Daily Archive: October 31, 2018

அஞ்சலி வடகரை வேலன்

  விஷ்ணுபுரம் நண்பர்களில் ஒருவரும் ஆரம்பகாலம் முதல் விருதுவிழாக்களை ஒருங்கிணைப்பதில் முன்னின்றவருமான நண்பர் வடகரை வேலன் இன்று மதியம் காலமானார். சென்ற ஒருமாத காலமாகவே நோயுற்றிருந்தார். இதயம், நுரையீரல் சிறுநீரகம் என ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்துகொண்டிருந்தது. இரண்டுநாட்களுக்கு முன்னரே செந்தில் அவர் அபாயகட்டத்தில் இருக்கிறார் என்றார். ஆனால் சிகிழ்ச்சையில் பயன் தெரிகிறது என்றும் சொல்லப்பட்டது. இவ்வார இறுதியி;ல் கோவை செல்கையில் சந்திக்கலாமென்றிருந்தேன்.   இலக்கிய ஆர்வம் கொண்டவர். தமிழில் நெடுங்காலமாகவே வலைப்பூ எழுதி வந்தவர்களில் ஒருவர். அனைவருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114579

இரண்டு காடுகளின் நடுவே- மலைக்காடு

    நியூயார்க் நகரத்திற்குச் சென்றிருந்தபோது ஒரே இடத்தில் இரண்டு மகத்தான நினைவுச்சின்னங்களைக் காணமுடிந்தது. எல்லிஸ் தீவில் அமைந்திருக்கும் குடியேற்ற அருங்காட்சியகம். அதன் தலைமேல் என எழுந்து நின்றிருக்கும் சுதந்திரதேவியின் சிலை. கிட்டத்தட்ட இருநூறாண்டுகளாக அமெரிக்காவின் மண்ணில் குடியேறிக்கொண்டிருந்த ஐரோப்பியர்கள் கப்பலில் வந்திறங்கும் முதல் காலடிநிலம் அது. மதநம்பிக்கையால் துரத்தப்பட்டவர்கள், வெவ்வேறு அரசுகளால் வேட்டையாடப்பட்டவர்கள், அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம் போன்ற செயற்கை பஞ்சங்களால் பிழைப்புதேடி வந்தவர்கள், புதிய வாழ்க்கையைத்தேடி கப்பலேறியவர்கள்…   எல்லிஸ் தீவிலுள்ள புகைப்படங்கள் வழியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114060

இருந்தவர்கள் -கடிதங்கள்

  இவர்கள் இருந்தார்கள்       அன்புள்ள  ஜெ,     நலம்   தானே ,  தங்களின்  இவர்கள்  இருந்தார்கள் என்ற கட்டுரை  தொகுதியை  நேற்று வாசித்தேன்.அருமையான கட்டுரைகள்.சில கட்டுரைகளை  ஏற்கனவே  தங்கள்  தளத்தில்  வாசித்து  இருந்த போதிலும்  ஒரு கட்டுரை தொகுதியாக  வாசிப்பது ஒரு தனி  அனுபவம்  தான். இப்புத்தகம்   அந்த மனிதர்களின் வாழ்வையும் அவர்களின் அளுமையையும் ஒரு புனைக்கதை போல  காட்சிப்படுத்தியது.  கலை , இலக்கியத்தில்  அவர்களின் பங்களிப்பையும்  ஆவணப்படுத்தி  இருக்கிறீர்கள்.நன்றி.     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113918

சிலுவையின் கதை

  அன்புள்ள ஐயா சிலுவைராஜ் சரித்திரத்தின் மீது கவனம் ஈர்த்தமைக்கு நன்றி ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞனின் தன் வரலாறு. 1950 இல் பிறந்த சுதந்திர இந்தியாவின் குழந்தை சாதிக்கொடுமைகளால் மதத்தில் ஆறுதல் தேடி, மதத்துக்குள்ளும் புகுந்துவிட்ட சாதியால் ஓட்டப் படும் கதை   உள்ளுறையாக வாழ்வு முழுவதும் ஒரு விளையாட்டுத் துடுக்குத் தனத்தால் தன்னைப் போர்த்துக் கொள்கிறான் சிலுவை. அவனது பாட்டி ராக்கம்மா  பொறுமையுடன் தாங்கிக் கொள்வதன் மூலம் இழிவைக் கடந்து செல்கிறாள். பாறையைப் போன்ற பொறுமை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114506

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-52

அவந்தி நாட்டு அரசன் விந்தன் தன் தேரில் கௌரவப் படையின் எட்டாவது அக்ஷௌகிணியின் இரண்டாம் நிரையில் வில்லுடன் நின்றிருந்தான். சற்று அப்பால் அவனுடைய இரட்டையனும் அவந்தியின் இணையரசனுமாகிய அனுவிந்தன் அவனைப் போலவே கவசங்கள் அணிந்து, அவனுடையதே போன்ற தேரில் நின்றிருந்தான். விந்தன் அனுவிந்தனைவிட ஓரிரு நொடிகளே அகவையில் முந்தியவன். அந்த ஒரு நொடி அவன் அன்னையால் அவனுக்கு சொல்லப்பட்டது. உலகுக்கும் அவளால்தான் அது சொல்லப்பட்டது. தன் உள்ளத்தால் அவன் அதை பெருக்கிக்கொண்டான். நாழிகையும் நாளும் ஆண்டும் என்றாக்கி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114449