Daily Archive: September 28, 2018

வாசிப்பில் ஓர் அகழி

இனிய ஜெயம் , அமிஷ் நாவல்கள் குறித்த வினாவுக்கு உங்களது பதில் வாசித்தேன் . அதில் ஒரு விளங்காத இடம் கிடந்தது உறுத்திக்கொண்டே இருக்கிறது . எந்த ஒரு பெஸ்ட் செல்லரும் தன்னளவில் ஒரு வாசிப்பு இயக்கத்தை உருவாக்குகிறது .அதன் படி பார்த்தால் உங்களது தேவை டான் ப்ரௌன்கள் கட்டுரையில் நீங்கள் சொன்னபடி, சேத்தன் பகத்தையும், டான் ப்ரௌனையும் ஒரு நூறு பேர் வாசிக்கும் நிலை இருந்தால்தான் அதிலிருந்து நுண்ணர்வு கொண்ட பத்து பேர் , ஓரான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113075

அகம்

பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கும் இந்திய -ராக் இசைக்குழு அகம் அமைத்த பாடல்கள். மிகச்சிறந்த மரபிசைக்குரல்கள் உருவாக்கும் அதே அகக்கொந்தளிப்பையும் அமைதியையும் இப்பாடல்கள் உருவாக்குவது ஆச்சரியமானதுதான். ஹரீஷ் சிவராமகிருஷ்ணனின் குரல் அற்புதமானது          

Permanent link to this article: https://www.jeyamohan.in/113353

பெருங்கனவின் வெளி

கொற்றவை வாங்க     கருமை ஔிகொண்டு நீலமாவதைப் போல இந்தநாவல் வாசிப்பிற்கு பிறகு நம் அறியாமைக்குள் ஒருஔி விரிகிறது.காலாதீதத்தை உணரும் ஒரு தருணம்.இயற்கையின் முன் நாம் கட்டியெழுப்பியவைகள் மீது வியப்பும்,ஆர்த்தமின்மையும் ஒரே நேரத்தில் எழுகிறது. இந்தவயதில் பற்று குறைவது குறித்து சிந்திக்கையில், தமிழ் என்னும் பேருண்மை வந்து அணைத்து இயற்கையை,வாழும் கணம் என்ன என்பதன் பொருளை சொல்லித்தர தொடங்குகிறது.மொழி அன்னையாகும் தருணம்.அவள் தருவது வாழ்வென்னும் அமுதம்.     கொற்றவை – ஒரு விமர்சனம்  பெருங்கனவின் வெளி

Permanent link to this article: https://www.jeyamohan.in/113123

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19

முற்புலரியில் கடோத்கஜன் அணிந்தொருங்கி கிளம்பியபோது ஒரே தருணத்தில் வியப்பும் ஏமாற்றமும் அசங்கனுக்கு ஏற்பட்டது. இடையில் அனல்நிறப் புலித்தோல் அணிந்து, தோளில் குறுக்காக இருள்வண்ணக் கரடித்தோல் மேலாடையை சுற்றி, கைகளிலும் கழுத்திலும் நீர்வண்ண இரும்பு வளையங்கள் பூட்டி, தலையில் செங்கருமையில் வெண்பட்டைகள் கொண்ட பெருவேழாம்பல் சிறகுகள் சூடி அவன் சித்தமாகி வந்தான். வானம் பின்னணியில் விண்மீன்களுடன் விரிந்திருக்க மயிரிலாத அவனுடைய பெரிய தலை முகில்கணங்களுக்குள் இருந்தென குனிந்து அவனை பார்த்தது. அசங்கன் உடல்மெய்ப்பு கொண்டான். சற்றுநேரம் அவனுக்கு குரலெழவில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113234