Daily Archive: October 6, 2018

ஸ்டெல்லா புரூஸின் அப்பா

  அன்புள்ள ஜெ.,   சமீபத்தில் ஸ்டெல்லா ப்ரூஸ் (இயற்பெயர் ராம் மோகன். ஜெயகாந்தனின் “ஞான ரதம்” பத்திரிகையில் வேலைசெய்யும் பொழுது கூட வேலைசெய்த பாலியல் பலாத்காரத்தால் இறந்த ஒரு மாற்றுத் திறனாளிப் பெண்ணின் நினைவாக ஸ்டெல்லா ப்ரூசானவர்.) எழுதிய ஒரு கட்டுரையில் அவருடைய அப்பாவைப் பற்றி எழுதியிருந்தார். அவருடைய தாத்தா மிகப்பெரும் செல்வந்தர்.  தன்னுடைய மூத்த தாரத்து பிள்ளைகளுக்கு சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்து விடுதலைப்பத்திரம் வாங்கிக் கொள்கிறார் அடுத்த கல்யாணத்திற்காக. இவருடைய தந்தைக்கு நிறைய சொத்து வந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113744

நூல்களை அனுப்புதல் -கடிதம்

    நூல்களை அனுப்புதல்… அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம்  அறிய ஆவல். உங்களுக்கு இருக்கும் எழுத்து வேலையில் இது நினைவில்  இல்லாமல் இருக்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், தங்களின் ‘அறம்’ நூலை வாங்கி பதினைந்து பேருக்கு அன்பளிப்பாக கொடுத்ததாக கடிதம் எழுதினேன். நீங்களும் எனக்குப்பதில் எழுதியிருந்தீர்கள். எனக்கு நீண்ட நாட்களாக,யார் யார் எப்படி படித்தார்கள், என்னவிதமான விமர்சனம் செய்தார்கள் என்று எழுதவேண்டும் என்று நினைப்பேன். அப்படி இப்படி என்று  நாட்கள் ஓடி விடுகிறது.  இன்று, எழுத்தாளர்கள் நண்பர்களுக்கு நூல் அனுப்புதலைப்பற்றிய கட்டுரையை தங்கள் பக்கத்தில் வாசித்ததும், ஒரு தூண்டுதலில் இதை எழுதுகிறேன். அதுவும் உங்களின் இந்த வாக்கியம் என்னை மிகவும் ஆதர்சமாகத் தொட்டது.  “அது ஓர் அன்புப்பரிசு, ஓர் அறிவுப்பரிமாற்றம். பல தருணங்களில் அதைவிடவும் மேல். அதை எவருக்கு எப்படி அளிக்கவேண்டும் என்பது உங்கள் அகத்தால் நீங்கள் முடிவுசெய்யவேண்டியது.” நான், அறம் நூலை அன்பளிப்பாக கொடுக்க தேர்வு செய்த அனைவருமே ஒருவகையில்வாசிப்பவர்கள் என்ற அனுமானத்தில்தான்  கொடுத்தேன். அறம்  முழு புத்தகத்தையும் படித்தவர்கள் என்று பார்த்தால், எட்டு நபர்கள்  தான். அறம் புத்தகத்தை என்னிடம் அன்பளிப்பாக பெற்ற சில நண்பர்களின் பெற்றோர்கள் அமெரிக்காவிற்கு வந்திருந்தபொழுது , …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113740

டால்ஸ்டாய் உரை

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   உங்களது தொடர்ந்த வாசகனாகவும் உங்கள் மீது பெருமதிப்பும் அன்பும் கொண்டவன் என்ற முறையிலும்  டால்ஸ்டாயின் அன்னா கரீனா நாவலை படித்த எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .   இந்த நாவலை படித்து முடித்தவுடன் நீங்கள் ருஷ்ய கலாச்சார மைய்யத்தில் பேசிய டால்ஸ்டாய் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளித்தது.   நாவல்கள் மூலம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வாசகர்களுக்கு மனித வாழ்க்கையின் மாண்பையும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113742

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27

பகுதி நான்கு : களியாட்டன் மருத்துவநிலை நாளுக்குநாள் விரிந்து குறுங்காட்டுக்குள் புகுந்து பரவியிருந்தது. கைக்கு சிக்கிய அனைத்துப் பலகைகளாலும் ஏழடுக்காக படுக்கைகளை அமைத்திருந்தனர். உடைந்த தேர்தட்டுகளும் மூங்கில் துண்டுகளும் காட்டிலிருந்து வெட்டி கொண்டுவரப்பட்ட மரத்துண்டுகளும் சேர்த்து கட்டி அவை உருவாக்கப்பட்டன. ஆயினும் மருத்துவநிலையின் மையத்திலிருந்து மருத்துவர் நெடுந்தூரம் சென்று நோக்கவேண்டிய அளவிற்கு அது விரிந்தபோது தலைமை மருத்துவராகிய சுதேஷ்ணர் அதை மூன்று பகுதிகளாக பிரித்தார். மூன்றுக்கும் வெவ்வேறு மருந்துக்கருவூலத்தையும் மருத்துவர் நிரைகளையும் ஏவலர்த் தொகுதிகளையும் காவலர் அணியையும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113701