நேற்று முன்நாள் இங்கே பேசிக்கொண்டிருந்தபோது காரூர் நீலகண்டபிள்ளை எழுதிய சிறுகதை ஒன்றைப்பற்றிப் சொன்னேன். கொச்சுக்ரஹஸ்த. சின்ன குலமகள் என மொழியாக்கம் செய்யலாம். நான் அதை வாசித்து நாற்பதாண்டுகள் ஆகியிருக்கும். பத்தாம் வகுப்பு படிக்கும்போது மலையாளம் எழுதப்படிக்கத் தெரிந்ததுமே வாசித்த கதை. அன்று என்னை ஒரு தெய்வம் வந்து ஆட்கொண்டதுபோல அக்கதை எடுத்துக்கொண்டது மிக எளிய கதை. ஒருவன் வியாபார நிமித்தமாக அயலூர் ஒன்றுக்குச் செல்கிறான். தங்குமிட வசதிகள் இல்லாத காலம். மழை வேறு வருகிறது. பசியும் இருக்கிறது. …
Daily Archive: October 4, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/113703
நரசிம்மராவ்- கடிதங்கள்
நரசிம்மராவ் -நடைமுறைவாதத்தின் அரசியல் ஜெ இந்த புத்தகத்தை பற்றி உங்கள் எழுத்தும் விமர்சனமும் மிக சிறப்பாக இருந்தது. பல திறவுகள். தலைவர்கள் , இலட்சியவாதிகள் என.நீங்கள் சொன்ன இரைட்டை பட்டியலில் ஊழல் மற்றும் குடும்ப அரசியல் நீக்கினால் கலைஞர் கருணாநிதி யை சேர்த்து கொள்ளலாம் என்பது என் எண்ணம். நரசிம்மராவை காங்கிரசிஸ் தலைமை நடத்திய விதம் வருந்தத்தக்கது. அதேபோல் அவர் தான் தமிழ் நாட்டில் தவறான கூட்டணி அமைத்து காங்கிரசின் அடுத்த முறைக்கான வாய்ப்பை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113693
வாசிப்பில் ஓர் அகழி- குறித்து…
வாசிப்பில் ஓர் அகழி ஜெ, வணிக எழுத்து பற்றிய சீனுவின் கடிதம் கண்டேன். நானும் அதை யோசித்திருக்கிறேன். இன்று வணிகக் கலை வழியாக ஒருவர் தீவிரக் கலைக்கு வந்து சேர வழியில்லை என்றே நினைக்கிறேன். இரண்டு காரணங்கள். ஒன்று, வணிகக் கலை அலுத்துப் போகும் போதுதான் ஒருவர் தீவிரக் கலையை தேடத் துவங்குகிறார். இந்த அலுப்பு தோன்ற தொடர் வாசிப்பு நிகழ வேண்டியிருக்கிறது. ஒரு எழுத்தாளரின் படைப்புகளை அல்லது ஒரு வகைப்பாட்டு [genre] நூல்களை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113691
‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-25
கொந்தளிக்கும் படை நடுவே அலையில் எழுந்தமைந்து சுழன்றுகொண்டிருந்த அபிமன்யூவின் வலப்பக்கம் பின்காப்போனாக தேரில் வில்பூண்டு நின்றிருந்தான் பிரலம்பன். சாத்யகி அபிமன்யூவின் தேரிலேறி அதை பின்னால் ஓட்டிச்சென்று படைகளில் ஆழ்த்தி நிறுத்தியபின் பாய்ந்திறங்கி மீண்டும் தன் தேரிலேறிக்கொண்டதும் அவன் தேரிலிருந்து இறங்கி அபிமன்யூவை நோக்கி ஓடினான். நேர் எதிராக திருப்பப்பட்டு புரவிகள் கால்விலக அசைவிழந்த தேரிலிருந்து பாய்ந்திறங்கிய அபிமன்யூ “இன்னொரு தேர்! இன்னொரு தேர் கொடுங்கள் எனக்கு!” என்று கூவினான். பிரலம்பன் அவன் அருகே சென்று கைகளைப்பற்றி “தாங்கள் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/113643