Daily Archive: October 10, 2018

ஒருதுளி இனிமையின் மீட்பு

  முதல்தொகுதியுடன் அறிமுகமாகும் எழுத்தாளர்களில் இருவகையினரைப் பார்க்கிறேன். முதல்வகையினர், இவர்களே பெரும்பான்மையினர், ஏற்கனவே வணிகஇதழ்களில் எழுதப்பட்டிருக்கும் படைப்புகளில் ஊறியவர்கள். அந்தச் சூழல் உருவாக்கும் புனைவுமொழிக்குள் அவர்களின் கதைகள் எழுதப்பட்டிருக்கும். இரண்டாம் வகையினர் தங்களுக்கென எழுதுவதற்கு மெலிதாகவேனும் ஓர் அனுபவமண்டலத்தைக் கொண்டவர்கள். அதைவெளிப்படுத்துவதற்கான மொழியையும் வடிவையும் தேடித் தத்தளிப்பவர்கள். இலக்கியமுன்னோடிகளில் சிலருடைய மொழியையும் வடிவையும் தங்களுக்கு அணுக்கமானதாக உணர்ந்து அவர்களைப் பின் தொடர்கிறார்கள்.   முதல்வகையினர் பெரும்பாலும் ஏற்கனவே சொல்லப்பட்ட கதைக்கருக்களை ஆர்வமூட்டும் கதைக்கட்டுமானத்துடன் சற்றே வேறான கோணத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113862

அரூ

  வணக்கம்! நாங்கள் சிங்கையிலிருந்து சுஜா, பாலா, ராம். சிங்கை காவிய முகாமில் உங்களைச் சந்தித்திருக்கிறோம். கனவுருப்புனைவை மையப்படுத்தி “அரூ” என்கிற தமிழ் மின்னிதழைத் துவங்கியுள்ளோம். அரூ ‘அரூபத்தின்’ சுருங்கிய வடிவம். முடிவிலா காலமும், வெளியுமற்ற பரப்பில் பறந்து திரிகிற அரூபமான மனித மனம்தான் அத்தனை மொழிகளையும், கலைகளையும், தத்துவங்களையும், உருவங்களையும் நமக்குத் தருவித்துத் தந்திருக்கிறது. தெரிந்த வடிவங்களின் எல்லைகளுக்குள் பயணிப்பதன் ஊடாக, அரூபத்தின் தரிசனத்திற்கான தேடல்தான் இந்த அரூ. நனவுலகின் விளிம்பில் நின்றபடி, கனவுலகிற்குள் கைவிட்டுப் பார்ப்பதைப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113950

’நானும்’ இயக்கம்-கடிதங்கள்

  #me too-இயக்கம்   அன்புள்ள ஜெ   இந்தச் செய்தியை கவனித்திருப்பீர்கள் என நினைக்கிறேன் https://tamil.samayam.com/latest-news/state-news/vairamuthu-faces-sexual-harassment-allegations/articleshow/66129555.cms உண்மையா பொய்யா, நிரூபிக்கமுடியுமா என்பதெல்லாம் இன்றைக்கு பிரச்சினை அல்ல. இப்படிச் சொல்லப்படும்போது அப்படியெல்லாம் கண்டிப்பாக இருக்காது என்ற நம்பிக்கை எவருக்குமே வருவதில்லை என்பதைக் கவனியுங்கள். சொல்பவர் எவரென்று தெரியாமலேயே அது உண்மை என்று அத்தனைபேருக்கும் தெரிகிறது.   இந்தமாதிரி ஓர் இயக்கம் இப்போது வருவது தவிர்க்கவே முடியாது. பெண்கள் வேலைக்குச் சென்றது ஐம்பதாண்டுகளுக்கு முன்பு. அப்போது அது மிக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113955

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-31

பீமனும் துரியோதனனும் புரிந்த போரை மிக மெல்ல அனைவரும் அசைவிழந்து கதைகள் நிலம்தாழ நின்று நோக்கலாயினர். அவர்கள் ஓர் ஆற்றின் இரு கரைகளெனத் தோன்றினர். ஒருவர் பிறிதொருவர் என இடம் மாறினர். ஒருவர் உடலின் அசைவே பிறிதொன்றிலும் உருவாகியது. மிக மெல்ல பஞ்சென, மலரென காலடி எடுத்து வைத்து மூக்கு நீட்டி மயிர்சிலிர்த்து அணுகி நிலமறைந்து ஓசையெழுப்பியபடி பாய்ந்து ஒன்றோடொன்று அறைந்தும் தழுவியும் விழுந்து புரண்டு எழுந்து மீண்டும் அறைந்து போரிடும் வேங்கைகளின் போரென்றிருந்தது அது. பின்னர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113800