Daily Archive: October 14, 2018

சிரிக்காத புத்தர்

  சித்தார்த்தன் என்ற பெயருடன் இணைந்து நம்மனதில் தியானத்தின் பேரமைதியில் உறைந்த புத்தரின் முகம் நினைவுக்கு வரும். உலகப்புகழ் பெற்ற ஜெர்மனிய படைப்பிலக்கியவாதியான ஹெர்மன் ஹெஸி’க்கு அந்த தியான நிலையை எட்டுவதற்காகப் புத்தர் கடந்து வந்த நீண்ட பாதை நினைவுக்கு வந்தது போலும். ஞானத்திற்கான தேடலின் தவிப்பையும் தத்தளிப்பையும் மையப்படுத்தக்கூடிய நாவல் அவருடைய `சித்தார்த்தா’. திரிலோக சீதாராம் அவர்களால் காவியச்சாயல் கொண்ட நடையில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த நூலின் முதல் பதிப்பு தமிழில் 1957ல் வெளிவந்தது. பிறகு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9255

தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்

ஜெ அவர்களுக்கு     வணக்கம்..   நலமா?   தல்ஸ்தோய் உரை கேட்டேன்.. மிகச் சிறப்பான உரை.. உங்களுடைய உரைகள் நிறைய கேட்டிருக்கிறேன்… ஆனாலும், இந்த உரை மனதை தொட்டுவிட்டது. அன்னா கரீனினா மற்றும் புத்துயிர்ப்பு வாசித்திருக்கிறேன்.. தன்னறம் பற்றிய ஒரு கூர் ஆய்வை என் மனதுக்குள் நிகழ்த்திய உரை.. நெஹ்லூதவ் மற்றும் லெவின் வழியாக அறச்சிந்தனையை விவரித்தீர்கள்.. சிறிய அரங்கில் நிகழ்ந்த உரை என்றாலும், என் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த உணர்வு.. இணையத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113939

எம். கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி வாசிப்பனுபவம் 

  மனைமாட்சி  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட ஜெயகாந்தனின் கதைகள் ஒரு காலகட்டத்தை பிரதிபலித்தது. சமகால சமூக சூழலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணின் உடல் வேட்கை குறித்து தீர்மானிப்பவள் அவள் மட்டும் தானா அல்லது அவள் குடும்பம் முதல் சமூகம் வரை அனைத்தும் அதில் மூக்கை நுழைக்குமா தனி மனித சுதந்திரம் என்பது பெண்ணை பொறுத்தவரை ஆணைக் காட்டிலும் அதிகமான வரையறைக்கு உட்பட்டது தானா அடுத்த தலைமுறையை உருவாக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113932

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35

பாண்டவப் படைமுகப்பில் பூரிசிரவஸ் தன் தேரில் அமர்ந்து எதிரே எழுந்த செவிநிறைத்துச் சூழும் முழக்கத்தை கேட்டான். “எதிர் வருகிறது யானை நிரை! நேர்கொள்க! யானை நிரை! எதிரில் யானைப்படை!” என்று முரசுகள் ஒலித்தன. பூரிசிரவஸ் தன் கழையனிடம் கைகாட்ட அவன் கணுக்கழையில் தொற்றி மேலேறி அணிலென அதே திசையில் தலைகீழாக கீழிறங்கி குதித்து “நூற்றெட்டு யானைகள் ஒற்றைத்தண்டு கொண்டு வருகின்றன” என்றான். “பதினெட்டு தண்டுகள் எழுந்துள்ளன.” பூரிசிரவஸ் “ஒற்றைத்தண்டா?” என்று திகைத்த மறுகணமே அதை உளத்தால் கண்டான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113984