Daily Archive: September 15, 2018

நட்புகள்

  ‘யாரும் திரும்பவில்லை’ அன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா அன்புள்ள ஜெ இப்போதுதான் இந்த இடுகையை முகநூலில் பார்த்தேன். உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. வெளிப்படையாகச் சொல்லப்போனால் நான் உங்கள் மீது பெரிய மதிப்பு கொண்டவன் அல்ல. நீங்கள் உங்கள் நண்பர் அலெக்ஸ் மீது கொண்டிருக்கும் நட்பு, அவருடைய இறப்புக்குப்பின்னும் தொடரும் உதவிகளைப்பற்றி ஒரு நண்பர் சொன்னார். அவர்தான் இந்த இணைப்பை அளித்தார். அரசியல்ரீதியான கருத்துமாறுபாடுகளால் நாம் மனிதர்களைப் பார்ப்பதில்லையோ என்று முதல்முறையாகத் தோன்றியது. நன்றி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113144

காந்தியைப் பற்றி ஒரு நாவல்

இத்தகைய ஒரு கருவை எழுத்தில் வார்க்கும் திறன் மற்றும் துணிவும், ஒரு களத்திற்காக வாசித்து உழைப்பை அளிக்கும் தீவிரமும் சரவணகார்த்திகேயனிடம் இருக்கிறது. இந்த இரண்டு அம்சங்களோடு அவருடைய ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் ஒரு முக்கியமான முயற்சியாக அடையாளம் பெறுகிறது. வருங்காலங்களில் மேலும் பல சுவாரசியமான புனைவுக் களங்களில் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.   அன்னையென ஆதல் – ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை முன்வைத்து எழுத்தாளர் சி.எஸ்.கே. உடன் ஒரு நேர்முகம் – நரோபா

Permanent link to this article: https://www.jeyamohan.in/113104

ஈர்ப்பு இரு எதிர்வினைகள்

ஈர்ப்பு ஈர்ப்பு- கடிதங்கள் பசித்த மானுடத்தின் ஈர்ப்பு-கடிதம் அன்பு ஜெயமோகன், சுரேஷ் பிரதீப் அவர்களின் ஒரு கதையைக் கூட நான் படித்ததில்லை. ஈர்ப்புதான் முதல் கதை. துவங்கியதுமே என்னைச் சிதறடித்த கதை. மிக மிக நுணுக்கமான கதை. கதை குறித்து உங்களுக்கு உடனே எழுத வேண்டும் என நினைத்தேன்; காலந்தாழ்ந்து விட்டது. அதற்குள் ஈர்ப்பு கடிதங்களும் வெளியாகி விட்டன. அக்கடிதங்களைப் படிக்கையில் எனக்கு அபத்தமாகப் பட்டது. ஒரு சிறுகதையைக் கட்டுரையைப் போல அணுகியிருந்த கடிதாளர்களை நான் கோபிக்கப்போவதில்லை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/113251

‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-6

வீரசேனர் விழுந்ததை துஷாரர்களின் கொம்போசையிலிருந்து உத்தர கலிங்க மன்னர் சித்ராங்கதர் அறிந்தார். வீரசேனரின் பாகன் தேர்த்தட்டில் எழுந்து நின்று விழிநீருடன் தன் சங்கை வெறிகொண்டவன்போல் திரும்பத் திரும்ப ஊதினான். சூழ்ந்திருந்த துஷாரப் படையினர் “விண்ணெழுந்த வீரர் வெல்க! துஷார வீரசேனர் நிறைவுறுக! துஷாரச் செங்கோல் நீடுவாழ்க!” என்று வாழ்த்தொலி எழுப்பினர். துஷாரர்களின் படைத்தலைவர்கள் பறைகளையும் கொம்புகளையும் முழக்கி கொடிகளை அசைத்து சிதறி சிறுகுழுக்களாக எஞ்சிய படைகளை ஒருங்கு திரட்டி மேலும் மேலும் பின்னுக்கிழுத்தபடி மையப்படைக்குள் சென்று அமைந்தனர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/112803