Monthly Archive: October 2018

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51

யுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன் அளித்த ஓலையை படைத்தலைவன் தீர்க்கபாகு படித்தான். யுதிஷ்டிரர் முகவாயை தடவியபடி அதை கேட்டிருந்தார். அவர் மிகவும் தளர்ந்திருந்தார். பீமனும் தளர்ந்தவன்போலிருந்தான். வழக்கமாக அவையில் நின்றுகொண்டிருக்கும் அவன் பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். முந்தையநாள் போரிலும் பாண்டவப் படைகளுக்கு மிகப் பெரிய இழப்புகள் அமைந்திருந்தன. பிரியதர்சனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114425

கடைத்தெருவை கதையாக்குதல்…

  1962 நான் பிறந்த அதேவருடம் மலையாள எழுத்தாளர் எஸ்.கெ.பொற்றேகாட் ஒருநாவல் எழுதிவெளியிட்டார். ’ஒரு தெருவின் கதை’. கோழிக்கோடு நகரத்தின் முக்கியமான கடைவீதியான மிட்டாய்த்தெருவின் கதை அது. உண்மையில் தெருவின் கதை அல்ல, தெருவாழ் மக்களின் கதை. தெருவில் வாழும் பிச்சைக்காரர்கள், தினக்கூலிகள், அனாதைப்பையன்கள், வேசிகள் ஆகியோரின் கதை. கூடவே கடைவணிகர்களின் கதை. அவர்கள் எழுச்சிகளின் வீழ்ச்சிகளின் சரித்திரம். கேரள சாகித்ய அக்காதமி விருது பெற்ற அந்நாவல் இன்றும் மலையாள இலக்கியத்தில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்பட்டு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9185

கட்டண உரை -கடிதங்கள்

கட்டண உரை –ஓர் எண்ணம்   கட்டண உரை-அறிவிப்பு அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு   கிழக்கிந்திய கம்பெனி (1600 – 1874)யை கேள்விப்பட்டிருப்போம். இதேபோல Dutch India Company, Danish India Company, French East India Company போன்றவை கிட்டத்தட்ட அன்றிருந்த உலக மக்கள் தொகையின் பாதியை பங்குபோட்டு ஆண்டு கொண்டிருந்ததைப் பற்றி Thomas Carlyle (1795 – 1881) என்பவர் யோசிக்கிறார். அதை இன்னும் ஒழுங்குபடுத்தி “On Heroes, Hero-Worship, and The Heroic …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114138

வெய்யில் கவிதைகள்: குரூரமான அபூர்வங்கள்

  வெயிலின் கவிதைகளுக்கு பிச்சமூர்த்தி முன்மொழிந்த மரபின் ஓர்மை உண்டு. அதன் சந்தங்களை நாட்டார்வழக்கின் சந்நதமாக அவர் கவிதையில் நிகழ்த்திக் காட்டுகிறார். நிகழ்வதற்கு வாய்ப்பற்ற ஒன்றைக் கவிதைக்குள் சிருஷ்டிப்பதன் மூலம் அவர் க.நா.சு.வின் விநோதத்தையும் கொண்டுவர முயல்கிறார். அவரது கவிதைகளுள் சில அலங்காரம், அசாதாரணம் ஆகிய இந்த இரு அம்சங்களையும் களைந்துவிட்டுப் பூரண சுதந்திரத்தையும் எய்திருக்கின்றன. வடிவ ரீதியில் வெய்யில் கவிதைகள் கொண்டுள்ள இந்த அம்சத்தால், அவை வரையறைக் கோட்பாட்டுக்குள்ளிருந்து திமிறுகின்றன. வெயில் கவிதைகள் பற்றி மண்குதிரை

Permanent link to this article: https://www.jeyamohan.in/114417

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-50

கோசல நாட்டரசன் பிருஹத்பலன் சொல்சூழவையிலிருந்து வெளியே வந்ததும் தயங்கி நின்றான். அவனருகே வந்த தேர்வலன் “அரசே” என்றான். அவனிடம் “செல்க!” என கைகாட்டிவிட்டு அவந்தியின் விந்தனும் அனுவிந்தனும் வருவதற்காகக் காத்து நின்றிருந்தான். அவர்கள் ஒருவர் இருவராகும் விழிமயக்கு என அருகணைந்து தலைவணங்கியதும் “நாம் பேசவேண்டும்” என்றான். விந்தன் “தனியாகவா?” என்றான். “ஆம், இங்கே பேச இயலாத சில உள்ளன” என்றான் பிருஹத்பலன். “நம் குடிலுக்குச் செல்வோம்… கவசமணிய இன்னும் பொழுதுள்ளது” என்றான் விந்தன். விந்தன் பேசுகையில் அதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114331

