான். படங்கள் எந்த அளவில் போடுவதற்கும் உங்களுக்கு முழு  உரிமை இருக்கிறது தான். ஒத்துக்கொள்கிறேன். இருந்தாலும், தீபாவளி விற்பனையை முன்னிட்டு, சரவணா ஸ்டோர்ஸ் தம்பியின் முகத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114735

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-56

திருதராஷ்டிரர் சங்குலனால் ஒரு துணிப்பாவையென கையாளப்படுவதை பார்த்தபடி சஞ்சயன் வாசலில் நின்றிருந்தான். நீராடி முடித்த அவன் உடல் காலைக்காற்றால் உலரத்தொடங்கிவிட்டிருந்தது. ஆனால் நாட்கணக்காக நன்கு துயிலாத அவன் உடல் தளர்வை உணர்ந்தது. வாயில் கசப்பு எஞ்சியிருக்க கைகளை நெஞ்சில் கட்டிக்கொண்டு காத்திருந்தான். அப்பால் திருதராஷ்டிரருக்கான தேர் ஒருங்கி நின்றிருந்தது. அவர் தாடை அசைய வெறும்வாயை மெல்வதுபோல் அசைத்தபடி தலையை உருட்டிக்கொண்டிருந்தார். அவ்வப்போது மெல்லிய முனகலோசை அவரிடமிருந்து எழுந்தது. அந்த ஓசை சஞ்சயனை உளமுருகச் செய்தது. அவர் அடிக்கடி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114558