Daily Archive: September 16, 2018

ஈர்ப்பு – கதைவடிவமும் பார்வையும்

ஈர்ப்பு ஈர்ப்பு- கடிதங்கள் அன்புடன் ஆசிரியருக்கு இந்த விவாதத்தை நானும் கவனிக்கிறேன். இக்கதை இரண்டு விதமான எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது. சிறந்த வாசகர்கள் என்று நான் எண்ணும் பலர் இக்கதையை அதன் வடிவத்திற்கென்றே புதிய முயற்சி நல்ல கதை என்றெல்லாம் சொல்கின்றனர். இந்த வடிவம் காரணமாகவே இது சிறுகதை போலவே இல்லை. ஏதோ காழ்ப்பு நிறைந்த புலம்பலைத் தொகுத்தது போல உள்ளது என்றும் விமர்சிக்கின்றனர். அப்படி விமர்சிக்கிறவர்களிலும் நான் அறிந்த நல்ல வாசகர்கள் உண்டு.எப்படி இருந்தாலும் கதை மீதான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113249

கலாமோகனின் நிஷ்டை

அன்புடன் ஆசிரியருக்கு நலமா? கலாமோகனின் நிஷ்டை சிறுகதை தொகுப்பை கிண்டிலில் கொண்டு வந்திருக்கிறோம். ஒருசில நாட்கள் நூலினை இலவசமாகக் கிடைக்கச் செய்திருக்கிறோம். இது நூலினைப் பெறுவதற்கான சுட்டி கலாமோகனின் நிஷ்டை சில நண்பர்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் தொகுப்பை எதற்காக கிண்டிலில் கொண்டு வருகிறாய் என்று கேட்டனர். சில நாட்களுக்கு முன் நண்பர் கணேஷ் பெரியசாமி எனக்கொரு கிண்டில் ரீடரை பரிசாக வழங்கினார். மிக விரைவாக நூல்களை வாசிக்க முடிகிறது. மேலும் இரவு எத்தனை மணிவரை வாசித்தாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113008

குரியனும் சில எண்ணங்களும்

போற்றப்படாத இதிகாசம் -பாலா   திரு ஜெயமோகன்,   இன்றுதான் நான் உங்கள் தளத்தில் குரியன் அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன். தமிழில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நல்ல டிரிப்யூட்களில் ஒன்று அது. மிகச்சிறப்பாக உள்ளுணர்ந்து எழுதியிருக்கிறார் போற்றப்படாத இதிகாசம் -பாலா   இந்தியச்சூழல்களில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது மிகமிகக் கஷ்டம்.ஏனென்றால் இங்கே உள்ள பிரச்சினைகள் மிகச்சிக்கலானவை. என் சொந்த அனுபவத்தில் சிலவற்றைச் சொல்கிறேன். மக்கள் அறிவுஜீவிகளையோ மேலிருந்து வருபவர்களையோ நம்ப மாட்டார்கள். ஏனென்றால் இங்கே வெள்ளைக்காரன் ஆட்சிக்காலம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113044

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-7

‘போர் என்பது போர் மட்டுமே’ எனும் சொல் எத்தொடர்பும் இன்றி சித்ராங்கதரின் உள்ளத்தில் எழுந்து ஊழ்கநுண்சொல்லென மீண்டும் மீண்டும் ஒலித்தது. போர் என்பது போர் மட்டுமே. இழப்பு அல்ல, இறப்பு அல்ல, வெற்றியோ தோல்வியோ அல்ல, துயரமும் களிப்பும்கூட அல்ல, போர் மட்டுமே. போருக்கெனவே அது நிகழ்கிறது. போரென்று மட்டும் நிகழ்கிறது. போரென்று மட்டுமே எஞ்சுகிறது. பிறிதொன்றல்ல. போர்க்கலை பயின்ற நாட்களில் ஆசிரியர் உத்தபாகு கூறிய வரி அது. பின் எத்தனையோ முறை அவர் அதை சொன்னதுண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112858