Daily Archive: September 20, 2018

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா

1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. 1980 களின் இறுதியில், இந்தியாவில் அந்நியச் செலாவணிச் சிக்கல்கள் துவங்கியிருந்தன.1989-90 ஆம் ஆண்டுகளில் நிலவிய அரசியல் குழப்பங்களும், 1990 ஆம் ஆண்டு நடந்த குவைத் போரும், 1991 ஆம் ஆண்டுத் தேர்தலில் நிகழ்ந்த ராஜீவ் காந்தியின் கொலையும், அந்தச் சிக்கலை மேலும் பெரிதாக்கின. 1991 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில், காங்கிரஸ் தனிபெரும் கட்சியாக, ஆனால் பெரும்பான்மையில்லாத கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ் ஆட்சியின் பிரதமராக, நரசிம்ம ராவ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113298

மதுரையும் கடலும்

அன்புநிறை ஜெ, நலமாக இருக்கிறீர்களா. திசைதேர் வெள்ளம் முழு  சீற்றத்துடன் தொடங்கியிருக்கிறது. அதைக் குறித்து தனியாக எழுதுகிறேன். இன்று அவசர அலுவலாக மதுரை வந்தேன், நாளை இரவே சிங்கை திரும்புகிறேன். குமரி நில நீட்சி (சு.கி.ஜெயகரன்) வாசித்தபடி பயணம். கடல் கொண்ட மதுரைகளை வாசித்த போது கொற்றவை நினைவில் எழுந்தது. இம்முறை சிங்கையிலிருந்து நேரடியாக மதுரை செல்லும் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்தேன். இலங்கை திரிகோணமலைக்கு வடக்கே நுழைந்து வவுனியா வழியாக மன்னார்-ராமேஸ்வரம் வரை நீலமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113158

நம்பிக்கை -கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ நம்பிக்கையூட்டும் சில வாழ்க்கைகளைப்பற்றி வாசித்தேன். உண்மையிலேயே மிகப்பெரிய மனநிறைவு ஏற்பட்டது. நமக்கு இங்கே காணக்கிடைப்பவர்கள் இரண்டு வகையானவர்கள். காரியத்திலே கண்ணாக இருக்கும் திருடர்கள். இன்னொருபக்கம் வெறுமே ஆற்றாமையும் கோபமுமாக வசைபாடிக்கொண்டிருக்கும் கையாலாகாதவர்கள். முகநூல் வந்தபின் வெற்றுச்சவடால்களை வாசிப்பது அன்றாட வாழ்க்கையாகவே ஆகிவிட்டது மெய்யாகவே எதையாவது செய்யும் நண்பர்களை பற்றி தெரிந்துகொள்வது மிக அபாரமான மனநிறைவை அளிக்கிறது. இந்த நாளே நிறைவடைந்ததுபோல் இருக்கிறது. ஏற்கனவே சிலரை இங்கே அறிமுகம் செய்திருந்தீர்கள். தண்டபாணி என்ற அறிவியல் அறிஞர், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113181

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-11

கதிர் மேற்றிசை அமைந்து களம் ஒடுங்குவதை அறிவிக்கும் பெருமுரசுகள் ஒன்றிலிருந்து ஒன்றென தொடுத்துக்கொண்டு திசை எல்லைவரை முழங்கி விரிந்தன. படைக்கலங்கள் தாழ்த்தப்படும் அசைவு அலைகளாக சூழ்ந்து செல்வதை பார்க்கமுடிந்தது. வேல்களையும் விற்களையும் ஊன்றி உடல் தளர்ந்து தலை தாழ்த்தி நின்றனர் வீரர்கள். தெய்வம் மலையேறிய வெறியாட்டர்களைப்போல. பெரும்பாலானவர்கள் மண் நோக்கி விழுந்தனர். சிலர் முழந்தாளிட்டு அமர்ந்தனர். தேரிலோ புரவியிலோ பற்றிக்கொண்டு சாய்ந்தனர். நெடுந்தொலைவு ஓடி நீர் கண்ட புரவிகளைப்போல நீள்மூச்சுவிட்டனர். பயனிழந்த படைக்கலங்கள் ஓசையிட்டபடி உறைகளிலும் தேர்த்தட்டுகளிலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113018