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

இனிய ஜெயம் வழமைபோல கவிதை தேடுதலில் கண்டடைந்தவை இவை .  முகுந்த் நாகராஜன் எழுதிய புதிய கவிதைகள் இவை  முகுந்த் form ல இருக்கார் போல . கடலூர் சீனு வீட்டைப் பிரித்தல் ================= பாத்ரூம் கதவென்று தப்பாக நினைத்த பாப்பா வீட்டுக்கதவைத் திறந்த உடனேயே போய் விட்டது. ஹாலைக் கடந்து படுக்கையறைக்குள் நுழைந்து பாத்ரூம் கதவைத் திறப்பதற்குள் காலம் கடந்து விட்டது. வழியெங்கும் சிந்திய நீர்த்துளிகள் வீட்டை இரண்டாகப் பிரித்து விட்டிருந்தன, குழந்தைக்கு முன், குழந்தைக்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114299

சிற்பங்களை அறிவது…

அன்புள்ள ஜெயமோகனுக்கு,   மன்மதன் சிறுகதையிலும், இந்தியப் பயணங்கள் பயணக் குறிப்பிலும், மற்றும் பெயர் மறந்து போன உங்களது எழுத்துக்கள் சிலவற்றிலும் சிற்பங்கள் பற்றிய நுணுக்கமான தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்தியப் பயணங்களில், நீங்கள் முதலில் சென்ற தாரமங்கலம் தான் நான் பிறந்த ஊர். இங்குள்ள கைலாசநாதர் கோவில் சிற்பங்களைப் பலமுறைச் சென்று பார்த்துள்ளேன். இருந்தாலும் உங்களின் இ.ப படித்த பின்பு, சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றதும் முதல் வேலையாக கோவிலுக்குச் சென்று, நீங்கள் குறிப்பிட்டவையும் இன்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114365

உரைகள்-கடிதங்கள்

தினமும் உங்களை படித்து வருபவனாயினும், உங்கள் உரைகள் ஒவ்வன்றிலும் புதிதாக 20 விஷயங்களாவது கற்று தேறுகிறேன்.  ஒரு மணி நேர காணொளி என்றால்  2 மணி நேர இலக்கிய போதையில் கிரங்கும் குதூகலம்.  நடுவில் நிறுத்தி, கேட்டவற்றை அசை  போட்டு, மீண்டெழுந்து  தொடர்வது தான்  என் வாடிக்கை .  உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியினையும் எங்களுக்கான அனுபவமாகியதற்கு  எப்போதும் கடமை பட்டுள்ளோம். நன்றி ரமேஷ்     அன்புள்ள ஜெ   உங்கள் காணொளிகள் என்னைப்பொறுத்தவரை மிகச்சிறந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113929

சர்க்கார் அரசியல்

  சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது   சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114460

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49

தெற்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த புரவிவீரர்களில் இருவர் படைத்தலைவர்களுக்கான கொடியுடன் இருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். ஐயத்துடன் தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த படைத்தலைவர்களிடம் விரைவு கூட்டும்படி கைகாட்டிவிட்டு பாய்ந்து அதை நோக்கி சென்றான். படைத்தலைவர்கள் எல்லைக்காவல் அரணுக்கு வருவது அரிது. அரசரோ நிகரானவரோ வந்திருக்கவேண்டும். அன்றி ஏதேனும் ஒவ்வாப் பெருநிகழ்வு அமைந்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் போர் முடிந்ததும் படையிலிருந்து கிளம்பி அருகிலிருக்கும் சிற்றூரான மிருண்மயத்திற்குச் சென்று அங்கு காவலர்மாளிகையில் தங்கியிருந்த திரௌபதிக்கும் குந்திக்கும் போர்நிகழ்வை சுருக்கி சொல்லி அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114383

Older posts «

» Newer posts