Daily Archive: October 25, 2018

சேலத்தில் பேசுகிறேன்

  சேலம் தமிழ்ச்சங்கத்தில் வரும் 28-10-2018 [ஞாயிற்றுக்கிழமை] தமிழிலக்கியத்தின் ஊடும்பாவும்’ என்றதலைப்பில் பேசுகிறேன். ஒன்றுடனொன்று முரண்பட்டு அவ்விசையில் தமிழிலக்கியத்தை நெய்திருக்கும் இரண்டு அடிப்படைக்கூறுகளைப்பற்றிய உரை.   இடம் சேலம் தமிழ்ச்சங்கம் நாள் 28-10-2018 பொழுது மாலை 6 மணி வாய்ப்பிருக்கும் நண்பர்கள் வருக!

Permanent link to this article: https://www.jeyamohan.in/114436

அஞ்சலி :யுகமாயினி சித்தன்

  கோவையிலிருந்து யுகமாயினி என்னும் சிற்றிதழை நடத்திய சித்தன்  [சித்தன் பிரசாத்]  அவர்கள் காலமானார் என்னும் செய்தி அறிந்தேன். இடதுசாரிப் பார்வை கொண்டவர். கோவை ஞானி அவர்களுக்கு அணுக்கமானவர். எஸ்.பொன்னுத்துரை அவர்களுக்கும் அணுக்கமானவராக இருந்தார்.   இடதுசாரி நோக்குகளுடன் எழுதவரும் இளைஞர்களுக்கான களமாக யுகமாயினி இருந்தது. தன் கருத்துக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டச் சிற்றிதழாளர் சித்தன். ஒருசில முறை நேரில் சந்தித்து முகமன் உரைத்திருக்கிறேன். சிற்றிதழாளர் என்பதற்கு அப்பால் அவருக்கும் எனக்கும் பொதுவாக ஏதுமில்லை. ஆயினும் அந்த தீவிரம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114428

இடஒதுக்கீடு ஒருகேள்வி

அன்பிற்குரிய ஜெயமோகன் சர்,   வணக்கம். நான் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவன். கேரளா மாநிலம் கோழிக்கோடு தான் என் சொந்த ஊர். தாயார் கண்ணூர் மாவட்டம் பரசினிக்கடவை சேர்ந்தவர். தந்தையின் வேலை நிமித்தமாக ஈரோட்டில் வளர்ந்ததால் சொந்த ஊரும் அங்கே என் வீட்டை சுற்றி உள்ள உறவின பிராமணர்களுமாயும் எனக்கு பரிச்சயம் குறைவு. அதனாலேயே வலதுவாத சிந்தனையோடு அங்குள்ள என் உறவினர்களுக்கும் என் தந்தைக்கும் இருக்கும் உடன்பாடு எனக்கு இல்லை. என் தாய் கம்யூனிசம் பேசுவார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114211

’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள்.

  ‘நானும்’ இயக்கம், எல்லைகள் தருண் தேஜ்பால்களும் பெண்களும் ’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா? அன்புள்ள ஜெயமோகன், ஆம். நீங்கள் சொல்வது போல இன்றுள்ள சூழலில் பெண் பாலியல் ரீதியாக ‘மாட்டேன்’ என்று சொல்லும் உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல உடல்கவர்ச்சியின்றி ஆண்-பெண் உறவுகள் இருக்க முடியாது. நாம் ஐரோப்பிய வாழ்க்கைமுறையை நோக்கி நகர்ந்தாலும் ஒரு அமெரிக்கனைப் போலவோ ஐரோப்பியனைப் போலவோ டேட்டிங்கிற்கு இந்திய ஆண் அழைப்பதில்லை. மேலும் டேட்டிங் என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114395

வெண்முரசு கிண்டில் -சலுகை

  வெண்முரசு நூல்களுக்கு கிண்டில் சிறப்புச் சலுகை விலையை அறிவித்திருக்கிறது. [பார்க்க அமேசான் பக்கம்]  ஆர்வமுள்ள நண்பர்கள் வாங்கலாம்   ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/114362

என் படங்கள்

  அன்புள்ள ஜெ   வரவிருக்கும் மூன்று படங்களில் நீங்கள் உங்கள் அரசியலைப் பேசியிருப்பதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. அல்லது அவ்வாறு உங்கள் வாசகர்கள் கருதுவதாக. நீங்கள் உங்கள் அரசியலை அவற்றில் எழுதியிருக்கிறீர்களா என்ன?   சந்திரகுமா   அன்புள்ள சந்திரகுமார்   தமிழ்மக்கள் அதிகமாகக் கவனிப்பது சினிமாவை. ஆகவே சினிமா சம்பந்தமான ஏதேனும் செய்தியை போட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கட்டாயம் இதழ்களுக்கு உள்ளது. அதேசமயம் சினிமா குறித்து அதிக செய்திகள் இன்று இல்லை. சொல்லப்போனால் சினிமா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114372

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-46

பாண்டவப் படையின் நடுவே பாஞ்சால அக்ஷௌகிணியின் ஏழாவது புரவிப்படையின் பரிவீரனாகிய பீலன் அனிலையெனும் பெரும்புரவியின் மீது அமர்ந்திருந்தான். வலக்கையில் நீண்ட குத்துவேலை தண்டை நிலத்தூன்றிப் பற்றி இடக்கையால் கடிவாளத்தை தளர்வாகப் பிடித்து சேணத்தில் கால்களை நுழைத்து உடல் நிமிர்த்தி நீள்நோக்கு செலுத்தி அசையாச் சிலையென காத்திருந்தான். அவனுக்கு முன்னால் நான்கு அடுக்குகளுக்கு அப்பால் படைகளின்  பொருதுமுகத்தில் இரு எடைமிக்க இரும்புத்தகடுகள் உரசிக்கொள்வதுபோல பேரோசையும் அனல்பொறிகளென அம்புகளும் எழுந்துகொண்டிருந்தன. ஆடியை நோக்கும் ஆடியிலென இருபுறமும் புரவிகளின் நேர்நிரை விழி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114341