Daily Archive: October 8, 2018

விஷ்ணுபுரம் விழா நன்கொடை

  நண்பர்களே 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதுவிழா வரும் டிசம்பர் 22, 23 தேதிகளில் நிகழவிருக்கிறது. இலக்கியக் கோட்பாட்டாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு விருது அளிக்கப்படுகிறது. இந்த விருது ஆரம்பம் முதலே அணுக்கமான நண்பர்களின் நிதியுதவியால் நிகழ்ந்து வருகிறதென அறிவீர்கள். வாசகர்கள், நண்பர்கள் கூடி செய்யும் நிகழ்வாக இது இருக்கவேண்டும் என்னும் எண்ணம் எப்போதும் இருந்தது சென்ற சில ஆண்டுகளாக விழா பெருகி இன்று இரண்டுநாள் இலக்கியத் திருவிழாவாகவே ஆகிவிட்டிருக்கிறது. கிட்டத்தட்ட இருநூறுபேர் இரண்டுநாள் தங்கி பங்கேற்கும் விழா. ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113913

குடும்பத்தில் இருந்து விடுமுறை

  கணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்?’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான். அரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் சொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித்து ”அங்க தங்கறதுக்கு ரூம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/4816

1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா பொது 1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா   2004 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்னும் பெயரில் ஆட்சியமைத்தன. 1991 ஆம் ஆண்டு, நரசிம்மராவ் ஆட்சியில், பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் துவங்கி வைத்து, நிதியமைச்சராகவும், வர்த்தக அமைச்சராகவும் இருந்த மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், முறையே பிரதமராகவும், நிதியமைச்சராகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113789

சிலுவைராஜ் சரித்திரம் பற்றி

ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு மதத்தின் போதாமையைக் கண்டு அதனை விட்டுவிட்டவர்களின் உள்ளம் மீண்டும் எதையும் எழுதுவதற்கு தயாரான தூய பலகையைப் போல் ஆகிவிடுகின்றது. சிலுவைக்கு மேலதிகமாக எப்படி போனாலும் அவனது சாதியின் அடையாளம் விடாமல் தொக்கி நிற்கிறது. தொமினிக் சாவியோவின் மீது மிகுந்த பக்தி கொண்டு விரதங்களை கடுமையாக அனுசரிக்கும் சிலுவை தனக்கு விருப்பமான விளையாட்டைக் கூட துறக்கிறான். மதரீதியாக ஒருவன் போய்விடும் போது அதுவும் பதின்ம வயதில் அதன் எல்லைக்கே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113797

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29

சுதசோமன் தன் புரவியில் அமர்ந்து ஆணைகள் இடுவதற்குள்ளாகவே புரவி கிளம்பிச்சென்றது. அவன் எண்ணத்தை உடலசைவிலிருந்தே அது உணர்ந்தது. சீர்நடையில் பாதையின் பலகை வழியாக சென்றான். குளிரலைகள் பரவியிருந்த முற்காலையில் பாண்டவப் படை போருக்கு ஒருங்கிக்கொண்டிருந்தது. மேலே விடிவெள்ளி விழுந்துவிடும் என நின்றிருந்தது. விளக்குகளின் நிழல்கள் ஆடின. வீரர்கள் கவசங்கள் அணிந்துகொண்டும், படைக்கலங்களை தேர்ந்துகொண்டும், உணவருந்திக்கொண்டும் இருந்தனர். போர் என்னும் கிளர்ச்சி அமைந்து அது நாள்கடன் என ஆகிவிட்டதுபோல மிக மெல்லவே ஒவ்வொன்றும் நிகழ்ந்துகொண்டிருப்பதாக அவனுக்கு தோன்றியது. ‘தோற்றுக்கொண்டிருக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113770