Daily Archive: October 18, 2018

சித்தர்பாடல்களைப் பொருள்கொள்ளுதல்

நாத்திகமும் தத்துவமும் கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் – கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு மந்திர மாம்பழம் அன்புள்ள ஜெ.,     சித்தர் பாடல்கள்  படித்திருப்பீர்கள்.  சில  பாடல்கள் மேலோட்டமாகப் பார்த்தால்  நாத்திகவாதம்  போலவே  தோன்றும். “சாத்திரங்கள் ஓதுகின்ற ச ட்டநாத பட்டரே  வேர்த்திரைப்பு  வந்த போது வேதம் வந்து உதவுமோ” போல.  நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம்பிள்ளையின்  “இலக்கிய இன்பம்”  படித்தேன். “சித்தத்தை  நிறுத்தி  சிவத்தைக்”  காணும்  தாயுமானவரின் பின்னணியில்  குதம்பைச்  சித்தரின் இரண்டு  பாடல்களை அலசியிருந்தார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113907

ஆத்மாநாம் விருதுகள் விழா

  கவிஞர் ஆத்மா நாம் நினைவாக கவிதை மொழியாக்கம் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டுவரும் விருதுகள் இம்முறை கவிஞர் போகன் சங்கர், கார்த்திகைப் பாண்டியன் அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு அளிக்கப்படுகின்றன. விழா வரும் அக்டோபர் 20 அன்று சென்னையில் நிகழகிறது. சிறப்பு அழைப்பாளராக சந்திரகாந்த் பாட்டீல் அவர்கள் கலந்துகொள்கிறார்

Permanent link to this article: https://www.jeyamohan.in/114081

யானைடாக்டரின் நிலம்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,     சில நாட்களுக்கு முன் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தேன்.  மணற்பரப்பு எங்கும்  உடைந்த பாட்டில்கள் மற்றும்  காலி  மது புட்டிகள்.  தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும்  கடற்கரைக்கு   இந்த நிலைமை.  இதை  பார்த்தவுடன் யானை டாக்ட்ர் கதை நினைவுக்கு வந்தது.  காலணி இல்லாமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். மக்களுக்கு, மருத்துவமனை இருக்கின்றது.  பாவம்  யானைகள்..   சிவா, நன்னிலம்     அன்புள்ள ஜெ   சென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113921

பாலாஜி பிருதிவிராஜ் -கடிதங்கள்

ஓநாயின் தனிமை தாமஸ் மன்னின் புடன்புரூக்ஸ் விண்விளி- கிறிஸ்துவின் இறுதிச்சபலம் டாக்டர் ஷிவாகோ – பாலாஜி பிருத்விராஜ் அன்புள்ள ஜெ   தமிழில் மிக அரிதாகவே உலக இலக்கியம் பற்றி காத்திரமாகக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. பொதுவாக இங்கே எழுதப்படும் கட்டுரைகள் பெயர் உதிர்ப்புகள். அதைப்போல வருமா என்றவகையான மேட்டிமைப்பார்வைகள். கதைச்சுருக்கங்களைச் சிலர் எழுதுவதுண்டு. நம்பி கிருஷ்ணன் சொல்வனம் இதழில் எழுதிவரும் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. மற்றபடி பெரிதாக உலக இலக்கிய அறிமுகம் ஏதுமில்லை என்றுதான் சொல்வேன். முன்பு அசோகமித்திரன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114019

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-39

கவசப்படையை வெறிக்கூச்சலுடன் முட்டி பிளந்து அவ்வழியினூடாக பாய்ந்து மறுபக்கம் சென்ற சாத்யகி ஒருகணம்தான் நோக்கினான். அசங்கனின் நெஞ்சில் அம்பு பாய்ந்த கணம், பிற ஒன்பதின்மரையும் அது உள்ளடக்கியிருந்தது. தலையை திருப்பிக்கொண்டு சொல்நின்ற உள்ளத்துடன் நடுங்கினான். சூழ்ந்திருந்த படைவெள்ளம் அலையென வளைந்தெழுந்து அவன் தலைக்குமேல் சென்றது. பின்னர் நினைவு எழுந்தபோது படைப்பிரிவுகளுக்கு உள்ளே தேர்தட்டிலிருந்து இறக்கி அவனை கீழே மண்ணில் படுக்க வைத்திருந்தார்கள். முகத்தில் விழுந்த நீரின் சிலிர்ப்பில் அவன் இமைகள் அதிர்ந்தன. வானுடைந்தது என பெருகிக்கொட்டும் அருவியொன்றின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114054