Daily Archive: September 18, 2018

மெய்த்தேடலும் அரசியல்சரிகளும்

  அரசியல்சரிநிலைகள் அன்புள்ள ஜெ இந்தியாவின் மிகச்சிறந்த ஆய்வுநிறுவனங்களில் ஒன்றில் விஞ்ஞானியாக இருக்கும் எனது நண்பர் இந்த பதிவை எனக்கு அனுப்பிவைத்தார் .ஜார்ஜியா தொழிநுட்ப பல்கலையில் கணித பேராசிரியராக இருக்கும் டெட் ஹில் பரிணாம வளர்ச்சி தொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதுகிறார் .அறிவுஜீவிகளும் சரி ,அடிமுட்டாள்களும் சரி ஆண்களிடையே அதிகமாக இருக்கிறார்கள் .ஆனால் பெண்களிடையே அதிகம் இல்லை .பேராசிரியர் இவ்வாறு கூறுகிறார் //Darwin had also raised the question of why males in many …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113125

விமர்சனமும் வரலாறும் உரை

யாவரும் பதிப்பகமும் மலேசியாவின் வல்லினம் இதழும் இணைந்து சென்னை இக்ஸா மையத்தில் 16-09-2018 அன்று நிகழ்த்திய நூல்வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை.  ம.நவீன் எழுதிய மீண்டு நிலைத்த நூல்கள் என்னும் நேர்காணல்களின் தொகுதியை வெளியிட்டு நான் பேசினேன்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/113314

தல்ஸ்தோய் உரை- கடிதங்கள்

அன்புடன் ஆசிரியருக்கு டால்ஸ்டாய் உரை கேட்டேன். நான் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பல அக இடர்பாடுகளுக்கு ஏற்கனவே என்னிடம் தீர்வுகள் இருந்ததுதான் என்னை இந்த அளவிற்கு அலைகழிக்கிறதோ என்று எண்ண வைத்தது இவ்வுரை. புத்துயிர்ப்புக்கு பிறகு டால்ஸ்டாயை வாசித்து ஓராண்டுக்கு மேலாகப் போகிறது. வெண்முரசை வெகுதீவிரமாக வாசித்து கொண்டிருந்த அதே காலத்தில் தான் நீங்கள் இவ்வுரையில் குறிப்பிட்ட டால்ஸ்டாயின் அனைத்துப் படைப்புகளையும் வாசித்திருக்கிறேன். அவை அளித்த தரிசனத்தின் மதிப்பினை இவ்வுரை தெளிவாகச் சுட்டியது. மறுபடியும் டால்ஸ்டாயை வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113296

ஈர்ப்பு- விவாதம்

  ஈர்ப்பு ஈர்ப்பு இரு எதிர்வினைகள் ஈர்ப்பு- கடிதங்கள் ஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும் அன்புள்ள ஜெ ஈர்ப்பு கதை எனக்கு அ.முத்துலிங்கத்தின் ‘கொழுத்தாடு பிடிப்பேன்’ கதையை நினைவுபடுத்தியது. அதிலும் கதைசொல்லி பாலியல் குற்றம் செய்துவிட்டு சிறையில் இருக்கிறான், நடந்தவற்றை தனக்கும் மற்றவர்களுக்கும் மாற்றிச் சொல்லிக்கொள்கிறான். அக்கதையில் இறுதி வரிகளில்தான் அந்த மாற்றிச்சொல்லுதல் புலனாகிறது. கதைசொல்லி தந்திரமானவனா இல்லை பரிதாபத்துக்குரிய கேலிச்சித்திரமா என்ற கேள்வி மறுவாசிப்பிலும் தொக்கி நிற்கிறது. அந்த ‘எடைபோடமுடியாமை’ தான் பிரதான அம்சம், அப்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113294

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-9

சுஜயன் இரண்டாம்நாள் போரின் முதல் தருணமே பீஷ்மரும் அர்ஜுனனும் அம்புகோத்துக்கொள்வதாக அமையுமென்று எண்ணியிருந்தான். நாரையின் அலகை பருந்தின் அலகு கூர் கூரால் என சந்திக்கும் தருணம். புலரியிலேயே அத்தருணத்தை உளம்கண்டுகொண்டுதான் அவன் எழுந்தான். கவசங்களணிந்து தேரிலேறுகையில் பலமுறை அவன் உள்ளத்தில் அது நடந்துவிட்டிருந்தது. ஆனால் முரசொலித்து படைமுகப்புகள் சந்தித்துக்கொண்டபோது நாரையின் நீள்கழுத்து சவுக்குபோல வளைந்து சுழன்றது. அதன் அலகுமுனை மிக அப்பால் பருந்தின் இடச்சிறகில் இருந்த கிருபரை நோக்கி சென்றதை அவன் கண்டான். பீஷ்மரை திருஷ்டத்யும்னனின் ஏழு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112988