Daily Archive: October 28, 2018

முகுந்த் நாகராஜனின் குழந்தைகள்

இனிய ஜெயம் வழமைபோல கவிதை தேடுதலில் கண்டடைந்தவை இவை .  முகுந்த் நாகராஜன் எழுதிய புதிய கவிதைகள் இவை  முகுந்த் form ல இருக்கார் போல . கடலூர் சீனு வீட்டைப் பிரித்தல் ================= பாத்ரூம் கதவென்று தப்பாக நினைத்த பாப்பா வீட்டுக்கதவைத் திறந்த உடனேயே போய் விட்டது. ஹாலைக் கடந்து படுக்கையறைக்குள் நுழைந்து பாத்ரூம் கதவைத் திறப்பதற்குள் காலம் கடந்து விட்டது. வழியெங்கும் சிந்திய நீர்த்துளிகள் வீட்டை இரண்டாகப் பிரித்து விட்டிருந்தன, குழந்தைக்கு முன், குழந்தைக்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114299

சிற்பங்களை அறிவது…

அன்புள்ள ஜெயமோகனுக்கு,   மன்மதன் சிறுகதையிலும், இந்தியப் பயணங்கள் பயணக் குறிப்பிலும், மற்றும் பெயர் மறந்து போன உங்களது எழுத்துக்கள் சிலவற்றிலும் சிற்பங்கள் பற்றிய நுணுக்கமான தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இந்தியப் பயணங்களில், நீங்கள் முதலில் சென்ற தாரமங்கலம் தான் நான் பிறந்த ஊர். இங்குள்ள கைலாசநாதர் கோவில் சிற்பங்களைப் பலமுறைச் சென்று பார்த்துள்ளேன். இருந்தாலும் உங்களின் இ.ப படித்த பின்பு, சென்னையிலிருந்து ஊருக்குச் சென்றதும் முதல் வேலையாக கோவிலுக்குச் சென்று, நீங்கள் குறிப்பிட்டவையும் இன்ன …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114365

உரைகள்-கடிதங்கள்

தினமும் உங்களை படித்து வருபவனாயினும், உங்கள் உரைகள் ஒவ்வன்றிலும் புதிதாக 20 விஷயங்களாவது கற்று தேறுகிறேன்.  ஒரு மணி நேர காணொளி என்றால்  2 மணி நேர இலக்கிய போதையில் கிரங்கும் குதூகலம்.  நடுவில் நிறுத்தி, கேட்டவற்றை அசை  போட்டு, மீண்டெழுந்து  தொடர்வது தான்  என் வாடிக்கை .  உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியினையும் எங்களுக்கான அனுபவமாகியதற்கு  எப்போதும் கடமை பட்டுள்ளோம். நன்றி ரமேஷ்     அன்புள்ள ஜெ   உங்கள் காணொளிகள் என்னைப்பொறுத்தவரை மிகச்சிறந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113929

சர்க்கார் அரசியல்

  சினிமாக்களைப்பற்றி இந்த தளத்தில் எழுதக்கூடாது என்பதே என் எண்ணம். ஆனாலும் இது ஒரு சுவாரசியமான வாழ்க்கைநிகழ்வு, கதைக்களம் என்பதனால் இது   சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. எந்தக்காட்சியும் எவரேனும் ஒருவருக்குப் பிடிக்காது. பிடித்திருந்தால் விஜயின் இயல்புக்குச் சரிவருமா என்ற சந்தேகம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114460

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-49

தெற்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த புரவிவீரர்களில் இருவர் படைத்தலைவர்களுக்கான கொடியுடன் இருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். ஐயத்துடன் தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த படைத்தலைவர்களிடம் விரைவு கூட்டும்படி கைகாட்டிவிட்டு பாய்ந்து அதை நோக்கி சென்றான். படைத்தலைவர்கள் எல்லைக்காவல் அரணுக்கு வருவது அரிது. அரசரோ நிகரானவரோ வந்திருக்கவேண்டும். அன்றி ஏதேனும் ஒவ்வாப் பெருநிகழ்வு அமைந்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் போர் முடிந்ததும் படையிலிருந்து கிளம்பி அருகிலிருக்கும் சிற்றூரான மிருண்மயத்திற்குச் சென்று அங்கு காவலர்மாளிகையில் தங்கியிருந்த திரௌபதிக்கும் குந்திக்கும் போர்நிகழ்வை சுருக்கி சொல்லி அவர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114383