Daily Archive: September 17, 2018

எழுத்தாளரின் பிம்பங்கள்

அன்புள்ள ஜெயமோகன், நான் அவனில்லை பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நான் அந்தக்கட்டுரையைப் பற்றி நண்பர்களிடம் நிறைய பேசிக்கொண்டிருந்தேன். பலவகையான கருத்துக்கள் உங்களைப்பற்றி உருவாகி வந்தன அந்தப்பேச்சில். ஆனால் ஓர் இடதுசாரி நண்பர், ஒருவிஷயம் சொன்னார். கொஞ்சம் வயதானவர் அவர். இப்போது இடதுசாரி சார்பு இல்லை. அவர் சொன்னார் இப்போது உங்களைப்பற்றி  இடதுசாரிகளும் உங்கள் எதிரிகளும் சொல்லும் எல்லாவற்றையும் முன்பு சுந்தர ராமசாமியைப்பற்றியும் சொல்லியிருக்கிறார்கள் என்று. அவர் ஒரு கட்டுரையைக் குறிப்பிட்டார். இலங்கையைச் சேர்ந்த டேனியல் ஜீவா என்பவர் எழுதியது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113260

நகல்

  அன்புள்ள ஜெ, “குற்றமும் தண்டனையும்” நாவல் வாசிப்பை ஒட்டி இணையத்தில் தஸ்தாவெய்ஸ்கி பற்றிய கட்டுரைகளை தேடி படித்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக இப்பதிவு கண்களில் தட்டுப்பட்டது. http://praveenbalasubramanian.blogspot.com/2018/04/blog-post.html?m=1 ஆம். “தஸ்தாவெய்ஸ்கியை நிராகரித்தல்” என்கிற தலைப்பில் உங்கள் தளத்தில் வெளியான எனது கடிதமேதான். நபர் யாரென்று தெரியவில்லை. தன்னிலை முன்னிலையை மட்டும் மாற்றி சொந்த கட்டுரைப் போல் பிரசுரித்திருக்கிறார். இதை கண்டதும் உடனடியாக கோபமோ அதிர்ச்சியோ ஏற்படவில்லை; குழப்பம்கூட இல்லை; முகம் முழுக்க நிறையும் புன்னகையே தோன்றியது.  இப்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113240

தல்ஸ்தோய் உரை

15-09-2018 அன்று தல்ஸ்தோயின் 190 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை ருஷ்யக் கலாச்சார மையத்தில் நிக்ழ்ந்த விழாவில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு. தல்ஸ்தோய் – அறமும் ஒழுக்கமும்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/113291

சென்னை தல்ஸ்தோய் விழா

தல்ஸ்யோயின் 190 ஆவது பிறந்த நாளை ஒட்டி விஷ்ணுபுரம் அமைப்புடன் இணைந்து ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய விரும்புவதாக ருஷ்யக் கலாச்சார மையத்தில் இருந்து விருப்பம் தெரிவித்தனர். நான் மலேசியா நவின் எழுதிய நூல்களின் வெளியீட்டுவிழா 16 -9-2018 அன்று நிகழவிருந்தது. ஆகவே 15 ஆம் தேதி இவ்விழாவை வைத்துக்கொள்ளலாம் என்று ராஜகோபாலன் சொன்னார் சென்னைக்கு 15 ஆம் தேதி காலை வந்தேன். வழக்கமான விடுதியில் அறை. என்னுடன் ஜிஎஸ்வி நவீன் என்னும் இளம் நண்பரும் வந்திருந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113302

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-8

கௌரவப் படையின் பருந்துச்சூழ்கையின் அலகுமுனை என விஸ்வசேனரால் செலுத்தப்பட்ட பீஷ்மரின் தேர் நின்றிருந்தது. அதைச் சூழ்ந்திருந்த நூற்றெட்டு தேர்வில்லவரும் ஆயிரத்தெட்டு பரிவில்லவரும் கொண்ட அணுக்கப்படை பருந்தின் நெற்றியிறகு என வகுக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வில்லவர்களில் ஒருவனான சுஜயன் தன் நிழல் நீண்டு களத்தில் விழுந்திருப்பதை நோக்கியபடி நின்றான். அவன் கையிலிருந்த வில்லின் நிழல் கரிய நாகம்போல் நெளிந்து கிடந்தது. அவன் அம்பை தூக்கி நிழலில் பார்த்தான். அது கூர்கொண்டிருக்கவில்லை. அதனால் ஒரு இலைக்குருத்தைக்கூட கிழிக்க முடியாது. அவன் புன்னகைத்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112899