Daily Archive: October 30, 2018

சர்க்கார், இறுதியாக…

ஜெ   உடனே உங்கள் வழக்கமான எதிரிகள் தாண்டிக்குதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே இதை எழுதுகிறேன். இப்போதுள்ள சூழலில் சர்க்கார் படத்தின் கதை, திரைக்கதை எவருடையது? உங்கள் பங்களிப்பு என்ன?   வெற்றிச்செல்வன்   அன்புள்ள வெற்றிச்செல்வன்,   நான் ஏற்கனவே சொன்னதுதான். நான் நேரில் அமர்ந்து பார்த்ததன் அடிப்படையில் அதன் கதை,திரைக்கதை ஏ.ஆர்.முருகதாஸுடையது. அது ஒற்றைவரியிலிருந்து திரைக்கதையானபோது நான் உடனிருந்தேன். ஆகவே அதைப் பதிவுசெய்வது என் கடமை என நினைத்தேன்   கதை உருவாக்கத்தில் அவருடன் நான்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114547

சர்கார்- இறுதியில்…

சர்க்கார் அரசியல்   சர்க்கார் பற்றி ஏகப்பட்ட விசாரிப்புகள். பலர் நண்பர்கள் என்பதனால் என் விளக்கம். பொதுவாக நான் சம்பந்தப்பட்ட எதிலும் நான் அறிந்த உண்மையை சொல்வது என் வழக்கம். எப்போதுமே விளைவுகளைப்பற்றிக் கவலைகொள்வதில்லை. இதிலும் நான் சொன்னதே உண்மை.   பலகோடி முதலீடு செய்யப்பட்ட, வெளியீட்டுநாள் குறிக்கப்பட்ட சினிமாவின் கட்டாயங்களும் சமரசங்களும் நான் அறிந்தவையே. அதையும் என் முந்தைய கட்டுரையின் கடைசி பத்தியில் நான் குறிப்பிட்டிருந்தேன். [மற்றபடி இதில் ஆயிரம் வணிகநோக்கங்கள்,பேரங்கள்] இது இவ்வாறுதான் முடியுமென்பதே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114540

சேலத்தில் ஒரு நாள்

  நாலைந்து நாட்களாகவே வீட்டில் ஒரு காய்ச்சல் சூழல். முதலில் அருண்மொழிக்குக் காய்ச்சல் வந்தது. உடுப்பி சென்று திரும்பிய கையோடு. உண்மையில் இந்த ‘வைரல் ஃபீவர்’ என்றும் ‘ஃப்ளு’ என்றும் இவர்கள் சொல்லும் நான்குநாள் காய்ச்சல் ஓர் இனிய அனுபவம். ஓய்வுநாட்கள் உள்ளவர்கள் தாங்களாகவே வலிய வரவழைத்து இன்புறலாம். இனிய உடல்தளர்வு, சுகமான கைகால்குடைச்சல், மாத்திரை போட்டுக்கொண்டு நாள்முழுக்க தூங்கலாம். இனிய ஆனால் விபரீதமான கனவுகள் காய்ச்சலின்போது மட்டுமே வரும்.   சைதன்யா டெல்லி மீளவேண்டும். ஆனால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114495

சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்   பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு     சரவணன் சந்திரனின் “சுபிட்ச முருகன்” நாவல் குறித்து தாங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். இந்த நாவலை உடனே வாசிக்க வேண்டும் என்ற மனநிலையில், மின் புத்தகமாக வாங்கலாம் என்று எண்ணி கிண்டிலில் தேடினேன். ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.     இதைப்போன்று நீங்கள் முன்னரும் எழுதிய குறிப்புகளை வைத்து பல நாவல்களை படிக்க எண்ணி தேடியிருக்கிறேன். உதாரணம் சூல், ஆப்பிளுக்கு முன், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114398

காடு- வாசிப்பனுபவம்

    காடு அமேசானில் வாங்க காடு வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் கிண்டில் வாங்கி முதலில் வாசித்த நூல் காடு. வாசித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் ஆகின்றன. வாசித்து முடித்த உடன் கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் சொற்கள் கிட்டவில்லை. மனதில் முழுக்க காடு நிறைந்து இருந்தது. இன்று தெளிவாக கதை மனதில் இருக்கிறது, எதோ வகையில் நான் முதன் முதலாக சுயமாக எழுதுகிறேன். இதற்கு முன் சில கேள்விகளை உங்களிடம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114404

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51

யுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன் அளித்த ஓலையை படைத்தலைவன் தீர்க்கபாகு படித்தான். யுதிஷ்டிரர் முகவாயை தடவியபடி அதை கேட்டிருந்தார். அவர் மிகவும் தளர்ந்திருந்தார். பீமனும் தளர்ந்தவன்போலிருந்தான். வழக்கமாக அவையில் நின்றுகொண்டிருக்கும் அவன் பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான். முந்தையநாள் போரிலும் பாண்டவப் படைகளுக்கு மிகப் பெரிய இழப்புகள் அமைந்திருந்தன. பிரியதர்சனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114425