Daily Archive: September 19, 2018

வெண்முரசு புதுவை கூடுகை

      அன்புள்ள நண்பர்களே , வணக்கம் .   நிகழ்காவியமான  “வெண்முரசின்  19 வது   கலந்துரையாடல் ” செப்டம்பர்   மாதம்   20-09-2018  வியாழக்கிழமை  அன்று  நடைபெற   இருக்கிறது .  அதில்  பங்குகொள்ள  வெண்முரசு வாசகர்களையும் , வெண்முரசு  குறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன்புடன்   அழைக்கிறோம்..     இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி   வெண்முரசு நூல் 2 மழைப்பாடல்   பகுதி 16:  இருள்வேழம்     78 முதல் 81 வரையுள்ள  பகுதிகளைக் குறித்து  ,நண்பர் மணிமாறன் அவர்கள்  உரையாற்றுவார்.     நாள்: 20-09-2018 வியாழக்கிழமை  மாலை 6 மணி முதல் 8.30 வரை.   இடம்:   கிருபாநிதி அரிகிருஷ்ணன்,     “ஸ்ரீ நாராயணபரம்”, முதல்மாடி, எண் 27, வெள்ளாழர் வீதி, புதுச்சேரி 605001 தொடர்புக்கு :   9943951908 ; 9843010306. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113365

ஒரே கரு, இரு ஆசிரியர்கள்

  அன்புள்ள ஜெ இந்தக்கட்டுரையை இணையத்தில் வாசித்தேன். சு.வேணுகோபாலின் கதை கி.ராஜநாராயணனின் பேதை கதையை தழுவி எழுதப்பட்டது என்கிறார். இதைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன? ராஜேஷ் தழுவவலா பாதிப்பா? உமையாழ் அன்புள்ள ராஜேஷ் அந்த கட்டுரை ஒர் இலக்கிய விவாதத்தின் தொடக்கம் என்னும் வகையில் நல்லதுதான். ஆனால் அதன் ஒரு வரி கொஞ்சம் பிழையானது. இப்படி ஒரு கதையில் முந்தைய கதையின் சாயல் இருப்பதைக் கண்டதுமே சு.வேணுகோபால் மீதான மதிப்பு இல்லாமல் போயிற்று என எழுதியிருக்கிறார். இது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113100

புல்வெளிதேச மானுடர்

“ இதுவரை எமது மண்ணில் இருந்து பெரிதளவு செல்வத்தை எடுத்தீர்கள். அதிலிருந்து சிறிது பணத்தை இந்த உண்டியலில் போடுங்கள் “ என்ற வார்த்தை ஆதிவாசிகளின் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றபோது கதவருகே உள்ள கண்ணாடி உண்டியலில் அருகே ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. வார்த்தைகளின் வலிமையை உணர்ந்தேன். அந்தக் கூர்மையான சொற்கள் என்னிதயத்தில் ஆழமாகத் தைத்தது.   ஆஸ்திரேலியாவின் பழங்குடிப்பின்னணி குறித்து நோயல் நடேசன் எழுதிய பதிவு அவுஸ்திரேலிய ஆதிவாசி இளைஞனுடன் ஒரு நாள்

Permanent link to this article: https://www.jeyamohan.in/113021

நம்பிக்கை, ஸ்டாலின் கடிதம்

தன்மீட்சி இயற்கைக் கடலைமிட்டாய் செயல்படுவோர் அளிக்கும் மீட்பு   அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, உங்களிடம் இருந்து ஆறு நாட்களுக்கு முன் இருந்து வந்த கடிதத்தை அது வந்த சேர்ந்த சூழலை மறக்க முடியாது.உங்கள் கடிதத்தின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் திரும்ப திரும்ப வாசித்து அதற்கு உண்மையாக இருக்க எங்களை தயார் செய்து கொள்கிறோம். ஆகப்பெரிய மனநம்பிக்கையும், செயல்தீவிரமும் பெற்றுக்கொண்டுஉள்ளோம்.கொஞ்சம் பயமும் கூச்சமும் கலந்த மனநிலையாக உள்ளது.இதனை பெரிய உதவியாக நன்றியாக நினைக்கிறோம். உங்களின் அத்தனை வாசகர்கள்,நண்பர்கள் தொலைபேசி மற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113245

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-10

யுயுத்ஸு அபிமன்யூவின் தேரை அமரத்தில் அமர்ந்து செலுத்திக்கொண்டிருந்தான். பீஷ்மரின் அம்புபட்டு தேர்த்தட்டில் விழுந்த அர்ஜுனனை கேடயப்படை காப்பாற்றி அழைத்துச் சென்றுவிட்டிருந்தது. “தடுத்து நிறுத்துக… பிதாமகரை தடுத்து நிறுத்துக… சூழ்க! சூழ்க!” என திருஷ்டத்யும்னனின் முரசொலி ஆணையிட்டது. அபிமன்யூ தேர்த்தட்டில் நின்று கூச்சலிட்டும் வெறிகொண்டு தேர்த்தூண்களை கால்களால் உதைத்தும் வில்லைச் சுழற்றி தேரில் அறைந்தும் கொப்பளித்துக்கொண்டிருந்தான். “செல்க! செல்க! அவர் முன் சென்று நிற்கவேண்டும். இத்தருணமே! இப்போதே!” என்று கூச்சலிட்டான். அவனில் கொந்தளிக்கும் உணர்வென்ன என்று யுயுத்ஸுவால் புரிந்துகொள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113006