Daily Archive: September 25, 2018

குளிர்ப்பொழிவுகள்- 4

    குளிர்ப் பொழிவுகள் -1 குளிர்ப்பொழிவுகள் – 2 குளிர்ப்பொழிவுகள் – 3 பயணத்தின் கடைசிநாள். எங்கள் பயணங்களில் வழக்கமாக உள்ள விதிகளில் ஒன்று காலை 6 மணிக்கே கிளம்பிவிடுவது. அது இப்பயணத்தில் பெரும்பாலும் நிகழவில்லை. பயணிகளின் எண்ணிக்கை மிகுதியாகும்தோறும் அது இயல்வதில்லை. அத்துடன் பெரும்பாலான நாட்களில் நாங்கள் செல்லவேண்டிய இடம் சற்றுத்தொலைவிலேயே இருந்தது. ஆகவே பொதுவாக எட்டுமணிக்குத்தான் கிளம்பிக்கொண்டிருந்தோம். இன்று ஆறுமணிக்கு கிளம்பியாகவேண்டும் என்று கிருஷ்ணன் அடம்பிடித்தார். ஆறரை மணிக்கு கிளம்பிவிட்டோம் எல்லாப்பூரில் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113479

காடு-முடிவிலாக் கற்பனை

  காடு அமேசானில் வாங்க காடு வாங்க   எழுபத்தியொரு வயது கொண்ட முதியவர், தன்னுடைய பதினெட்டு வயதில் தான் கண்ட மிளா ஒன்றையும், அழியாமல் பதிந்து போன அதன் கால்த்தடம் கொண்டு தன் மனதின் அடியாழத்தில் பெருகிக் கொண்டிருக்கும் இளம்பிராயத்தையும் நினைவுகூறத் தொடங்குகிறார். கிரிதரன் எனும் முதியவரிடம் இருந்து ஆரம்பமாகிறது காடென்னும் பேரனுபவம்   காடு – ஜெயமோகன் நாடோடி

Permanent link to this article: https://www.jeyamohan.in/113131

நிலவில் முகம்

இனிய ஜெயம் நேற்று மாலை  இலக்கியக் கூடல் .நந்திக்கலம்பகம் மீது உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த போது ஒரு குறுஞ்செய்தி . நிலவில் ஸ்ரீடி சாயிபாபா முகம் தெரிகிறது .உடனடியாக சென்று தரிசியுங்கள் . இதுவே தகவல் . பொதுவாக ஸ்ரீடி சாயிபாபா சமீப காலங்களில் மிகுந்த புகழ் பெற்று வருகிறார் . எனது நண்பர் சென்ற ஆண்டு  அவரது வீட்டை பாபா கோவிலாக மாற்றிய வகையில் இப்போது செல்வத்தில் கொழித்துக்கொண்டு இருக்கிறார் . மக்களுக்கு அவ்வப்போது ஏதேனும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113511

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16

அசங்கன் மூச்சுவாங்க விரைந்தோடிச் சென்று அரக்கர்நிரைமுன் வந்தவன் அருகே சிற்றுருவாக நின்று தலைவணங்கி “வணங்குகிறேன் மூத்தவரே, தாங்கள் இடும்பவனத்தின் அரசர் கடோத்கஜர் என்று எண்ணுகிறேன். நான் ரிஷபவனத்தின் சாத்யகரின் சிறுமைந்தனும் யுயுதானரின் முதல் மைந்தனுமான அசங்கன்” என்றான். கடோத்கஜன் முழு உடலாலும் புன்னகை புரிந்தான். கரிய உதடுகள் அகல பெரிய பற்கள் பளிங்குப் படிக்கட்டுகள்போல விரிந்தன. “நான் இடும்பவனத்தின் காகரின் சிறுமைந்தனும் பாண்டவர் பீமசேனரின் மைந்தனுமாகிய கடோத்கஜன்” என்று சொல்லி வணங்கி அவன் தோளில் கைவைத்து “இந்திரப்பிரஸ்தத்தின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113139