மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நான் ஊடகத்துறையில் வேலை பார்க்கிறேன். இன்று எங்கள் அலுவலகத்தில் இந்த செய்தியை விவாதித்துக்கொண்டிருந்தோம் – https://www.thenewsminute.com/article/indian-medias-metoo-begins-women-journos-call-out-sexual-harassers-newsrooms-89548. இப்போது மேலைநாடுகளில் எல்லா துறைப்பெண்களும் பாலியல் தொந்தரவுகளை பற்றி ‘மீ டூ’ (#metoo) என்ற பெயரில் பேசத்தொடங்கியிருக்கிறார்கள். இந்தியாவில் அதன் அலை தொடங்கியுள்ளதாக இந்தச்செய்தி குறிப்பிடுகிறது. இந்த செய்தியில் பல பெண்கள் பதிவுசெய்த இடர்களை என் வேலையிடத்தில் நானும் சந்தித்திருக்கிறேன். அந்த வகையில் இப்படிப்பட்ட செய்திகள் வெளியாவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விவகாரங்களை பற்றி பொதுவில் பேசமுடியாத …
Daily Archive: October 9, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/113802
பொருளியல் கட்டுரைகள் -கடிதம்
1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, பாலா அவர்களின் கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியைத் தந்தன. ஒரு பருந்துப் பார்வை என்று சொல்லி 1965, 75 மற்றும் 83-களில் நிகழ்ந்த ‘irreversible high growth’ என்று அவர் பட்டியலிட்டது மிகுந்த நம்பிக்கையை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113937
மாந்தளிரே -கடிதங்கள்
மாந்தளிரே! அன்புள்ள ஜெ நான் உங்களுடைய மாந்தளிரே என்ற கட்டுரையை வாசித்ததும் நினைத்துக்கொண்டது இது. இந்தப்படங்களை இப்போது பார்த்தால் தாளமுடியவில்லை. அவற்றின் காட்சியமைப்புகள் பழசாகிவிட்டன என்பது ஒரு காரணம். உண்மையில் நான் சின்னவயசில் வியந்து பார்த்த ஸ்பார்டகஸ், டென் கமாண்ட்மெண்ட்ஸ் போன்ற படங்களே இப்போது சின்னப்பிள்ளைவிளையாட்டுமாதிரி தெரிகின்றன. ஆனால் பாடல்கள் இப்போதும் உயிருடன் இருக்கின்றன ஏன்? சினிமாவும் கலைதானே? சினிமா ஃபிலிமில் உள்ளது. ஃபிலிம் பழசாகிவிடுகிறது. ஆனால் அதுமட்டும் காரணம் இல்லை. …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113810
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-30
கிழக்கே புலரியை அறிவிக்கும் முரசொலி எழுந்ததும் சிலிர்த்து, செவி முன் குவித்து, முன்கால் தூக்கி பாய ஒருங்கும் படைப்புரவியென தன்னில் விசை கூட்டியது பாண்டவப் படை. கதையை வலக்கையால் பற்றியபடி சுதசோமன் மூச்சை இழுத்து மெல்ல விட்டு தன்னை ஆற்றிக்கொண்டான். “எழுக! எழுக! எழுக!” என முரசுகள் அதிரத்தொடங்கியதும் “வெற்றிவேல்! வீரவேல்!” எனும் பேரோசையுடன் பாண்டவப் படை எழுந்து கௌரவப் படையை நோக்கி சென்று விசை அழியாது முட்டி ஊடுகலந்தது. எத்தனை பழகிய ஓசையாக அது உள்ளதென்று …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113782