Daily Archive: October 27, 2018

தோற்கடிக்கப்பட்ட அறிவுத்தரப்பு

அன்புள்ள ஜெ     ””இரண்டு அழிவுசக்திகளின் நடுவே அகப்பட்டுக்கொண்டிருக்கிறது இந்து மதம். வெவ்வேறு அயல்மத உதவிகளுடன் அதை அழிக்கத்துடிக்கும் ஒரு தரப்பு. அதை ஓர் வெறிகொண்ட அரசியல்தரப்பாக்கி, அதைக் கருவியாக்கி அதிகாரத்தை அடைந்து, அப்பட்டமான ஊழலாட்சியை நிகழ்த்தும் ஒரு தரப்பு”” என குறிப்பிட்டு இருக்கிறீர்கள்   இன்னொரு தரப்பு ஒன்று உண்டு என நினைக்கிறேன்…  அப்பாவித்தனம் அல்லது அறியாமை தரப்பு ஒன்று உண்டு..   முதல் இரண்டு தரப்புகளுடன் நீங்கள் பேசுவதற்கு ஒன்றும் இல்லை.. ஆனால் மூன்றாவது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114258

ஆலயம்,காந்தி -இருகேள்விகள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஒரு கேள்வி, நானும் என் 2 நண்பர்களும் நேற்று த்ரிசூர் வடக்குநாதன் ஆலயம் சென்றோம். ஆலயம் வாசலில் ஹிந்து அல்லாதவற்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்னும் அறிவிப்பு பலகையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் தமிழகத்தின் சிலபல கோவில்களுக்கு சென்றவன், எங்கும் இந்த தடை கண்டதில்லை. சட்டை அணிய கூடாது போன்ற சில விதிமுறைகள் இருக்கும், அதை கடைபிடித்தே செல்வது வழக்கம். பெரிய கோவில்கள் தரும் அமைதி எனக்கு மிகவும் உவப்பானவை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114451

கட்டண உரை- கடிதம்

  கட்டண உரை-அறிவிப்பு கட்டண உரை –ஓர் எண்ணம்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.   விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் இருநாள் பெருவிழாவாக நடத்தி வருகிறீர்கள். வெளியூர்களில் இருந்து வந்து கோவையில் தங்கி நிகழ்ச்சியில் ஆர்வத்தோடும் அறிவு வேட்கையோடும் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 200 பேரைத் தாண்டுகிறது. ஆண்டுக்கு ஆண்டு அந்த எண்ணிக்கை கூடி வருவதும் நன்மாறுதலே. எல்லாருக்கும் விருந்துணவு, தங்குமிடங்கள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் செய்து வருகிறீர்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114092

குடும்பத்திலிருந்து விடுமுறை-கடிதம்

  குடும்பத்தில் இருந்து விடுமுறை   அன்புள்ள ஜெயமோகன்  அவர்களுக்கு     குடும்பத்திலிருந்து விடுமுறை படித்து ஒருவாரத்துக்கு மேலாகியும் குடும்பப்பணிகளின் சுமையால் இன்றுதான் உங்களுக்கு அதுகுறித்து எழுத முடிந்தது.     நீங்கள் இந்தப்பதிவை எழுதியது , என்னைபோல வீட்டிலும் வெளியிலும் வேலைசெய்யும் அனைத்துப்பெண்களின் சார்பாகவும்  என்று எடுத்துக்கொண்டு மகிழ்ந்தேன்.     அருண்மொழி அவர்களுக்கு ’என்னமாம் செய்’  என்று நீங்கள் சொன்னது போல பேரன்புடன் சொல்பவர்கள் அத்தனை அதிகமில்லை. கடிந்துகொண்டும் சலித்துக்கொண்டும்  (இப்படியான  முகாம்களோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114229

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-48

பகுதி ஏழு : காற்றன் தெற்கெல்லையின் பன்னிரண்டாவது காவலரணின் காவலர்தலைவனாகிய சந்திரநாதன் அவனே தன்னை காணும்பொருட்டு வந்தது துர்மதனுக்கு வியப்பை அளித்தது. தெற்கு விளிம்பில் அமைந்த தன் பாடிவீட்டில் அவன் அன்றைய போரின் அறிக்கையை கேட்டுக்கொண்டிருந்தான். அவன் உடலின் புண்களுக்கு மருந்திட்டு வேது அளித்துக்கொண்டிருந்தனர் மருத்துவர். சிறு அம்புகளை அவர்கள் பிடுங்கும்போது அவன் முனகினான். அறைக்குள் கந்தகநீரின் எரிமணம் நிறைந்திருந்தது. சூழ்ந்து நின்றிருந்த படைத்தலைவர்கள் தங்கள் படைகளின் அழிவை அறிவித்துக்கொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் படைகளின் அழிவையும் எச்சத்தையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114343