Daily Archive: October 22, 2018

வெண்முரசு புதுவை கூடுகை – 20 ( அக்டோபர் 2018)

அன்புள்ள நண்பர்களே ,   வணக்கம் ,  நிகழ்காவியமான  “வெண்முரசின்   மாதாந்திர  கலந்துரையாடலின்  தொடர்ச்சி  20 வது   கூடுகையாக  “அக்டோபர்  மாதம் ”  25 -10-2018  வியாழக்கிழமை அன்று  மாலை  6:00 மணி  முதல்  8:30 மணி  வரை  நடைபெற இருக்கிறது  அதில்  பங்கு  கொள்ள  வெண்முரசு  வாசகர்களையும்  , ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன்  அழைக்கிறோம் .   கூடுகையின்  பேசு பகுதி  வெண்முரசு  நூல் வரிசை 2   (மழைப்பாடல்) பகுதி 17 புதிய காடு , 82 முதல் 88 வரையிலான   பதிவுகள்   குறித்து  நண்பர்  மயிலாடுதுறைபிரபு  அவர்கள்  உரையாற்றுவார் இடம்:   கிருபாநிதி  அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்”  முதல்  மாடி, # 27, வெள்ளாழர்  வீதி ,  புதுவை -605 001 தொடர்பிற்கு :   9943951908 ; 9843010306

Permanent link to this article: https://www.jeyamohan.in/114314

‘நானும்’ இயக்கம், எல்லைகள்

#me too-இயக்கம் தருண் தேஜ்பால்களும் பெண்களும் ’நானும்’ இயக்கம்-கடிதங்கள் ‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்   ஜெ,   மீடூ இயக்கம் துவங்கியது எங்கு ?   தன் அதிகாரத்தை ,வயதை,பெண்களின் இயலாமையை உபயொக்கித்து பாலியல் மீறல்களில் ஈடுபடுபடும் ஆண்களைப் பற்றி தைரியமாக வெளியே பேச சமூகம் தரும் தைரியம்தானே மிடூ ? பெண் அத்துமீறல்களை வெளியே சொல்லுவதை சமூகம் கேவலமாக பார்ப்பதை தவிர்த்து தைரியம் தரும் இயக்கம்தானே இது ?   மிக அவசியமான இயக்கம் ,பெண்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114202

என்.ராமதுரை -கடிதங்கள்

  அஞ்சலி என்.ராமதுரை அன்புள்ள ஜெ   என் ராமதுரை பற்றிய உங்கள் அஞ்சலிக்குறிப்பை வாசித்தேன். விரிவாகவே நீங்கள் எழுதியிருக்கலாம். நான் ஓர் ஆசிரியன். என் மாணவர்களுக்கு அவருடைய கட்டுரைகளை நகல் எடுத்து வாசிக்கக் கொடுப்பேன். அறிவியலை விந்தை குறையாமல் எளிமையாக அறிமுகம் செய்தவர். அறிவியலுணர்வை ஊட்டுவதற்கு தொடர்ச்சியாக முயற்சி செய்துகொண்டே இருந்தவர். அவருடைய மறைவுக்கு அஞ்சலி   எஸ்.தங்கராஜ்   அன்புள்ள ஜெ   என்.ராமதுரை அவர்களின் அறிவியல்கட்டுரைகளின் வாசகன் நான். அவர் தன் வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114234

ஒரு காஷ்மீர் முற்போக்கு #metoo

  அன்புள்ள ஜெ   இந்தக்கட்டுரையை இன்று வாசித்தேன் . உங்கள் கவனத்துக்காக. பெண்கள் மீதான வன்முறைக்கு முற்போக்கும் பிற்போக்கும் ஒரே நிலையில்தான் உள்ளன. பிற்போக்குக்கு மூடுதிரைகள் ஏதுமில்லை. முற்போக்கினர் கொள்கை, போராட்டம், விடுதலை, சமத்துவம், இறுதி இலக்கு என எதையாவது சொல்லிக்கொள்வார்கள்   கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது. முற்போக்கை நாம் நம்புவோம். ஆகவே அவர்கள் இன்னும் அபாயமானவர்கள். தமிழ்நாட்டிலும் தங்கள் சாதி, தங்கள் கட்சி என்பதனாலேயே எத்தனை ஆதரவுக்குரல்கள், எத்தனை வெறுப்பும் காழ்ப்புமாக பாதிக்கப்பட்டவர்களை இழிவுசெய்கிறார்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114283

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-43

தன்னைச் சூழ்ந்து விழிதொடும் தொலைவுவரை நிகழ்ந்துகொண்டிருந்த போரை நோக்கியபடி சகுனி அசைவிழந்து தேர்த்தட்டில் நின்றார். நாரை மெல்ல சிறகுவிரித்து அலகுநீட்டி முன்னால் சென்றது. மீன் அதை எதிர்கொண்டது. எப்பொழுதுமே படைகள் எழுந்து போர் நிகழத்தொடங்கி அரைநாழிகைக்குப் பின்னரே அவர் தேரை கிளப்புவது வழக்கம். முதல்நாள் போருக்கு முன்பு இரவில் படைசூழ்கை வகுக்கும் சொல்லாடல்கள் முடித்து தன் பாடிவீட்டுக்கு திரும்பும்போது அவர் மிகவும் களைத்திருந்தார். உள்ளம் வெறும் சொற்களால் நிரம்பி கொந்தளித்துக்கொண்டிருந்தது. அதன் எடையை தாளமுடியாததுபோல் இடையும் கால்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114248