Daily Archive: October 11, 2018

கட்டண உரை –ஓர் எண்ணம்

  நான்காண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது உரைகளுக்குக் கட்டணம் வைப்பதைப்பற்றிச் சொன்னேன். உரைகேட்க வருபவர்கள் ஒரு கட்டணத்தைச் செலுத்தி நுழையவேண்டும். அதற்கு உடனடியாக எதிர்ப்பு வந்தது. அது ஒரு வகை அத்துமீறல் என்ற கருத்து உருவானது. பலர் ஆவேசமாக அது எழுத்தாளரின் நன்மதிப்பைக் குறைக்கும் என்றனர்.   என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என அவ்வெண்ணத்தை குழுமத்தில் இட்டேன். அங்கும் பெரும்பாலானவர்கள் ஒவ்வாமையையே குறிப்பிட்டார்கள். அவர்களின் உணர்வுகளை இப்படி தொகுத்துக்கொள்கிறேன்.   அ. எழுத்து, பேச்சு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113966

குடும்பத்திலிருந்து விடுமுறை -கடிதம்

குடும்பத்தில் இருந்து விடுமுறை அன்புள்ள ஜெ நலமா? நான் நலம். ‘குடும்பத்தில் இருந்து விடுமுறை’ கட்டுரை வாசித்தேன். #ஆனால் ஒருவேளை அதெல்லாம் தப்போ, சரியான குடும்பத்தலைவிகள் அப்படியெல்லாம் இருக்கக்கூடாதோ என்ற சந்தேகம் காரணமாக.# இந்தச்  சந்தேகம் எந்தப் பெண்ணையும் விட்டுவைப்பதில்லை போலும். தப்பித்தவறி யாராவது ஒருத்திக்கு இச்சந்தேகம் இல்லாமலிருந்தாலும் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது சொல்லி அதை விதைத்துவிடுகிறார்கள். ஆரம்பத்தில் நானும் இப்படித்தான். ஒருவிதமான குற்ற உணர்வு வந்து பாடாய்படுத்திவிடும். இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் வீட்டில் இல்லாதபோது கணவரும் குழந்தைகளும் என்னைப் பெரிதாக எதிர்பார்க்காமல் இயல்பாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113969

ஸ்டெல்லா புரூஸ் -கடிதங்கள்

  ஸ்டெல்லா புரூஸின் அப்பா   அன்புள்ள ஜெயமோகனுக்கு,   வணக்கம்.   நீங்கள் ஸ்டெல்லா புரூஸ் பற்றி எழுதியதைப் படித்தவுடன் எனக்குத் திகைப்பாகப் போய்விட்டது.  ஒரு எளிமையான மனிதர் தேவையில்லாமல் தற்கொலை செய்து கொண்டு விட்டாரே என்ற வருத்தம் எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும்.  ஸ்டெல்லா புரூஸ் மரணத்தைப் போல் எனக்கு வருத்தம் தந்த இன்னொரு மரணம் பிரமிள் மரணம்.  ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல் வறுமை ஒரு காரணம் இல்லை அவர் மரணத்திற்கு.   எளிமையான வாழ்க்கை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113872

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-32

பகுதி ஐந்து : கனல்வோன் போர்ச்சூழ்கையை வகுப்பதற்காக துரியோதனனின் சிற்றவை முற்புலரியில் கூடியிருந்தது. கிருதவர்மன் தன் உடலெங்கும் சோர்வு படர்ந்து எடையென அழுத்துவதை உணர்ந்தான். பஞ்சால் ஆன தன்னுடல் துயிலெனும் நீரால் நனைக்கப்பட்டு ஊறிக் குழைந்து வடிவிழந்து எடைகொண்டு மண்ணில் அழுந்துவதாகத் தோன்றியது. பிறிதெப்போதும் கைவிரல்களில்கூட துயில் வந்து நின்றிருப்பதை அவன் உணர்ந்ததில்லை. அவையிலிருந்த அனைவருமே துயிலால் அழுத்தப்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் தோன்றியது. அவர்களில் சிலரே பேசிக்கொண்டிருந்தனர். நனைந்த மரவுரியால் மூடப்பட்டவைபோல அந்தச் சொற்கள் முனகலாக ஒலித்தன. அவனருகே அஸ்வத்தாமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113947