Daily Archive: September 26, 2018

அழகியபெரியவன்,நூறுநாற்காலிகள், தலித்தியம்

  சாதியம் மேலும் கூர்மை அடைந்திருக்கிறது- அழகிய பெரியவன் பேட்டி   அன்புள்ள ஜெமோ அழகியபெரியவனின் இந்தப்பேட்டியைப்பற்றி உங்கள் கருத்து என்ன? குறிப்பாக இதில் நூறுநாற்காலிகளைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் கருத்தால்தான் இதைக்கேட்கிறேன். ஏற்கனவே இன்னொரு தலித் எழுத்தாளரும் இதைச் சொல்லியிருக்கிறார். இதிலுள்ள பல வரிகளை தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். தலித் அல்லாதவர்கள் தலித் வாழ்க்கையை எழுதினால் அது இரட்டைவேடமாகவே அமையும் என்பது ஒரு கருத்து. எழுத்தில் நேரடியாக அப்பட்டமாக ஒரு குரல்தான் இருக்கவேண்டும் என்பது இன்னொரு குரல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113516

உணர்ச்சியும் அறிவும்

      அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஸ்வப்னா பர்மன் தங்கம் வென்ற தருணத்தில் அவரது தாயாரின் மனநிலையை ப்ரதிபலிக்கும் காணொளியின் சுட்டியை இணைத்துள்ளேன். ஒரு அன்னையின் தியாகங்களை, சரணாகதியின் மகத்துவத்தை, பராசக்தியின் விளையாட்டை, பக்திமார்க்கம் என்பதை ஒரே நிமிடத்தில் இந்த காணொளி விளக்குகிறதோ என தோன்றுகிறது. நான் என்னை ஞானமார்க்கம் என்றே நினைக்கின்றேன் . ஆனால் சில திரைப்பட காட்சிகளில், இது போன்ற காணொளிகளில் என்னையும் மீறி ஏதோ ஒன்று பொங்கி , தொண்டையை அடைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113170

பனிமனிதன் -கடிதங்கள்

. பனிமனித வாங்க பனிமனிதன் மின்னூல் வாங்க அன்புள்ள ஜெ.. எந்த ஒரு நூலையும் நாம் தேர்ந்தெடுப்பதில்லை..ஒரு நூல்தான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என நம்புகிறேன். கடினமான நூல்கள் என்பதால் சிலவற்றை படிக்காமல் வைத்திருப்போர் உண்டு. உங்களது பனி மனிதன் நாவல் , சிறுவர் நாவல் என சொல்லப்பட்டதால் , எளிதான நாவல் என்று நினைத்து இத்தனை நாள் படிக்கவில்லை.. நேற்றுதான் படித்தேன் . உண்மையில் என்னைப் பொருத்தவரை இதுதான் அதை படிப்பதற்கு உகந்த காலம் என நினைத்துக்கொண்டேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113164

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17

விண்மீன்கள் விரிந்த வானின் கீழ் விளக்கொளிகளாக அரச ஊர்வலம் வருவது தெரிந்தது. சுடர்கொண்ட கொடிகள் நுடங்கின. மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் அணுகிவந்தன. தொலைவில் வெண்குடையின் கின்னரிகள் நலுங்கிச் சுழன்றன. நின்று கண்கூர்ந்து “வருவது யார்?” என்று கடோத்கஜன் கேட்டான். “தங்கள் பெரிய தந்தை, இந்திரப்பிரஸ்தத்தின் அரசர்” என்றான் அசங்கன். “அவரை மிக மெலிதாக நினைவுகூர்கிறேன்” என்று கடோத்கஜன் சொன்னான். “குழவிப்பருவத்தில் நான் அவரை கண்டதுண்டு… உடன் தந்தை வருகிறாரா?” என்றான். “ஆம் என்று எண்ணுகின்றேன்” என்றான் அசங்கன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113207