Daily Archive: October 13, 2018

முதல்தந்தையின் மீட்சி

வரலாற்று ஆளுமைகளைப்பற்றி மட்டுமல்ல வரலாற்றைப்பற்றி எழுதும்போதே முதன்மையாக எழுந்துவரும் சிக்கலென்பது துருவப்படுத்திக்கொள்ளுதல் என்பதுதான். ஏற்கனவே சொல்லப்படும் கோணத்தை அப்படியே மீண்டும் உணர்ச்சிகரமாக விரித்து எழுதுவது ஒரு பாணி. பெரும்பாலும் இது வணிக எழுத்தின் வழிமுறை. இந்தியச் சுதந்திரப்போராட்டம் பற்றி எழுதப்பட்ட கல்கியின் அலையோசை, மகுடபதி அகிலனின் பெண்,நெஞ்சின் அலைகள் போன்ற நாவல்களை உதாரணமாகச் சுட்டலாம்.   மாறாக இலக்கியச் சூழலில் இருந்து எழுதவருபவர்கள் சொல்லப்படாத கோணத்தை முன்வைக்கவேண்டுமென்று எண்ணுவார்கள். ஆகவே மறு எல்லை எடுப்பார்கள். விடுபட்டவை, மறைக்கப்பட்டவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113874

‘நானும்’ இயக்கம் -கடிதங்கள்

#me too-இயக்கம் ’நானும்’ இயக்கம்-கடிதங்கள் அன்புள்ள ஜெ , நலமா ?     இ்ன்று metoo பற்றிய உங்கள் பதில் படித்தேன் , இதில் நிரந்தர தீர்வு வருவதற்கு இனி வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது , ஆண்களின் பார்வையில் பெண்  அணைத்து இடங்களிலும் வெற்று உடலாக மட்டுமே பார்க்கப்படுவது வேதனைதான் …   என்வரையில் இந்த உடல் ஒரு பெரும் சிறை , இதை சுமந்துகொண்டு நான் தாண்டி ஓடிய தூரம் கொஞ்சமில்லை ,பெண் எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114024

கட்டணக் கேட்டல் நன்று !

  கட்டண உரை –ஓர் எண்ணம் அண்ணன் ஜெயமோகனுக்கு,   நெல்லையில்  நவம்பர் 10ம் தேதியன்று நடைபெற இருக்கும் கட்டண இலக்கியக்  கூட்டம் வெற்றிபெற முதலில் வாழ்த்துகள்… தேர்ந்த  வாசக ரசனைகளாலும் , அது சார்ந்து கட்டமைக்கப்படும் நண்பர் வட்டங்களாலும் , தெளிந்த தீர்க்கமாய் அலசலும் ஆராய்தலும் நீண்ட தொடர்தேடலின் கனமான பயணமாய் விவாதிக்கப்படக்கூடிய – அதன் வழி செழுமையான இலக்கியப் பிறத்தலுக்கும் தொடக்கத்திற்கும்  அடித்தளம் அமைக்கக்கூடிய , உரைகளின் வாசஸ்தலமாகிய விஷ்ணுபுரம் மற்றும் அது போன்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/114029

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-34

கௌரவர்களின் யானைப்படை பன்னிரண்டாவது பிரிவின் முகப்பில் சசக குலத்து யானைவீரனாகிய கம்ரன் தன் படையின் தலைப்பட்டம் ஏந்திச்சென்ற சுபகம் எனும் முதுகளிற்றின்மீது அமர்ந்திருந்தான். சுபகம் போர்க்களங்களில் நீடுநாள் பட்டறிவு கொண்டிருந்தது. எனவே படைநிரை அமைந்ததுமே முற்றிலும் அமைதிகொண்டு செவிகளை வீசியபடி தன்னுள் பிறிதொரு உடல் ததும்புவதுபோல் மெல்ல அசைந்து நின்றது. அதன் உடலிலிருந்த கவசங்கள் அவ்வசைவுகளால் ஒன்றுடன் ஒன்று மெல்ல உரசிக்கொண்டு அலைமேல் நின்றிருக்கும் படகில் வடங்களும் சுக்கானும் ஒலிப்பதுபோல மெல்லிய ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன. கம்ரன் தனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113975