Daily Archive: October 24, 2018

அஞ்சலி- ந.முத்துசாமி

  தமிழ்நாடகத்துறையிலும் நாட்டாரியலிலும் அழுத்தமான பங்களிப்பை அளித்தவரும் சிறுகதையாசிரியருமான ந.முத்துசாமி இன்று காலமானார். நீர்மை என்னும் அவருடைய சிறுகதைத் தொகுதி முக்கியமானது. நீர்மை, செம்பொனார்கோயில் போவது எப்படி போன்ற கதைகள் தமிழின் சிறந்த கதைகளின் பட்டியலில் வருபவை   ந.முத்துசாமிக்கு அஞ்சலி    

Permanent link to this article: https://www.jeyamohan.in/114380

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன்

  ‘மெய்யறிதல் என்பது ஒரு திரிபுநிலை’ என்ற சொல்லை எப்போதோ என் குறிப்பேடு ஒன்றில் எழுதிவைத்திருந்தேன். பழையகால தியானக்குறிப்புகளை எடுத்துப்பார்த்தபோது அந்தவரி கண்ணில் அறைந்தது. அதை ஏன் எழுதினேன், எங்கிருந்து பெற்றேன் என நினைவிருக்கவில்லை. ஆனால் சிலநாட்கள் அந்த வரி உடனிருந்து உழற்றிக்கொண்டே இருந்தது.   பின்னர் அவ்வரியை என் அனுபவங்களினூடாக ஆராயத்தொடங்கினேன். நான் துறவுக்குநிகராக அலைந்த நாட்களில் பார்த்தவர்கள் ஒருபக்கம் அனைத்தையும் விட்டு வந்தவர்கள், எவ்வகையிலோ மெய்மையை தொட்டவர்கள். அன்றேல் அதைநோக்கி எழுந்தவர்கள். மறுபக்கம் திரிபடைந்தவர்களும்கூட. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113638

’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா?

  ‘நானும்’ இயக்கம், எல்லைகள் அன்புள்ள ஜெயமோகனுக்கு,     நேற்றைய  கடித-பதிலில் ஆண் பெண்ணிடம் விழைவை வெளிப்படுத்துவது சீண்டலோ அத்துமீறலோ அல்ல என்று குறிப்பிட்டிருந்தீர்கள். நீங்கள் குறிப்பிடுகின்ற விழைவு காதல் விருப்பம் குறித்தென நான் பொருள்கொண்டு வாசித்தேன். அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். எவ்வாறு காதல் விழைவிற்கும் பாலியல் அத்துமீறலுக்கும் பெண்களுக்கு வேறுபாடு தெரியாத நிலை உள்ளதோ அதேபோல ஆண்களுக்கு காதல் விழைவிற்கும் பாலியல் விழைவில் படுக்கைக்கு அழைப்பதற்கும் வேறுபாடு தெரியவில்லை. “பாருங்கள், ஆசானே சொல்லிவிட்டார்” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114325

ஏழாம் உலகம்- கடிதம்

  ஏழாம் உலகம் மின்னூல் வாங்க ஏழாம் உலகம் வாங்க   அன்புள்ள ஆசானுக்கு ,   நலம் தானே ? ஏழாம் உலகம்  நாவல் வாங்கி 6 மாதத்திற்கு மேல் ஆகியும் படிக்காமல்  ஒத்திப் போட்டுக்கொண்டு வந்தேன்   இன்று தான்  படித்து  முடித்தேன். படித்து முடித்தவுடன் மனதில் சொற்களால் சொல்ல முடியாத ஒரு வெறுமை .   எல்லா  பாத்திரங்களும் நாவலை ஒரு ஒரு திசை நோக்கி  விரித்தபடியே உள்ளன. ஏழாம் உலகில் வாழும்  இம்மனிதர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114224

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45

ஒவ்வொரு திசையிலிருந்தும் போர்ச்செய்திகள் வந்துகொண்டிருந்தன. கடோத்கஜன் பிரக்ஜ்யோதிஷத்தின் படைகளை மத்தென கலக்கிக்கொண்டிருந்தான். முன்னூறு பேர் கொல்லப்பட்டுவிட்டனர். பகதத்தனுக்கும் கடோத்கஜனுக்கும் நேர்ப்போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பகதத்தன் மூன்று முறை எறிகதை வீச்சுக்கு ஆளானார். கவசங்கள் உடைந்து பின்னடி வைத்து செல்கிறார். அவருக்குத் துணையாக துச்சாதனனும் துரியோதனனும் செல்கிறார்கள். துரியோதனனின் கதைக்குமுன் நிற்கவியலாமல் கடோத்கஜன் பின்னடைகிறான். போரின் விசை கூடக்கூட கடோத்கஜனின் பின்னிலிருந்து திருஷ்டத்யும்னனின் ஆணை அழைத்து காத்தது. அர்ஜுனனை ஜயத்ரதனும் அஸ்வத்தாமனும் சேர்ந்து எதிர்கொள்கிறார்கள். அம்புக்கு அம்பென நிகழ்கிறது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114281