Daily Archive: November 2, 2018

பிணறாயி

  கேரள முதல்வர் பிணறாயி விஜயனின் பெயரை வைத்து இங்கே சிலர் முகநூலில் களமாடிவருகிறார்கள் என்கிறார் ஆய்வாளர் நா.கணேசன். பிணறாயி என்பதை பிணத்துடன் தொடர்பு படுத்துகிறார்கள். பிணறாயி என்பதன் பொருள்தேடி அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.   கேரளத்தில் கண்ணூரிலிருந்து 20 கிமி தொலைவில் தலைசேரிக்கு அருகில் உள்ள சிறிய ஊர் பிணறாயி. கேரள முதல்வர் விஜயன் அங்கே பிறந்தார். ஆகவே பிணறாயி விஜயன் என அழைக்கப்படுகிறார். அவருடைய தந்தை முண்டயில் கோரன் ஒரு தென்னை ஏறும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114568

மீண்டு நிலைத்தவை- சுனில் கிருஷ்ணன்

  முன்னுரை: காற்றில் அலையும் ஓசை     யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’ நூலில் ஹோமோ சாபியன்ஸ் ஆகிய நாம் நம்மை விட பலசாலிகளான நியாண்டர்தல்களை எப்படி வெற்றி கொண்டு உலகை நிறைத்தோம் என்பதை விளக்குகிறார். சுமார் 30,000 ஆண்டுகள் பழமையான ஒரு நரசிம்ம வடிவை மத்திய ஐரோப்ப அகழ்வாராய்வில் கண்டெடுத்ததாக சொல்கிறார். நரசிம்மம் சர்வ நிச்சயமாக ஒரு புனைவு. ஆனால் அவனுக்கு அப்படியான புனைவு ஏன் தேவையாய் இருக்கிறது? புனைவுகள் வழியாகத்தான் அவன் மாபெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114529

நூறுநாற்காலிகள் -கடிதங்கள்

 நூறுநாற்காலிகள் வாங்க அன்புள்ள ஜெ,   நான் என்னோட வீட்டுக்கு போற வரைக்கும் அழக்கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா,வாசல் வரதுக்குள்ள அழுதிட்டேன். உங்களோட ரெண்டு மூணு சிறுகதை தொகுப்பு படிச்சு இருக்கேன். ஆனா, இந்த ‘அறம்’ தொகுப்புல மட்டும் ஒவ்வொரு கதை படிக்கும் போது எனக்கு ஒவ்வொரு திறப்புகள் கிடைக்குது. என்னால தாங்கவே முடியாத சந்தோசத்தை கொடுத்ததும் இந்தக் கதைகள் தான். என்னால சுமக்கவே முடியாத சோகத்தை கொடுத்ததும் இந்தக் கதைகள் தான்.   இன்னைக்கு ‘நூறு நாற்காலிகள்’ கதை படிச்சேன். படிக்க படிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114575

நெல்லையில் ஒருநாள்- கடலூர் சீனு

இது பத்தி நீங்க ஒரி பண்ணிக்காதீங்க , உங்க வேலைய பாருங்க ,நீங்க நெல்லை போக ,பயண ஏற்பாடு, நீங்க கிளம்புற நேரம் ,ரெடியா இருக்கும் ஓக்கேயா , அழகா நீட்டா  ஓகே டன்   பத்து  நாளாக சிவாத்மா மணிமாறனுக்கு சொல்லிக்கொண்டிருத்த அதே பதிலை ,நாங்கள் கிளம்பும் நாளான வெள்ளிக்கிழமை மதியமும் சொன்னார் .  நானும் , திருமாவளவனும் கிளம்பி பாண்டி வந்து இறங்குகையில் , சிவாத்மாவால் கைவிடப்பட்டிருந்த மணிமாறன் வேறு பயண ஏற்பாடு முடித்திருந்தார் . …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/115579

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-54

பகுதி எட்டு : கதிரோன் சஞ்சயன் கஜபதத்தில் அமைந்த திருதராஷ்டிரரின் குடிலுக்குள் நுழைந்து உள்ளே மூங்கில் தட்டியாலான மஞ்சத்தில் துயில்கொண்டிருந்த திருதராஷ்டிரரை அணுகி “பேரரசே!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். சிற்றொலிகளையே அறிவது அவர் செவி என அவன் அறிந்திருந்தான். திருதராஷ்டிரர் முனகி “ஆம், கிளம்ப வேண்டியதுதான்” என்றார். “புலரி அணுகுகிறது, பேரரசே” என்று சஞ்சயன் சொன்னான். “பெரும்போர்!” என்று அவர் சொன்னார். “முற்றழிவு!” கைகளை அசைத்து தாடை நடுங்க “போரெனில் வெறும் குருதி! வேறொன்றுமல்ல!” என்றபடி விழித்துக்கொண்டார். “யார்?” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114533